உங்கள் பசியை போக்க குறைந்த கார்ப்ஸ் கொண்ட நொறுக்கு தீனி வகைகள்

உங்கள் பசியை போக்க குறைந்த கார்ப்ஸ் கொண்ட நொறுக்கு தீனி வகைகள்

குறைந்த கார்ப்ஸ் கொண்ட உணவுகள் உங்கள் எடை குறைப்பை மேலும் சுலபமாக்க உதவுகிறது என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்ததுதான் .


நாம் செலவழிக்கும் ஒரு நாளைக்கான மொத்த சக்தியில் மூன்றில் ஒரு பங்கு நொறுக்கு தீனி (snacks) உண்பதன் மூலமே நமக்கு கிடைக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.


நொறுக்கு தீனி உண்பது பழக்கமாக மாறிவிட்ட சமூகத்தில் அதனை ஆரோக்கியமான முறைப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைப்பதற்கும் இருக்கும் எடை அதிகரிக்காமல் பார்ப்பதற்கும் அது உதவி செய்கிறது.


முட்டைகள்


முட்டையை வேக வைக்கலாம், ஆம்லெட் செய்யலாம், ஹாஃப் பாயில் செய்யலாம், போச்சேட் செய்யலாம். ஏதோ ஒரு வகையில் நீங்கள் முட்டையை உங்கள் நொறுக்குத்தீனிகள் ஒன்றாக ஆக்கி கொள்ளலாம். முட்டைகள் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களோடு இருப்பவை. ஒரு முழுமுட்டையில் 68 கலோரிகள் சக்தி இருக்கிறது. இதன் மஞ்சள் கருவை ஒரு சிலர் புறக்கணிக்கலாம் ஆனால் மருத்துவர் ஆலோசனையோடு புறக்கணிக்கவும். ஏனெனில் மஞ்சள் கருவில் தான் அதிக சத்து உள்ளது.


ஒரு வாரத்திற்கு 3 அல்லது நான்கு முட்டைகளுக்கு மேல் சாப்பிட வேண்டாம்.


சாரா அலிகானின் எடைக்குறைப்பு ரகசியம் மற்றும் தனது PCOS ஐ அவர் வென்ற விதங்கள்மசாலா பாதாம் பருப்புகள்


ஒரு கிராம் பாதாமில் 5.8 கலோரிகள் கிடைக்கிறது. இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் விட்டமின்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. பாதாமை எடுத்து கொள்வதன் மூலம் உங்கள் வயிறு நிறைந்தது போன்றதொரு உணர்வை அது நீண்ட நேரத்திற்கு கொடுக்க வல்லது. அதுமட்டுமல்ல பாதாமை எடுப்பதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அது தள்ளி வைக்கிறது. மேலும் டைப் 2 சர்க்கரை நோய் , அதிக டாக்சின்களால் ஏற்படும் மன அழுத்தம், மற்றும் உள்ளுறுப்பு வீக்கங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.


ஆகவே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனிக்கு பதிலாக கொஞ்சம் பாதாமை உங்களுக்கு பிடித்த மசாலாக்கள் போட்டு லேசாக வறுத்து உண்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.


Also Read: எடை இழக்க வழிகள் (Ways To Loose Weght)


 சாக்லேட் சியா புட்டிங்


சாக்லேட் சியா புட்டிங் உண்பதற்கு யம்மியானது மட்டுமல்ல செய்வதும் சுலபம்தான். சியா விதைகள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உள்ளுறுப்பு வீக்கங்கள், இன்சுலினை அதிகரிக்க செய்வது , பசியைக் குறைப்பது, ட்ரைக்ளிசரிக் அளவை சரியாக வைத்திருப்பது போன்ற விஷயங்களை செய்கிறது.


இதனை செய்ய ஒரு முழு டம்ளர் கொழுப்பு சத்து நிறைந்த பாலில் நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சியா விதைகளை போட வேண்டும். இதனுடன் சாக்லேட் பவுடரை சேர்த்து நான்கு மணிநேரம் பிரிட்ஜில் வைக்கவும். குடிப்பதற்கு முன்னாள் நீங்கள் இதனோடு நான்கு வாழைப்பழ துண்டுகள் அல்லது சாக்லேட் துருவல்களை சேர்த்துக் கொள்ளலாம்.ப்ராக்கோலி கட்லெட்


ப்ராக்கோலி ஒரு நொறுக்குதீனியின் சுவையை கொடுக்க முடியுமா? நிச்சயமாக. அதனை சரியான விதத்தில் சமைப்பது எப்படி என்பதை பொறுத்தே அதன் சுவை இருக்கும். ஆரோக்கியமான உணவு என்று எந்த அறிமுகமும் இல்லாமலேயே ப்ராக்கோலியின் நன்மைகள் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் விட்டமின்கள் கேன்சர் நோய்க்கு எதிராக போராடக்கூடியது அல்லது கேன்சரை தடுக்கிறது.


