அனைத்து வித சரும நிறம் கொண்டவர்களுக்கும் ஏற்ற 10 லிப்ஸ்டிக் வகைகள்

அனைத்து வித சரும நிறம் கொண்டவர்களுக்கும் ஏற்ற 10 லிப்ஸ்டிக் வகைகள்

ஒரு குறிப்பிட்ட நிறம் கொண்ட லிப்ஸ்டிக்குகளை மட்டுமே அனைத்து சரும நிறம் கொண்டவர்களும் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் விட்டது.


இப்போது அவரவர் சரும நிறத்திற்கேற்ப தங்கள் உதடுகளின் நிறத்தை நிர்ணயித்து கொள்ளலாம். அதன் மூலம் அழகாய் ஜொலித்து அனைவரையும் கவரலாம்.


அப்படி உங்கள் சரும நிறத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களை அழகாகக் காட்டும் ஒரு சில லிப்ஸ்டிக் நிறங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


1-lipsticks-for-every-skin-tone-maybeliine-lip-gradation
துணிச்சலான பெண்களுக்கான அடர்த்தியான லிப்ஸ்டிக்
 மேபிலைன்ஸ் நியூயார்க் லிப் கிரேடேஷன் மாவே 350மேபிலைன்ஸ் நியூயார்க் லிப் கிரேடேஷன் இந்த சிறப்பான லிப்ஸ்டிக் உங்களுக்குள் இருக்கும் துணிச்சலான பெண்மணியை அடையாளம் காட்டும் வகையில் அடர் நிறத்தில் இருப்பதால் உங்கள் தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் பளபளபற்ற எளிமைத் தன்மை உங்கள் தன்னம்பிக்கையை மேலும் எடுத்துக்காட்டும். இந்த அழகிய அடர்நிறம் அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது. இதனை பயன்படுத்துவதன் மூலம் பழுதுகள் அற்ற அழகுடன் நீங்கள் ஜொலிப்பீர்கள்!


 


2-lipsticks-for-every-skin-tone-mac-ruby-woo
உங்கள் உதடுகளை தனித்துவமாக காட்ட  M.A.C யின் ரூபி வூ.


 


உங்கள் உடைகேற்ற லிப்ஸ்டிக் அணிவதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் தருணங்களில் கண்களை மூடிக் கொண்டு இந்த ரூபி வூவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதன் ஆடம்பரமான சாயல் உங்கள் அலுவலகத்தில் இருந்து பார்ட்டிகள் வரை அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.


 


3-lipsticks-for-every-skin-tone-makeup-revolution
அழுத்தமான நிறங்களுக்கு கை கொடுக்கிறது மேக் அப் ரெவல்யூஷன் இன் டிவைன்


மேக் அப் ரெவல்யூஷன் இன் டிவைன் இந்த கிரீம் போன்ற தன்மையும் மேலும் இதன் நீண்ட நேரம் நிலைக்கும் குணமும் நிச்சயம் இந்த லிப்ஸ்டிக் மேல் உங்களுக்கே காதல் வரவைக்கும்! இதனை நீங்கள் அணிவதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள் என்பது உறுதி. ஒரே நிறத்தின் பல்வேறு சாயல்களைக் கொண்ட உடை வகைகளுக்கு இது பொருத்தமாக இருக்கும்


4-lipsticks-for-every-skin-tone-lakme-9-to-5 


நுணுக்கமான மேக் அப் - லக்மேயின் 9 டு 5 மேட் லிப் கேர் இன் டாபி நெக்ஸஸ்.


 


மிகவும் நுண்ணிய வகை மேக் அப் போடுபவர்களுக்காகவே வந்திருக்கிறது லக்மேயின் 9 டு 5 மேட் லிப் கேர்.


இதன் நிறம் அலுவலகத் திற்கு பொருத்தமாக இருக்கும். உங்கள் அழகை மேலும் விளம்பரபடுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கான எளிமையான நிறமாக இந்த நிறம் இருக்கும். உடனடியாக வாங்கி பயன்படுத்திப் பாருங்கள்.


 


5-lipsticks-for-every-skin-tone-revlon
கவர்ச்சியான உதடுகள் - ரெவ்லானின் லஸ்ட்ரஸ் லிப்ஸ்டிக் லுக் அட் மி


 


உங்களுக்கு மிகுந்த கவர்ச்சியான உதடுகள் வேண்டுமா. உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் டேட்டிங் செல்கிறீர்களா. நிச்சயம் ரெவ்லானின் லுக் அட் மி வகையை முயற்சி செய்து பாருங்கள்!


