விநாயகர் சதுர்த்தி(vinayakar chaturti) வந்து விட்டாலே, அனைவரது எண்ணங்களிலும் ஓடுவது, சுண்டலும், கொளுகட்டையும் தான். இது வழக்காமான ஒரு படையலாக ஆகி விட்டது. ஆனால், இன்று குழந்தைகள் இதை தவிர மேலும் சில வித்யாசமான பலகாரங்களை எதிர் பார்கின்றனர்.
இந்த வருடம் உங்கள் விநாயகர் சதுர்த்தி, சற்று வித்யாசமாக ஏதாவது செய்து, விநாயகர்ரை ஆச்சரியப்படுத்த எண்ணுகின்றீர்களா?
அப்படியானால், பின் வரும் இந்த பலகாரங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Youtube
1. பாசி பருப்பு அல்வா:
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு ஒரு கப்
- முந்திரி பருப்பு 1௦
- சிறிது குங்குமப் பூ
- நெய் கால் கப்
- ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி
- சர்க்கரை ஒரு கப்
- பால் அரை கப்
செய்முறை
- பாசி பருப்பை நன்கு ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும்
- பின் அரைத்த பாசி பருப்பை சேர்க்க வேண்டும்
- மிதமான சூட்டில் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்
- இதனுடன் சிறிது நேரம் கழித்து பால் சேர்க்க வேண்டும்
- அதன் பின் முந்திரி பருப்பு, குங்குமப் பூ, சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி, சேர்த்து அடி பிடிக்காமல் கிளறி நன்கு பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைக்க வேண்டும்
Youtube
2. உப்பு கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
- பச்சை அரிசி மாவு ஒரு கப்
- நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
- கடுகு / உளுந்து/ சீரகம் / கடலை பருப்பு சிறிதளவு
- பச்சை மிளகாய் 2
- கருவேப்பிள்ளை சிறிதளவு
- உப்ப
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு வாணலியில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் சீரகத்தை சேர்த்து பொரிக்க விட வேண்டும்
- இதனுடன் சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்
- தேவை பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்
- கருவேப்பிள்ளை இலைகளையும் சேர்த்து வதக்க வேண்டும்
- இதனை இறக்கி வைத்து விட்டு, சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- பச்சை அரிசி மாவில், தேவையான உப்பு மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். பிசையும் போது, இதனுடன் தாளித்து வைத்திருக்கும் மற்ற பொருட்களையும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்க்க வேண்டும்(vinayakar chaturti)
- இப்போது எலுமிச்சை பழம் அளவிற்கு உருண்டையாக உறட்டி வைக்க வேண்டும்
- ஒரு இட்லி கொப்பரையில், இட்லி தட்டில் இந்த உருண்டைகளை வைத்து, அடுப்பில் அவிக்க வேண்டும்
- வெந்ததும் இறக்கி விடலாம்
Youtube
3.பொறி உருண்டை
தேவையான பொருட்கள்
- பொறி 2 கப்
- நுனிக்கிய வெல்லம் அரை கப்
- நெய் இரண்டு தேக்கரண்டி
- தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது
- சிறிது ஏலக்காய் பொடி
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தை நன்கு கம்பி பதத்திற்கு காய்த்து, வாடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
- ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, தேங்காய் துருவல், ஏலக்காய் மற்றும் பொறியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- இந்த பொரியுடன் வெல்லப் பாகை ஊற்றி, கையில் சிறிது நெய் தடவிக் கொண்டு, உருண்டை பிடிக்க வேண்டும்
- பொறி உருண்டை தயார்(vinayakar chaturti)
4. வேர்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்
- பச்சை வேர்கடலை 1 கப்
- நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
- கடுகு / உளுந்து / ஒரு தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் 5
- கருவேப்பிள்ளை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- தேங்காய் துருவல் கால் கப்
- உப்பு
செய்முறை
- வேர்கடலையை 2 மணி நேரம் ஊற வைத்து, பின் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான உப்பையும் சேர்த்து வேக வைக்க வேண்டும்
- ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்த பின், அதில் கடுகு, உளுந்து மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வருக்க வேண்டும்(vinayakar chaturti)
- இதனுடன் கருவேப்பிள்ளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- தேவை பட்டால் சிறிது இஞ்சி தட்டி சேர்த்துக் கொள்ளலாம்
- இப்போது வேக வைத்த வேர்கடலையை சேர்த்து வதக்க வேண்டும்
- இறுதியில் கொத்தமல்லித் தலை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும்
- வேர்கடலை சுண்டல் தயார்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Youtube