கிரீன் டீ அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
உலகம் பருகும் ஆரோக்கிய பானங்களில் முதலிடத்தில் இருப்பது கிரீன் டீ தான். கிரீன் டீயின்(green tea) ஆரோக்கிய ரகசியமே அதன் ஆண்ட்டி ஆக்ஸ்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று சொல்கிறோம்.
மற்ற எந்த ஒரு பானத்தை விடவும் கிரீன் டீயில் அதிக அளவு விட்டமின்கள் மற்றும் மினரல்கள் அமினோ அமிலங்கள் , பாலிபெனால்ஸ் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன.
இது உங்கள் மனதை அமைதியுடன் இருக்க செய்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்துகின்றது. உங்கள் சருமத்தை பொலிவுற செய்கிறது.
உங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு கிரீன் டீ மிக முக்கியமான ஒன்றாகும்.
கிரீன் டீ என்பதன் பயன்களைப் பார்க்கும் முன் கிரீன் டீ என்றால் என்ன அதன் வரலாறு குறித்தும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்
கிரீன் டீ என்பது ஆரம்ப காலங்களில் இந்தியா மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது உலகெங்கிலும் உள்ள மக்கள் கிரீன் டீயை பயன்படுத்துகிறார்கள்.
வளரும் தட்பவெப்ப நிலைக்கேற்ப கிரீன் டீயில் பல்வேறு வகைகள் உள்ளன
கிரீன் டீயின் வரலாறு
சீனாவின் அரசரான சென்னாங் என்பவர் காலத்தில்தான் கிரீன் டீ என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிரீன் டீ யைப் பற்றி 600 – 900 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் லு யு என்பவர் “டீ கிளாசிக்” என்றொரு புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தகம் தான் கிரீன் டீயின் வரலாற்றைக் கண்டுபிடிக்க உதவியது.
கிரீன் டீயில் உள்ள ஊட்ட சத்து விபரங்கள்
டானின் எனும் மூலபொருள்
கிரீன் டீயில் காணப்படும் இந்த மூலப் பொருள் நமது செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் காயங்களால் ஏற்படும் கிருமிகளைத் தடுக்கிறது.
கப்பைன் எனும் மூலப் பொருள்
எட்டு அவுன்ஸ் கிரீன் டீயில் 30ல் இருந்து 50 மில்லிக்ராம் வரை கபைன் உள்ளது. இது நல்ல கபைன் என்பதால் பயப்பட தேவையில்லை
விட்டமின்கள் மினரல்கள் மற்றும் பல
கொழுப்பிற்கான தடயங்கள் ஏதுமற்ற கிரீன் டீயில் நிறைய மினரல்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி யின் அளவு ஒரு முழு எலுமிச்சையில் இருக்க கூடிய அளவிற்கு நிகரானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் இதில் மற்ற பல விட்டமின்களும் அடங்கி உள்ளன.
கிரீன் டீயினால் ஏற்படும் நற்பலன்கள்
- உங்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
- உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துகிறது.
- இதய நோய்கள் வராமல் காக்கிறது
- உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது
- எலும்பை பலப்படுத்துவதன் மூலம் ஆர்தரைடிஸ் எனும் முக்கிய நோய்க்கு மருந்தாகிறது.
- புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
- பற்களில் குழிகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது
- நீண்ட ஆயுளை நமக்குத் தருகிறது.
- சருமத்தை பாதுகாத்து பொலிவோடு மிளிர செய்கிறது.
- மூளையின் செயல் திறனை அதிகரிக்கிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
- மன அழுத்தத்திற்கு மருந்தாகிறது.
மேலும் படியுங்கள் – தண்ணீர் குடிப்பதனால் கிடைக்கும் அற்புத பலன்கள்
சரும அழகிற்கு கிரீன் டீ எப்படி உதவுகிறது
கண்களின் கருவளையத்தை அடியோடு போக்குகிறது
கிரீன் டீயில் உள்ள டானின் மற்றும் ஆண்ட்டி ஆக்ஸ்சிடெண்டுகள் நமது கண்களில் ஏற்படும் கருவளையதிற்கும் தூக்கமின்மையால் ஏற்படும் கண்வீக்கதிற்கும் மருந்தாக இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே இதற்கு பெரிதும் உதவி செய்கிறது.
இரண்டு கிரீன் டீ பைகளை எடுத்து பிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்திருந்து அதன் பின் அதனை எடுத்து கண்களின் மீது வைக்கவும். இப்படி அடிக்கடி செய்து வருவதன் மூலம் கண்களில் ஏற்படும் கருவளையம் வீக்கம் ஆகியவை மறைந்து முகத்தை அழகாக்கும்.