 


6-lipsticks-for-every-skin-tone-mac-so-chaud
பரபரப்பான ஆரஞ்சு நிறம் - M.A.C யின் ஸோ சாட்.பார்த்த உடன் பற்றி கொள்ளும் அழகாக நீங்கள் மாற வேண்டும் எனில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது M.A.C யின் ஆரஞ்சு நிறமான ஸோ சாடைத் தான். வழக்கமான சிவப்பு மற்றும் பிங்க் நிற லிப்ஸ்டிக் உங்களுக்கு போர் அடித்திருந்தால் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது இந்த ஆரஞ்சைத் தான்! அவசியம் பயன்படுத்திப் பாருங்கள்.


7-lipsticks-for-every-skin-tone-nykaa 


உணர்வுகளை வெளிப்படுத்தும் நைகாஸ் ஸோ மேட் லிப்ஸ்டிக் இன் விக்ட் ஒயின்இந்த நைகாஸ் ஸோ மேட் லிப்ஸ்டிக்  உங்களை அதீத கவர்சியானவராக காட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. பார்ட்டிகளுக்கும் நண்பர்களுடான அவுட்டிங் களுக்கும் ஏற்ற நிறம் இந்த அடர் கவர்ச்சி நிறம்! இது  உங்கள் உதடுகளின் பூரண அழகை மேலும் எடுப்பாக்கும்!


 


8-lipsticks-for-every-skin-tone-lakme-lip-and-cheek
காபி ப்ரியர்களுக்கான - லக்மேயின் லிப் அண்ட் சீக் கலர் இன் காபி லைட்இதன் வெண்ணை போன்ற தன்மை உங்கள் உதடுகளுக்கு மேலும் பளபளப்பைக் கொடுக்கும். நோ மேக் அப் வகை பிடிப்பவர்களுக்கு லக்மேயின் இந்த லிப் அண்ட் சீக் கலர் இன் காபி லைட் நிச்சயம் பிடிக்கும். இதன் காபி  நிறம் தான் இதில் சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


 9-lipsticks-for-every-skin-tone-Loreal


ஆடம்பர நிறத்திற்கும் ஸ்டைலிற்கும் -  லோரியல் பாரிசின் ரிச் ஒயின் லிப்ஸ்டிக்.எல்லா வகையான பார்ட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்க விரும்புவர்களுக்கு ஏற்றது இந்த லோரியல் பாரிசின் ரிச் ஒயின் லிப்ஸ்டிக். பெயரிலேயே இதன் பேரழகு ஒளிந்திருக்கிறது அனைவருக்கும் தெரிகிறது தான் இல்லையா. உலர்ந்த உதடுகள் கொண்டவர்களுக்கு இது வரப்ரசாதம் . இதில் உள்ள ஜோஜுபா எண்ணெய் நமது உதடுகளை வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. இதன் வழுக்கும் வெண்ணை போன்ற தன்மையால் உங்கள் உதடுகள் கண்ணாடி போல பளபளப்பாகும். மற்றவர் உங்கள் உதடுகளில் தங்கள் முகம் பார்த்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு !


 


10-lipsticks-for-every-skin-tone-chambor
முத்தமிடத் தயார் ஆகுங்கள் - சேம்பர்ஸ் எக்ஸ்ட்ரீம் வியர் லிக்விட் லிப்ஸ்டிக் இன் மாவேஉங்கள் உதடுகளுக்கு பொருத்தமான லிப்ஸ்டிக்கை தேடித் தேடி சலித்துப் போய் விட்டீர்களா அப்படி என்றால் உங்களுக்கு பொருத்தமான தேர்வு இந்த சேம்பர்ஸ் எக்ஸ்ட்ரீம் வியர் லிக்விட் லிப்ஸ்டிக் இன் மாவே தான். மிகவும் அழுத்தமான நிறத்தில் இருக்கும் உங்கள் அழகை தனித்துவமாகும் இந்த லிப்ஸ்டிக் மூலம் நீங்கள் முத்தமிட தயார் ஆகலாம். ஏனெனில் இதன் நிறம் இன்னொருவருக்கு ஒட்டாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.