பெண்கள் வளையல் அணிவதற்கான 10 முக்கிய காரணங்கள்

பெண்கள் வளையல் அணிவதற்கான 10 முக்கிய காரணங்கள்

1. அழகிற்காக
கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் உடைக்கு ஏற்ற நிறங்களில் வளையல்கள் அணிய ஆசைப்படுவர். அதற்கு காரணம் கைகளை அழகுபடுத்திக் கொள்ள தான் என்றாலும் உடைக்கு ஏற்ற வளையல்கள்(Bangles) அணியும் போது அது மேலும் பெண்களின் அழகை அதிகரித்துக் காட்ட உதவுகின்றது. சுடிதார் மற்றும் புடைவைக்கு ஏற்ற அழகான வளையல் அணியும் போது கைகள் மினுமினுக்கும். இது பார்ப்பவர்களுக்கு ஒரு வித கவர்ச்சியை தருகின்றது.


2. திருமணத்தில்
பாரம்பரியம் கலாச்சாரம் ஆகிய காரணங்களால் திருமணத்தில் பெண்களுக்கு கைகள் நிறைய வளையல்கள்(Bangles) அணியப்படுகின்றது. வளையல் அணிவதால் இது ஒரு வித மங்கல சக்தியை அதிகரிக்கிறது. அது மட்டும்மின்றி புது பெண் என்கிற ஒரு பொலிவையும் இந்த வளையல்கள் அதிகம் தருகின்றன. வளையலில் இருந்து திருமணமான பெண் எழுப்பும் சத்தம் வீட்டில் சுபகாரியம் நடைபெற்றுள்ளதை நினைவுபடுத்துகின்றது.

3. கணவனின் ஈர்ப்பை பெற
பொதுவாக ஆண்களுக்கு பெண்கள் வளையல்(Bangles) அணிவது மிகவும் பிடிக்கும். மனைவி வளையல் மூலம் எழுப்பும் சத்தம் கணவனுக்கு மனைவி மீது ஒரு ஈர்ப்பை அதிகப்படுத்தும். பொதுவாக ரொமாண்டிக் உணர்வை அதிகம் கொடுக்கிறது இந்த வளையல். வீட்டில் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


4. சாத்வீக-சைதன்ய அதிர்வலைகள்
கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் போன்ற அதியற்புத தன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை அணிந்து கொள்ளும்போது, எழும் ஓசை சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த சாத்வீக-சைதன்ய அதிர்வலைகளுக்கு உண்டு.

5. வளைகாப்பு
பெண்களுக்கு வளைகாப்பு என்ற சுபநிகழ்ச்சி இந்தியா முழுவதும் பண்டைய காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு வளையல் அணிவிப்பது மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எல்லா வயது பெண்களுக்கும் வளையல்கள்(Bangles) சீராக கொடுக்கப்படும். கர்ப்பிணிப் பெண் மெல்ல நடந்துவரும் உடல்வாகை கொண்டிருப்பாள். அவள் வரும்போது வளையோசை சத்தம் கேட்கும். இதனால் அவள் வருவதை புரிந்துகொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மற்றவர் ஒதுங்கிச் செல்வர், இதன் மூலம் அவர்களின் மன அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.


6. கண்ணாடி வளையல்
கண்ணாடி வளையல்களில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டிருந்தால் அதை அணியக்கூடாது. உடனடியாக கைகளிலிருந்து அகற்றிவிட வேண்டும். ஏனென்றால் உடைந்த வளையல்களில் சாத்வீக-சைதன்ய சக்திகள் செயலற்று போகும். இதனால் அந்த வளையல்களை அணிவதன் மூலம் எந்தவித காப்பு சக்திகளும் கிடைக்காது. டெல்லி நகரத்து பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஹேண்ட்பேக்கில் வைத்திருக்கும் சிறு கத்தி போன்று, நம் இளம்பெண்களின் பாதுகாப்பு கவசமாகவும் கூட கண்ணாடி வளையல்கள் திகழ்கின்றன.

7. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
பொதுவாக கையின் மணிக்கட்டு பகுதியை மனிதர்கள் அதிகமாக பயன்படுத்துவர். நாடித்துடிப்பை பார்ப்பதற்கும் இந்த இடத்தியே பிடித்து பார்ப்பார்கள் . ஆகவே வளையல்களை இந்த மணிக்கட்டு பகுதியில் அணியும் போது அவைகளின் தொடர்ந்த உராய்வினால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலிலிருந்து வெளியேறும் மின்சாரம், இந்த வளையங்களின் வட்ட வடிவத்தால் வெளியில் போக முடியாமல் மீதும் உடலுக்குள்ளயே செல்கிறது, உடலின் ஆற்றலை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பண்டைய காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை செய்தபோது தங்களை உற்சாகமாகவும், உடலின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த ஆபரணங்கள் உதவின.


8. உணர்ச்சிகளின் சமநிலை
பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிந்தும் மற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளையல்கள் அணிந்தும் ஆய்வுகள் செய்யப்பட்டன. கண்ணாடி வளையல்கள் அணிபவர்கள் வலுவான உணர்ச்சிகளின் உந்துதலில், சமாதானத்தை விரும்புகிறவர்களாகவும் சூழ்நிலைகளை நல்ல விதத்தில் மதிப்பீடு செய்பவர்களாகவும் இருந்தனர். மற்ற பிற செயற்கை பொருட்களால் ஆன வளையல்களை அணிபவர்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பதாக அறியப்பட்டது.

9. நன்மைகள்
கண்ணாடி வளையல்கள் வளிமண்டலத்தில் இருந்து நன்மை மற்றும் தூய்மைகளை உறிஞ்சி, இயற்கையான சூழல்களில் நிலவும் சக்திகளை அதை அணிபவருக்கு கொடுக்கிறது. கண்ணாடி வளையல்கள் ஒலிகள் மென்மையானதாக இருப்பதால் அது அணிபவர்களுக்கு மட்டும் அல்லாமல் உடனிருப்பவர்களின் மனநிலையையும் மேம்படுத்துகிறது. ஆகையால் அந்த இடமே சண்டை சச்சரவின்றி அமைதியாக மாறுகிறது. அது மட்டும் இல்லாமல் கண்ணாடி வளையல்கள் எதிர்மறை சக்திகளை புறக்கணித்து வளி மண்டலத்தில் இருக்கும் தீவினைகளில் இருந்து அணிபவரின் உடலை பாதுகாக்கிறது


10. நிறங்களின் பலன்கள்
பச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். சிவப்பு நிற வளையல் தீ சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு. சிகினா வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள் இதுபோன்ற காப்பு சக்திகளை ஈர்க்காது என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்று.


தென்னிந்தியாவில் கர்நாடகா , மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொதுவாக பச்சை நிறத்தை அதிகம் அணிவர். வடக்கில் பஞ்சாப் , உ.பி , போன்ற மாநிலங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக பயன் படுத்துவர். பச்சை நிறம் பொதுவாக இறைத்தன்மை மற்றும் சமாதானத்தை பறை சாற்றும் . சிவப்பு நிறம் தீயவற்றை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். இந்த நிற வளையல்கள் மீது தங்க நிற வேலைப்பாடு அமைந்திருக்கும் போது மேற்கூறிய ஆற்றல்கள் வெளிப்படாமல் போவதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை அணிவது சிறந்த பலனை கொடுக்கும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.