logo
ADVERTISEMENT
home / Bollywood
இரண்டு மாதக் குழந்தையோடு 6300 அடி உயர மலை சிகரத்திற்கு ட்ரெக்கிங் ! சமீரா ரெட்டி ராக்கிங்!

இரண்டு மாதக் குழந்தையோடு 6300 அடி உயர மலை சிகரத்திற்கு ட்ரெக்கிங் ! சமீரா ரெட்டி ராக்கிங்!

சமீரா ரெட்டி நடித்த போது இருந்ததைக் காட்டிலும் தற்போது இணையவாசிகளால் அதிக புகழ அடைந்தவர் என்றால் அது தவறில்லை. தமிழில் வாரணம் ஆயிரம் திரைப்படம் இவருக்கு நல்ல ரசிகர்களைக் கொடுத்தது.                                  

மேக்னா எனும் கதாபாத்திரத்தி ரசிகர்கள் மறந்து விட முடியாதபடிக்கு சமீரா அனைவர் மனதிலும் இடம் பிடித்தார், அதன் பின்னர் ஒரு சில படங்களோடு தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 2014ம் வருடம் தொழிலதிபர் அக்ஷய் வர்த்தேவை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்தார்.                                          

முதலில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இரண்டாவது குழந்தைதான் சமீராவின் இன்ஸ்டா பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டது. கர்ப்பமானது முதல் சில புகைப்படங்களை சமீரா (sameera) பதிவிட கர்ப்பிணி இப்படி செய்யலாமா என ஒரு சிலர் கேட்க உடனே சமீரா அதனையே தன்னுடைய வாடிக்கையாக்கினார்.

 

ADVERTISEMENT

நீருக்கடியில் வீங்கிய வயிறுடன் சமீரா (sameera) நடத்திய போட்டோ ஷூட் இணையத்தைக் கலக்கியது. கூடவே தன்னுடைய தாய்மை அழகை மேக்கப் இல்லாமல் வீடியோ எடுத்து தாய்மையின் வரம் பற்றி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சமீரா ரெட்டி.

அதன் பின்னர் பிரசவம் முடிந்து முதன் முதலில் குழந்தையை உலகிற்கு காட்டியது, பிரசவத்திற்கு பின்பான எடை குறைத்தல் பற்றிய கருத்துக்கள் எனப் பெண்களுக்கு பல உதாரணம் காட்டி அனைவரையும் கவர்ந்தார் சமீரா.

தற்போது எல்லாவற்றிற்கும் மேலாக பிறந்து இரண்டு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை சுமந்தபடி கர்நாடகாவின் உயர்ந்த மலை சிகரமான முல்லையா நாகிரி மலையில் ட்ரெக்கிங் சென்று அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார் சமீரா ரெட்டி.

6300 உயர அடி மலை சிகரத்திற்கு பிரசவம் முடிந்த இரண்டு மாத பச்சை உடம்பில் பச்சிளம் குழந்தையையும் தூக்கிக் கொண்டு சமீரா ரெட்டி ட்ரெக்கிங் சென்றதற்கு பாராட்டும் அதே சமயம் விமர்சனமும் இரண்டுமே இணையத்தில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

சமீராவின் ( sameera) மன வலிமை மற்றும் உடல் வலிமையை பாராட்டினாலும் ஒரு சிலர் பச்சிளம் குழந்தையை வைத்துக் கொண்டு இத்தகைய சாகசம் தேவையா என்கிற கேள்வியையும் அக்கறையோடு எழுப்பி வருகின்றனர்.

 

இதற்கு பதில் அளித்திருக்கும் சமீரா , பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் மனநிலை சோர்ந்து காணப்படும். உற்சாகம் இல்லாமல் இருக்கும். அதனைத் தவிர்க்கவே எனக்குப் பிடித்த வேலைகளை செய்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனை மருத்துவர்களும் தாய்மை அடைந்த பெண்ணின் உடல் நிலை ஒத்துழைத்தால் செய்யலாம் எனக் கூறுகின்றனர். ஆனாலும் தட்பவெப்பம் மாறுபடும் 6300 அடி உயர மலை பயணம் இரண்டு மாதக் குழந்தைக்கு கொஞ்சம் ரிஸ்க்கான செயல்தான். அதைப் பற்றி பேச அதனால் இப்போது முடியாது என்பதுதான் உண்மை.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                               

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

02 Oct 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT