logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பார்வைக்குறைவு ஒரு தடையல்ல !  முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியாக பிராஞ்சல் பாட்டில் தேர்வு !

பார்வைக்குறைவு ஒரு தடையல்ல ! முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரியாக பிராஞ்சல் பாட்டில் தேர்வு !

நாட்டின் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பொறுப்பேற்றிருக்கிறார் பிராஞ்சல் பாட்டில் (pranjal patil). ஐஏஎஸ் அதிகாரியாக பெண்கள் இருப்பது வழக்கமானது என்றாலும் பிராஞ்சல் பாட்டில் கண்பார்வை இழந்தவர் என்பது முக்கிய தகவல்.

திருவனந்தபுரத்தின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கும் பிராஞ்சல் பாட்டிலை (pranjal patil) கலெக்டர் கே கோபாலகிருஷ்ணன் அவருடைய சக பணியாளர்கள்களுடன் வரவேற்று மரியாதை செலுத்தினார். 

பிராஞ்சல் பாட்டீலுக்கு அவருடைய ஆறு வயதில் கண் பார்வை தெரியாமல் போனது. அதன் பின்னரும் மனம் தளராமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் பிராஞ்சல். மகாராஷ்டிரா மாநிலம் உல்ஹாஸ் நகரில் தன்னுடைய முதுகலை பட்டத்தை பயின்று முடித்தார்.                            

 

ADVERTISEMENT

Twitter

இன்டெர்னல் ரிலேஷன்ஸ் இன் ஜேஎன்யூ எனும் பிரிவில் பட்டம் பெற்ற பிராஞ்சல் 2016ம் வருடம் நடந்த யூபிஎஸ்சி தேர்வில் கலந்து கொண்டார்.                              

அப்போது 773வது இடத்தை அவர் பெற்றார். பல்வேறு பதவிகளுக்கு பிராஞ்சலின் தகுதியானவராக இருந்தாலும் அவரது பார்வைக் குறைபாடு காரணமாகவே அவரை பணியில் அமர்த்த முடியாமல் போனது.                                     

ADVERTISEMENT

அதன் பின்னர் அதற்கு அடுத்த வருடமே 2017ம் ஆண்டு ப்ராஞ்சலுக்கு மீண்டும் தேர்வெழுத ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்காகவே காத்திருந்த பிராஞ்சல் கண்பார்வையற்ற போதும் 124வது இடத்தில் இருந்தார். இதுவே அவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக்க போதுமானதாக இருந்தது.                                     

Twitter

ADVERTISEMENT

Twitter

இதனைப் பற்றி பேசும்போது பிராஞ்சல் “கேரளாவில் பணி புரிய தான் தயாராக இருப்பதாகவும்.. துணை கலெக்டராக தனக்கு தரப்போகும் பணிகளுக்காக காத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.                   

எப்போதும் மனதை தளர விடாமல் இருக்க வேண்டும் எனும் பிராஞ்சல் தொடர்ந்த முயற்சி இருந்தால் நாம் எதற்காக ஏங்குகிறோமோ அது தடைகளைத் தாண்டி நம்மை வந்து அடைந்தே தீரும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை தருகிறார்.                    

அவரை அந்த குளிர்கண்ணாடி அணிந்தபடி பார்ப்பதே மிக அழகாக இருக்கிறது. பெண்மையின் உயரத்திற்கு எதுதான் தடை.. எல்லாம் நம் மனதை பொறுத்ததுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஐஏஎஸ் அதிகாரி பிராஞ்சல் பாட்டில்.                                    

ADVERTISEMENT

Twitter

Twitter

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

15 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT