உங்கள் கல்யாண நேரத்தில் அல்லது உங்களுக்கு ஒருவேளை திருமணம் ஆகவில்லை என்றால்.. வருங்கால துணையின் உயரத்தை பற்றி நீங்கள் ஏதேனும் கனவுகள் கொண்டுள்ளீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்து வாசிக்க துவங்குங்கள். உயரமான(height) கணவன்(Husband) – குட்டையான மனைவி இல்லற உறவு தான் இருப்பதிலேயே மகிழ்ச்சியான தம்பதியாக வாழ்கிறார்கள் என்று கூறுகிறது சமீபத்தில் Konuk Universityல் பேராசிரியர் கிட்டே சோஹன் எடுத்த ஆய்வு முடிவுகள்.
வலிமையானவன்
இந்த ஆய்வினை ஏறத்தாழ 7,850 பெண்கள் மத்தியில் நடத்தியுள்ளது ஆய்வுக் குழு. இந்த ஆய்வில் சம உயரம் அல்லது ஏறத்தாழ ஒரே உயரம்(height) கொண்ட ஆணை திருமணம் செய்துக் கொண்ட பெண்களுடன் ஒப்பிடும் போது, உயரமான(height) ஆணை திருமணம் செய்துக் கொண்ட பெண்கள், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாய் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், உயரமான(height) ஆண்களை திருமணம் செய்துக் கொண்ட பெண்கள், தங்கள் கணவர் மீது அதிக ஈர்ப்பு கொண்டுள்ளதாகவும் கூறி இருந்தனர். உயரமான கணவனை(Husband) பெண்கள் வலிமையானவன் மற்றும் தங்களை பாதுகாக்க தகுந்தவனாக கருதுகிறார்கள்.
பாதுகாக்க உரியவனாக
ரைஸ் பல்கலைகல்கதை சேர்ந்த டேவிட் ரூத் மற்றும் வடக்கு டெக்ஸாஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த எல்லன் ரோசெட்டி நடத்திய வேறொரு ஆய்வில், உயரமான(height) கணவனை(Husband) மனைவியர் தங்களை பாதுகாக்க உரியவனாகவும், பெண் இயல்பை புரிந்துக் கொள்ள கூடியவனாகவும் கருதுகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருந்தது.
காதல்
தம்பதிகள் மத்தியிலான ரொமான்ஸ் வாழ்க்கையில் உயரம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விகளுக்கு, உயரமான(height) கணவனை கொண்ட பெண்கள், எப்போதும் போல ரொமான்ஸ் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதாய் கூறி இருந்தனர். உயரம் குறைவான கணவனை(Husband) கொண்ட பெண்கள் சிலர், ரொமான்ஸ் நேரத்தில், கணவனின் கண்களை தலை குனிந்து பார்ப்பது மட்டும் கொஞ்சம் வினோதமான உணர்வை அளிக்கும் என்று பதில் அளித்திருந்தனர்.
பாதுகாக்கும் திறன்
உயரமான கணவன் தான் வேண்டுமா என்று பெண்களின் தனிப்பட்ட தேர்வு. ஆனால், காலம், காலமாக உயரமான துணை வலிமையாகவும், தங்களை பாதுகாக்கும் திறன் உடையவனாகவும் இருப்பான் என்பது பெண்கள் மனதில் பதிந்த ஒன்றாக இருக்கிறது. காதல் என்று மட்டுமின்றி வீட்டில் துணை தேடும் போதும், பெண்ணை கட்டிலும் ஆண் உயரமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாக காணப்படுகிறது.
இல்லறம்
இது மருவி வரும் காலம். இன்று கணவன் தான் வீட்டிற்கு தேவையானதை வாங்கி வர வேண்டும். மனைவியர் வீட்டிலே உட்கார்ந்து சமைத்துப் போட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் உடைந்துவிட்டது. இருவரும் இல்லறத்தில், இல்லற மேம்பாட்டில் சமவுரிமை கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இந்த உயரம் சார்ந்த எதிர்பார்ப்பு மற்றும் கருத்துகள் மாறுபட நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்த ஆய்வில் வரும் காலத்தில் எப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும். அல்லது திருமணமாக பெண்கள் தங்கள் எதிர்கால கணவனிடம் எதை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து விளக்கவில்லை என்பதால்… நிச்சயம் வரும் காலத்தில் உறவில் இந்த உயரம் சார்ந்த எதிர்பார்ப்பு பெரிதாக இருக்காது.
காதல் வாழ்க்கையில் யாரும் உயரத்தை பெரிதாக கருதுவதில்லை. காதல்போக்கில் இந்த ஆய்வின் தகவல்களை அனைத்தையும் மாற்றியமைக்கும் காலம் வந்தாலும் இதில் பெரிய ஆச்சரியமில்லை. முன்னரே சொன்னது போன்ற புராணங்களிலும் கதைகளில் பெண்ணை காட்டிலும் ஆண் வலிமையுடையவனாக இருந்துள்ளான். இதனால் தான் பெண்கள் உயரமாக இருக்கும் ஆண் தன்னை விட பலசாலியாக தன்னை நன்கு பாதுகாக்கும் பாதுகாவலனாக இருப்பான் என நம்புகின்றனர். இது காலப்போக்கில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo