நம் இதயங்களை தடதடக்க வைக்கும் ஜான்வி கபூரின் அழகிய லெகெங்கா

நம் இதயங்களை தடதடக்க வைக்கும் ஜான்வி கபூரின் அழகிய லெகெங்கா

தி தடக் எனும் படத்தில் அறிமுகமாகி அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஜான்வி கபூர் சமீபத்தில் அபுஜானி சந்தீப் கோஸ்லா ரக லெகங்காவை அணிந்து வந்தது பார்ப்பவர் மனதை மயங்க செய்தது.


01 janhvi kapoor abu jani contemporary lehenga
இந்த வகை லெகங்காவை அவருக்கு வடிவமைத்துக் கொடுத்தவர் காஸ்ட்யூம் வடிவமைப்பாளர் தன்யா கவ்ரி . பிரபலங்களுக்கான ஆடை வடிவமைப்பாளர் சமீபத்தில் கரீனா கபூரின் அழகிய ரோஸ் நிற கவுனை வடிவமைத்து பாராட்டுப் பெற்றவர்.எளிமையான அதே சமயம் அழகை நிரூபிக்கிற மற்றும் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் யதார்த்த உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் ஜான்வி தனித்துவம் வாய்ந்தவர்.


 02 janhvi kapoor abu jani contemporary lehenga


இந்த லெகங்காவை ஜான்வி கோவாவின் திரைப்பட விழாவிற்கு அணிந்து வந்திருந்தார்.பாரம்பர்ய உடையான பாவாடையை சற்றே மாற்றியமைக்க அவர் அணிந்துள்ள இந்த வெண்மை நிற டாப்ஸ் உதவி இருக்கிறது. சீனா வகையை சார்ந்த இதன் காலர்கள்  இன்னும் இதன் அழகை மேம்படுத்துகிறது. மேலும் இதன் பட்டன்கள் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆடையில் பரவியிருக்கும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் அத்தனை அற்புதமாக இருக்கிறது. ஆடையைத் தவிர்த்து ஜான்வியை சற்று பார்ப்போம். அவரது உடைக்கேற்றபடி ஜான்வி அணிந்திருக்கும் பெப்பெர்மிண்ட் எனாமல் காதணிகள் ஜெய்ப்பூர் ரக காதணிகளை சேர்ந்தது. இந்தக்  காதணிகள் அவரது அழகை மேலும் கூடுதலாக்கிக் காட்டுகிறது என்றால் மிகையில்லை.


 


 


நீங்கள் இந்த முறை கடற்கரை திருமணங்களுக்கு போகும்போது உங்களை லேசாகவும் எளிமையாகவும் அதே சமயம் அழகாகவும் காட்டிக் கொள்ள நினைத்தால் உங்களது கொஞ்சம் கனமான பனாரசி ஸ்கர்ட் அல்லது கோட்டா பட்டி லெகங்கா உடன் ஜான்வியைப் போன்றே லேயர்களால் ஆனா ஷர்ட் அணிந்தால் நீங்கள்தான் அன்றைய நிகழ்வின் நாயகியாக இருப்பீர்கள்ஆகவே உங்கள் இந்தியப்  பாரம்பர்ய ஸ்கர்ட்களுக்கு பொருத்தமான ஒரு சில ஷர்ட் வகைகள் இதோ உங்களுக்காக.


 


1. அழகிய வளைவுகள் கொண்ட கிராப் வெள்ளை ஷர்ட்


 01 janhvi kapoor - ruffle white shirt and lehenga - forever 21


ஒரு எளிமையான லெகங்காவிற்கு பொருத்தமானது இந்த அழகிய வளைவுகள் கொண்ட கிராப் ஒயிட் ஷர்ட். ஸ்டைல் குறிப்புகள் : ஷர்ட்டின் நுனியில் முடிச்சு போடுவதன் மூலம் இதன் லுக் கை  மேலும் சிறப்பாக்கலாம். மேலும் இவ்வகை ஷர்டுகள் உங்கள் இடுப்பழகை மேம்படுத்திக் காட்டும்.


 2. ஆஃப்  ஷோல்டர் டாப்ஸ்


 02 janhvi kapoor - ruffle black shirt and lehenga - zara


இந்தவகையான டாப்ஸ்கள் உங்கள் பாரம்பர்ய லெகங்கா வை டக் இன்  செய்யும்போது மிக பொருத்தமாகவும் கம்பீரமாகவும் இருக்கும். இதற்கேற்ற ஆர்ட் டெகோ ரக ஆக்சஸரீஸ் நீங்கள் போடும்போது நிச்சயம் அற்புதமான தோற்றத்தை உங்களுக்கு கொடுக்கும்.


 


3. விம்சிகல்  ஒயிட் ட்ரீம்


 03 janhvi kapoor - ruffle white shirt and lehenga - shein


தங்கள் தோற்றத்தை வித்யாசமாக அதே சமயம் அழகாகவும் காட்டிக் கொள்ள நினைப்பவர்களுக்கானது இவ்வகை ஷர்ட்டுகள். காற்றோட்டமுள்ள ஒரு உடையாகவும் அதே சமயம் கோடைகால ஆடையாகவும் இது இருக்கிறது. இதனுடன் நெட்டட் லெகங்கா வை நீங்கள் அணிந்தீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் கோவா பாணி உடைகளுக்குப்  பொருத்தமானவராகவே மாறிவிடுவீர்கள்.