மேக்கப் போடாத போதும் எந்த நடிகை ரொம்ப அழகு ??

மேக்கப் போடாத போதும் எந்த நடிகை ரொம்ப அழகு ??

நடிகைகள் மட்டுமல்ல சாதாரண மனிதர்களும் தற்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள சில மேக்அப்களை செய்த பின்னர்தான் வெளியே வருகின்றனர்.


இருப்பினும் நடிகைகள் ஷூட்டிங்கின் போது போடப்படும் லைட்டிங் அனுசரித்த தங்களது மேக்கப் விஷயங்களை செய்தாக வேண்டும். அதனால்தான் சாதாரண தோற்றத்தை விடவும் சற்று கூடுதல் மேக்கப் உடன் அவர்கள் சினிமாக்களில் தோற்றமளிக்கிறார்.


மேக்கப் இல்லாமலும் தன் அழகான தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடிகைகள் யார் என்பதை கீழ்கண்ட புகைப்படங்களை பார்த்து நீங்களே முடிவெடுக்கலாம்


தீபிகா படுகோன்


திரையில் பேரழகு பெட்டகமாக வலம் வரும் தீபிகா படுகோன் மேக்கப் இல்லாத நேரத்திலும் வேறொரு விதமான அழகுடன் காணப்படுகிறார். தனது காஸ்ட்யூம் மூலம் கொஞ்சம் முயற்சி எடுத்தாலே பேரழகியாக மாறும் இந்த மாய நடிகை எந்த வித முயற்சியும் இல்லாமலேயே இயல்பான அழகோடு இருப்பது ஆச்சர்யமில்லைதான்.பிரியங்கா சோப்ரா


பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு பறந்து அந்நாட்டின் மருமகள் ஆகியிருக்கும் இந்த சுதந்திர பறவை திரையில் பல்வேறு அடர்த்தியான மேக்கப்களில் காணப்பட்டாலும் மேக்கப் அற்ற போதும் தனது ஸ்டன்னிங் உடல்வளத்தால் அனைவரையும் வசீகரிக்கிறார்.
ஆலியா பட்


தனது குறும்புத்தனமான தோற்றத்தால் பாலிவுட்டின் குட்டி பெண் ஆலியா பட் அனைவர் மனதை மட்டுமல்ல ரன்பீர் கபூரின் மனதையும் வென்றவர். இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக பதிவுகள் போடும் இவர்
தனது மேக்கப் அற்ற தோற்றத்தில்தான் பெரும்பாலும் அங்கு காணப்படுகிறார்.ராணி முகர்ஜீ


பெங்கால் பெண்ணான ராணி முகர்ஜீ தனது அழகிய கண்களாலும் டஸ்கி நிறத்தாலும் பாலிவுட்டை கவர்ந்தவர். ஹோம்லி லுக் என்றால் இவர் நினைவு வரும். ஆனால் மேக்கப் அற்ற பொது ராணி நம்மை போல சாதாரண பெண்ணாக தெரிகிறார். அதனால் என்ன அது ஒன்றும் தவறான விஷயம் இல்லையே!த்ரிஷா


96ன் நாயகி 30களில் இருந்தாலும் இன்னும் அதே இளமையோடு வலம் வருபவர். அமைதியும் தைரியமும் இவரது தனி குணங்கள். ஒரு சில படங்களில் குறைவான மேக்கப்போடு நடிக்கும் அளவிற்கு தைரியம் வாய்ந்தவர் மேக்கப் அற்ற போதும் திரிஷா அழகிதான்.அனுஷ்கா


எப்போதும் எளிமைக்கு பெயர் போனவர். வித்யாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். பெரும்பாலும் மகாராணி மேக்கப்பில் இவரை பார்த்தவர்களுக்கு இவரது மேக்கப் அற்ற அழகு வியப்பைத்தான் தரும்.நஸ்ரியா


துறுதுறுபெண்ணாக சினிமாவில் அறிமுகமாக அதே போலவே இப்போது வரை இருக்கும் நஸ்ரியா தனது மேக்கப் அற்ற நிலையிலும் அழகாகவே அதே துறுதுறுப்புடன் காணப்படுகிறார்.தமன்னா


சிந்தி பெண்ணான தமன்னா சுண்டி இழுக்கும் வெண்மை நிறத்திற்கு பெயர் போனவர். இவரது கதாபாத்திரங்களுக்காக பல படங்களில் இவரது நிறத்தினை குறைக்கத்தான் இவருக்கு மேக்கப் போடுவார்களாம். அந்த அளவிற்கு மேக்கப்பின் தேவையின்றி அழகாக தெரிபவர் தமன்னாகாஜல் அகர்வால்


குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் காஜல் அகர்வால். இவரது மேக்கப் அற்ற தோற்றம் இவரை லேசாக மட்டுமே வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.சமந்தா


இளைஞர்களின் மனதை தன் அழகால் வென்றவர் சமந்தா. சமீபத்தில் தனது காதலன் நாக சைதன்யாவை திருமணம் செய்தவர். திருமணத்திற்கு பின்னும் இன்னும் நாயகியாகவே தனது நடிப்பை தொடர்கிறார். மேக்கப் இல்லாத சமந்தா எப்போதும் போலவே அழகுதான். ----


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.