logo
ADVERTISEMENT
home / Celebrity Weddings
சோனம் மற்றும் தீபிகா *தங்க தெய்வம்* வெவ்வேறு வடிவங்களில் வருவாள் என்று நிரூபிக்கிறார்கள்!

சோனம் மற்றும் தீபிகா *தங்க தெய்வம்* வெவ்வேறு வடிவங்களில் வருவாள் என்று நிரூபிக்கிறார்கள்!

 

நேற்று இரவு நம்மைப்போன்ற பொதுவானவர்கள் அரிதாக பார்க்கக் கூடிய- ஒரு இராஜ ஜோடி, ஒரு  இராஜ வரவேற்பு கொண்டிருப்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். அவர்களின் மும்பை விழாவில் வெள்ளை மற்றும் பொன் நிறத்தால் அமைத்திருந்த உடையில் தீப்வீர் முற்றிலும் நேர்த்தியாக காணப்பட்டார். அவர்கள் சிரித்தார்கள், ஷட்டர்பக்ஸ்க்கு போஸ் கொடுத்தார்கள் மேலும் காதல் எப்படி இருக்கும் என்று தன்னகப்படுத்தி காட்டினார்கள்.

டிபியை பார்க்கையில், எனக்கு மற்றொரு பாலிவுட் மணப்பெண்(bride) அவளுடைய மெஹந்தி விழாவிற்கு வெள்ளை மற்றும் பொன் நிறத்தில்  உடை அலங்கரித்திருந்தது நினைவிற்கு வந்தது. ஆமாம், சோனம் கபூர் ஒரு வெள்ளை மற்றும் பொன் நிற லெஹெங்காவில் மிகத் நேர்த்தியாகத் தெரிந்தார்.

தீபிகா-சோனம்-திருமண தோற்றங்கள் 

தீபிகா மற்றும் சோனம் இருவரும் வெள்ளை மற்றும் தங்கம் ஆகிய  கிளாசிக் வண்ணத்தை தங்கள் திருமண(wedding) விழாவிற்கு தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் அவர்களுடைய அலங்காரம் ஒரே நிறங்களில் இருந்தாலும் இறுதி தோற்றம் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

இந்த வடிவமைப்பாளர் ஒரு பாலிவுட் மணப்பெண் விரும்பி போலும்

தீபிகா மற்றும் சோனம் அபு ஜானி மற்றும் சந்தீப் க்ஹோஸ்லா ஆகியோரின்படி உடுத்தியிருந்தார்கள் மேலும் உண்மையில் இந்த உடை வடிவமைப்பாளர் இருவரும் அதிகம் விரும்பப்பட்டார்கள். அவர்களுடைய பட்டியலில் இருந்து பிரியங்கா சோப்ரா கூட ஒரு சூட் உடுத்தியிருந்தார் மேலும் அவர் அவருடைய ரோகாவில் அதிரவைப்பதாக தோன்றினார்.

ADVERTISEMENT

சிக்கலான எம்பராய்டரி அவ்வாறே இருந்தது

Sonam - DP1

படத்தின் ஆதாரம்: இன்ஸ்டாகிராம்

அவர்களின் இரண்டு லெஹெங்காக்களும் ஒரே விதமான எம்பிராய்டரி வேலைப்பாடு செய்திருந்தது. அவர்கள் இருவர் உடையிலும் சிகன்கரி விவரங்கள் இருந்தது மேலும் அவர்கள் மிகவும் அதிரவைப்பதாகத் தோன்றினார்கள். வெள்ளை மீது வெள்ளை அந்த கம்பீரமான மற்றும் கிளாசிக் உணர்வை தருகிறது, சரியா!?

ADVERTISEMENT

லெஹெங்காவின் ஸ்டைல் துருவங்களைத் தாண்டி இருந்தது

நிறங்கள் ஒன்றாக இருந்தாலும், வேலைப்பாடும் மற்றும் வடிவமைப்பாளர்களும் ஒரே விதமாக இருந்தனர், இருப்பினும் லெஹெங்காகள் முற்றிலும் மாறுபட்டிருந்தது. இந்த பாணியின் காரணாமாக சோனம் அதை இளமையாகவும் மற்றும் புதிதாகவும்  பின்பகுதி இல்லாத இரவிக்கை வைத்திருந்தார் அதுபோல் தீபிகா நிறைய இராஜ மற்றும் நேர்த்தியான பாணியில் பாஜிராவ் ரன்வீரின் மஸ்தானியாக இருந்தார்.

 

முடிதான் எல்லா வித்தியாசத்திற்கும் காரணம்

இந்த விழாவிற்கு சோனமின் முடி அமைப்பு ஒருவேளை என்னுடைய விருப்பத்திற்கு உகந்த ஒன்று, அவர் அதை எல்லாவற்றையும் மேலே நீளமான பின்னலில் கட்டியிருந்தார் மேலும் கஜ்ராஸ் வைத்து அதை அலங்கரித்திருந்தார். டிபி (எப்போதும் போல்) அவருடைய காப்புரிமை பெற்ற அவர் எல்லா விழாவிற்கும் அணிந்து கொள்ளும் பன் திரும்பவும் வைத்து கவனமாக அதை கையாண்டு கம்பீரமான தோற்றத்தை அளித்தார்.

பெண்கள் ஆபரணங்கள் அணிய விரும்புவர்

Sonam - DP2

ADVERTISEMENT

படத்தின் ஆதாரம் –இன்ஸ்டாகிராம்

சோனம் முத்துக்கள் கொண்ட குந்தன் சோக்கரும் அதனுடன் ஒரு மாங் டிக்கா மற்றும் ஜும்க்கா நகைகள் அணிய தேர்வு செய்திருந்தார் ஆனால் தீபிகா அவருடைய வைரங்களும் மற்றும் முத்துக்களும் சேர்த்து தயாரித்த ராணி ஹாரத்தில், “மகாராணிக்கு வழி விடுங்கள்” என்று சொல்லும் அளவிற்கு அணிந்திருந்தார். சோனமின் நகைகள் அவருடைய தாயாரின் லேபிளுடன் இருந்தது ஆனால் டிபியின் நகைகள் அபு ஜானி மற்றும் சந்தீப் க்ஹோஸ்லா வடிவமைத்திருந்தார்கள்.

பலோ லட்கே, தோனோ பலோ லட்கே

துப்பட்டா பாணி முற்றிலும் வேறுபட்டிருந்தது மேலும் அதுதான் எல்லா வித்தியாசத்தையும் தந்தது. தீபிகா இரட்டை துப்பட்டா அணிந்திருந்தார், ஒன்று தங்க பார்டருடன் மின்னி பிரகாசத்துடன் அவர் தலையை மூடி இருந்தது மேலும் மற்றொன்று புடவை மாதிரி குறுக்கே தொங்க விட்டிருந்தார். சோனம் இயல்பாக ஒரு துப்பட்டாவை மட்டும் அவர் தோளில்  தொங்க விட்டிருந்தார்.

அதனால தோழிகளே யாரு அதை அழகாக அணிந்திருந்தார்கள்?!

ADVERTISEMENT
01 Dec 2018

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT