எதை சாப்பிடுவது? நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்

எதை சாப்பிடுவது? நீரிழிவு நோய்க்கான சிறந்த உணவுகள்


நீரிழிவு நோய் : சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை சர்க்கரை நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது.


வகைகள் : சர்க்கரை நோயின் தன்மையை பொறுத்து அதனை மூன்று வகையாக பிரித்துள்ளனர். அவை டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு.


டைப் 1 நோயானது உடலில் இன்சுலின் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செயற்கை இன்சுலினை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


டைப் 2 ஆனது பொதுவான ஒருவகை நீரிழிவு நோயாகும். இது டைப் 1 போல அல்லாமல், உடலில் சுரக்கும் இன்சுலினை செல்கள் சரிவர உபயோகப்படுத்தாத நிலையில் இது தோன்றுகிறது.  இது உடல் பருமன் உள்ளவர்களுக்கு எளிதில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


கர்ப்பகால நீரிழிவு நோயானது சில பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் தோன்றுவதாகும். இது இன்சுலின் குறைபாடு உள்ள பெண்களுக்கு தோன்றுவதாகும் மேலும் பேறு காலத்திற்கு பின் மறைந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.


நீரிழிவை கட்டுப்படுத்தும் உணவு வகைகள் :நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். பின்வரும் உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவு வகைகள் ஆகும்.1. கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்Diabetes management-fish


சாலமோன், மத்தி , ஹெரிங் மற்றும் நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள் ஆகும். மேற்கண்ட மீன் வகைகள் அனைத்தும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஆகும்.  சீரான இடைவெளியில் இந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயினால் வரும் ஹார்ட் அட்டாக் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மீன்கள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு  வகையாகும். இது வளர்ச்சிதை மற்ற குறைபாட்டை குறைக்க உதவும்.


2. பச்சை கீரை வகைகள்


பச்சை கீரை வகைகள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நல்லது மற்றும் அவை குறைந்த கலோரிகளை மட்டுமே அளிக்கக்கூடியது. அதிகப்படியான பச்சை கீரை வகைகளை உண்பது கண்களுக்கு நல்லது மற்றும் சர்க்கரை நோயினால் வரும் கேட்டராக்ட் போன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதில் விடுபடலாம்.3.  தயிர்


 தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது.  தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.


Diabetes management - curd4. கொட்டை வகைகள்


 அனைத்து வகையான பருப்பு மற்றும் கோட்டை வகைகள் உடலுக்கு சத்தானவை. இதில் பைபர் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதங்கள் உள்ளது. பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்ற பருப்பு வகைகள் சர்க்கரை நோயாளிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவாகும்.5. ப்ரோக்கோலி


 ப்ரோக்கோலி ஒரு சிறந்த காய்கறி உணவாகும். அரை கப் வேக வைத்த ப்ரோக்கோலி 27 கலோரிகளையும் 3 கிராம் அளவிலான ஜீரணிக்க கூடிய புரதத்தையும் கொண்டது. மேலும் வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் கொண்டது.6. ஆப்பிள் சீடர் வினிகர்diabetes management - apple cider


ஆப்பிள் சீடர் வினிகர்  பல உடல் நலன்களை உள்ளடக்கியது. இது ஆப்பிளில் இருந்து செய்யப்படும்போது அதில் உள்ள சர்க்கரை அசிட்டிக் ஆசிட் ஆகா மாற்றப்படுகிறது. இது குறைந்த ரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது.  இது படி உணர்வை கட்டுப்படுத்தி தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை தடுக்கும் குணம் கொண்டது. இதனை தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் அளவிற்கு சாப்பிடுவது நல்லது. மேலும் உணவுடன் இதனை சேர்த்து உண்டால், 20% சர்க்கரை அளவானது ரத்தத்தில் குறைக்கப்படுகிறது.7. பூண்டு


பூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் பல நல்ல பலன்களை உள்ளடக்கியது.  இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது. பூண்டு ரசம் மற்றும் உணவு வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். இது வீக்கம், கொழுப்பு ஆகியவற்றை கரைக்க உதவுகிறது.


 நீங்கள் இதை தொடர்ந்து உண்ணும் போது உங்களது நீரிழிவை நிரந்தரமாக சேரி செய்யாவிட்டாலும் வேறு கோளாறுகளை தவிர்க்கலாம்.


பின்பற்றி பாருங்கள்!


படங்களின் ஆதாரங்கள் - ஷட்டர் ஸ்டாக்