இந்த ப்ரோக்கோலி கட்லெட்களை செய்ய தேவையான அளவு ப்ரோக்கோலியை எடுத்து பூக்களையும் தண்டுகளையும் துருவிக்கொள்ள வேண்டும். நான்கு ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் கோதுமை மாவு, கொஞ்சம் உப்பு மற்றும் கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்து பிசறவும். ஒரு தோசைக்கல்லில் ஆலிவ் எண்ணையை கொஞ்சமாக சேர்த்து பிசறி வைத்த ப்ரோக்கோலிகளை வட்டவடிவமாக தட்டி தோசைக்கல்லில் போடவும். இரண்டு புறமும் பொறுமையாக வேக விடவும். உங்கள் ப்ரோக்கோலி கட்லெட் தயார். இதற்கு தொட்டு கொள்ள யோகர்ட் இருந்தால் சிறப்பு.
யோகர்ட் ரைத்தா


இந்திய உணவுகளில் தவிர்க்க முடியாதது இந்த ரைத்தாக்கள். இதனையே ஒரு நொறுக்கு தீனியாக உண்பதன் மூலம் இது உங்கள் ஜீரணத்திற்கு உதவி செய்கிறது மேலும் நிறைய விட்டமின்கள் மினரல்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் அடங்கி இருப்பது இதன் சிறப்பம்சம்.


இதனை செய்ய முழு கொழுப்புள்ள யோகர்டை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனோடு சிறிதாக வெட்டியா வெள்ளரி துண்டுகள், ஒரு சிறு டீ ஸ்பூன் சீரக பொடி சிறிது எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சிலன்ட்ரோ அல்லது கொத்தமல்லி தழைகளை தூவி இதனை அலங்கரிக்கலாம்.


தொப்பையை குறைக்க 10 எளிய உடற்பயிற்சிகள்ஹனி சிக்கன் விங்ஸ்


இன்னும் இரவு உணவிற்கு இரண்டு மணி நேரம் இருக்கிறது ஆனால் இப்போது பசிக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா. அப்படியென்றால் உங்கள் சாய்ஸ் இந்த ஹனி சிக்கன் விங்ஸ்தான். இதனை எப்போதும் வீட்டில்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் இது ஆர்கானிக் தேன் பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும். மேலும் வேறு எந்த கலோரிகள் உள்ள பொருட்களும் இதில் சேர்ந்து விட கூடாது.


4 முதல் 5 சிக்கன் துண்டுகளை 2 ஸ்பூன் சோயா சாஸ் , 2 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் ஆரிகானோ, கொஞ்சம் உப்பு போட்டு ஊற வைக்க வேண்டும். இதனோடு 4 டீ ஸ்பூன் கார்ன் மாவு , ஒரு டீஸ்பூன் பூண்டு பொடி , ஒரு டீஸ்பூன் மிளகு மற்றும் உப்பு இதனை சேர்த்து ஊறவைத்த சிக்கன் துண்டுகளை இதை பிசறி கொஞ்சமாக ஆலிவ் எண்ணையை விட்டு இரண்டு புறமும் தவாவில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.டார்க் சாக்லேட்


உங்களுக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்பது போல தோன்றினால் அதற்கு எப்போதும் டார்க் சாக்லேட் என்பதையே உங்கள் சாய்சாக வைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள அணி ஆக்ஸிடென்ட் மற்றும் ஆன்டி இன்பிளம்மட்டரி மூலக்கூறுகள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் இதயத்திற்கும் நன்மை விளைவிக்கிறது.


ஆனால் ஒரு துண்டு டார்க் சாக்லெட்டிற்கு மேல் அதிகம் சாப்பிட கூடாது. அது அதிகமாக உண்பதால் ஏற்படும் உடல் எடைக்கு காரணம் ஆகிவிடும்.


ஓட்டிற்குள் இருக்கும் பிஸ்தாக்கள்.


ஓட்டுடன் உள்ள பிஸ்தாக்களை உங்கள் கையளவிற்கு எடுத்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் பசி தீரும்வரை சாப்பிடலாம். இதனால் உங்கள் எடை அதிகரிக்காது,நீரிழிவிற்கு எதிராக போராடும், மேலும் நச்சுத்தன்மைக்கு எதிராக வேலை செய்யும் மற்றும் உள்ளுறுப்பு வீக்கங்கள் போன்றவை ஏற்படாது.


அளவுக்கதிகமாக சாப்பிட கூடாத உணவு வகைகள்


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.