உங்களை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது
இதில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸ்சிடென்ட்கள் மற்றும் இதர மூலபொருட்கள் உங்களை இளமையாக மாற்றிக் கொள்ள உதவுகிறது. முதுமை சுருக்கங்களைப் போக்குகிறது. தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்கி பொலிவுற செய்கிறது.
கொஞ்சம் கிரீன் டீயை எடுத்து நீரில் கலந்து அதனோடு இரு துளி தேங்காய் எண்ணையை கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் வெகு சீக்கிரமே இளமை சருமத்தைப் பெறலாம்.
சருமத்திற்கு டோனர் ஆகும் கிரீன் டீ
இனி ஒவ்வொரு முறையும் சருமத்தின் நிறத்தையும் அழகையும் மேம்படுத்த பார்லர் போக வேண்டியதில்லை. அவ்வபோது குளிர்ந்த கிரீன் டீயில் முகம் கழுவி வந்தால் அதுவே உங்கள் முகத்திற்கு மிக சிறந்த டோனர் ஆக மாறும் என்பதில் உங்களுக்கு சந்தோஷம்தானே.
எண்ணைப்பசை சருமமா இனி கவலை வேண்டாம்
கிரீன் டீ உங்கள் எண்ணைப்பசை சருமத்தை மாற்றி சாதாரண சருமம் ஆக்குகிறது. அடிக்கடி இதனை குடித்து வரும்போது உங்கள் சருமம் மேம்படும்.
சருமப் பொலிவை அதிகரிக்கிறது.
கொஞ்சம் கிரீன் டீயுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை நீரை சேர்த்து பசை போலாக்கி குழைத்து முகமெங்கும் போடவும். 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். உங்கள் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும்.
முடி உதிர்வை தடுக்கும்
கிரீன் டீயை அடிக்கடி அருந்தி வருவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து போய் ஆரோக்கியமான கூந்தல் வளர ஆரம்பிக்கும்.
க்ரீன் டீயின் வகைகள்
இது போல கிரீன் டீயின் பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது அதில் உள்ள வகைகளைப் பார்க்கலாம்.
சென்சா கிரீன் டீ
சென்சா கிரீன் டீ என்பது ஒரு ஜப்பானிய வகை டீயினை சேர்ந்தது. உலகெங்கிலும் மிகவும் பிரபலமான டீயும் கூட.
ஜென்மைச்சா கிரீன் டீ
பழுப்பு அரிசி எனப்படும் வார்த்தையில் இருந்து ஜென்மைச்சா எனும் வார்த்தையை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். பழுப்பு நிற அரிசியை வேகவைத்து பின் ஆறவைத்து அதன் பின் வறுத்து அதனோடு சென்சா எனும் ஜப்பானிய கிரீன் டீயை 50:50 என்கிற விகிதத்தில் கலப்பதால் இதற்கு இந்தப் பெயர்
ஹோஜிச்சா கிரீன் டீ
சென்சா தீயின் இலைகளை பக்குவமாக வறுத்து இதனைத் தயாரிக்கிறார்கள். அதனால் இதில் கசப்பு சுவை அதிகம் இருக்காது. இதனால் இந்த டீயை அனைத்து வயதினரும் அருந்தலாம்.
க்யோகுரோ கிரீன் டீ
இந்த தேயிலையை தயாரிக்க நன்கு வளர்ந்த இலைகளை ஒரு 20 நாளுக்கு துணியாலோ அல்லது பந்தலாலோ மூடி விடுவார்கள். 20 நாட்கள் லேசான வெளிச்சத்தில் வளர்வதால் இந்த டீக்கென தனி சுவையும் பெரும் ஆரோக்கியமும் ஏற்படுகிறது.
மாட்சா கிரீன் டீ
இந்த வகையான கிரீன் டீக்கள் மிக நன்றாக வறுக்கப்பட்டு மிக சரியான பதத்தில் உருவாக்கபடுகிறது. ஜப்பானிய தேநீர் கலாச்சார விழாக்களில் இந்த வகை தேநீர்கள் தான் விநியோகிக்கபடுகிறது. இது 100 வருடம் பழமையான தேனீர் செடிகளில் இருந்து தயாரிக்கபடுவதால் இதன் சுவையும் மனமும் அலாதியானது.
மேலும் படியுங்கள்-எதை சாப்பிடுவது? நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.