logo
ADVERTISEMENT
home / Books
ததும்பி வழியும் காதலில் உங்களைக் கரைத்துக் கொள்ள நீங்கள் தயாரா!

ததும்பி வழியும் காதலில் உங்களைக் கரைத்துக் கொள்ள நீங்கள் தயாரா!

காதலர் தினத்திற்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தொடங்கும்போதும் இந்த நாளை காலண்டரில் குறித்து வைத்த படியே சிலரது கனவுகள் ஆரம்பிக்கும். தனியே இருப்பவர்கள் இந்த நாளிற்குள் துணை கிடைத்து விடாதா என்று ஏங்குவார்கள்.

ஒரு சிலரோ காதலுக்கென்று எதற்கு ஒரு தனி நாள் வருடம் 365 நாளுமே எங்களுக்கு காதலர் தினம்தான் என்பார்கள். இப்படி எப்போதும் காதலில் திளைத்திருக்க நீங்கள் தயார் எனில் இனி வரப் போகும் விஷயங்கள் உங்களுக்காகத்தான்.

இங்கே சில புத்தகங்களை பற்றிய அறிமுகத்தை நான் தரப் போகிறேன். அது உங்கள் வாழ்வில் காதலை மென்மேலும் ததும்ப செய்யும் என்று நம்புகிறேன் .

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் காதல் குறித்து ஷேக்ஸ்பியர் ,ஜேன் ஆஸ்டின் ,நிக்கோலஸ் ஸ்பார்க் மட்டுமல்ல மேலும் சில எழுத்தாளர்களும் காதலை எழுதித் தள்ளியிருக்கிறார்கள். எல்லா நாவலிலும் நாயகன் சரித்திர கால வீரனாகவே இருக்க முடியாது எல்லா நாயகியும் சோகமாகவே இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. எல்லாம் கலந்து கட்டிய ஒரு புத்தக கதம்பத்தை உங்களுக்கு தருகிறேன்.

எப்போதும் விரும்பக் கூடிய ரொமான்டிக் (romantic) நாவல்கள்

Pride & Prejudice by Jane Austen

திரு டார்சி மற்றும் எலிசபெத் இவர்கள் இருவரின் காதல் கதைதான் இந்தப் புத்தகம். இவர்களின் காதலும் அதற்கு சமமான வெறுப்பும் பென்னட் குடும்பத்தையே தலைகீழாக்குகிறது. இந்த நாவலின் உண்மை புத்தகத்தை வாங்கிப் படிக்கும்போது வாலிபத்தின் அற்புதத்தை உணர்வீர்கள்.

ADVERTISEMENT

இதன் விலை 397 இங்கே வாங்கவும்.

Love Story by Erich Segal

காதல் என்பது எப்போதும் மகிழ்ச்சியான கதைகளை மட்டும் சொல்வதில்லை. நிறவெறி, சாதி வேறுபாடு பாலின ஆதிக்கம் , எனப் பல காயங்களையும் சேர்த்தேதான் சொல்கிறது. இப்படி ஆழமான காதலைப் பற்றி படிக்க விரும்பினால் நீங்கள் படிக்க வேண்டிய புத்தகம் Love Story by Erich Segal.

ADVERTISEMENT

இதன் விலை 99 இங்கே வாங்கவும்

The Notebook by Nicholas Sparks

நிகோலஸ் ஸ்பார்க்கின் இந்தப் புத்தககம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலான ஒன்றாகும். இதனை படிக்க சொல்லி எனக்கு அறிமுகப்படுத்தியவர் தமிழில் தனக்கென ஒரு தனி பாணியும் இடத்தையும் பிடித்த ஒரு முக்கியமான இயக்குனர். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது அதன் விரிவாக்கத்தில் உங்களை நீங்கள் நிச்சயம் மறப்பீர்கள். நாயகியின் வீட்டிற்கு வெளியே ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களில் உங்களை நீங்கள் சாய்த்துக் கொண்டபடி கதையைப் புரட்ட ஆரம்பிப்பீர்கள். ஒரு மழை நாளில் இதனை நீங்கள் வாசித்தால் மிக அற்புதமாக இருக்கும்.

இதன் விலை 325 இங்கே வாங்கவும்

ADVERTISEMENT

The Princess Bride by William Goldman

சாகசங்களும் நாடகத்தன்மையும் கொண்ட ஒரு கிளாசிக் கலவைதான் இந்தப் புத்தகம். பழைய பள்ளி நாட்களை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு ஈடாக சொல்லியிருக்கும் கதை உங்களை சுவாரசியமாக்கும். இந்த நாவலை பல்வேறு நாடகங்களில் பயன்படுத்தி விட்டனர். இருந்தாலும் இதன் அசல்தன்மை என்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

இதன் விலை 500 இதனை இங்கே வாங்கவும்

இளமை பொங்கும் பருவத்தினருக்கான ரொமான்டிக் நாவல்கள்

ADVERTISEMENT

எப்போதும் இளமையாக இருப்பவர்களுக்கும் மற்றும் 18ல் இருந்து 35 வயது வரை உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் ஜான் கிறீன் அல்லது ஜென்னி ஹான் போன்றவர்களின் கதைகள்தான் விருப்பமாக இருக்கும். வேறு சில புத்தகங்களையும் இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். இதனை மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காது.

To All The Boys I’ve Loved Before by Jenny Han

இந்தப் படத்தை நீங்கள் நெட் பிளிக்ஸ் ஸில் கண்டு களித்திருப்பீர்கள் மற்றும் மகிழ்ந்திருப்பீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் இதன் அசல் கதையையும் படிக்க வேண்டும். திரைக்கதையில் சொல்லப்படாத பல்வேறு நுணுக்கங்கள் விளக்கங்கள் பாத்திரப்படைப்புகள் நாவலில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும். இதன் அடுத்த வெர்ஷன்கள் மேலும் இரண்டு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. இன்னும் படமாக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதன் விலை 385 இங்கே வாங்கவும்

Eleanor & Park by Rainbow Rowell

எழுத்தாளரின் புதுமையான நவீனமான நகைச்சுவை உணர்வும் எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் விதமும் இந்தக் கதையின் சிறப்பம்சம். இது பதின்ம பருவத்தில் உள்ளவர்களுக்கான வரப்பிரசாதம்.

இதன் விலை 278 இங்கே வாங்கவும்

ADVERTISEMENT

Looking For Alaska by John Green

எழுத்தாளரின் முதல் நாவல் மற்றும் மிக சிறந்த நாவலும் கூட. அலாஸ்கா வை உலகிற்கு அறிமுகப்படுத்தும் இந்த நாவலின் இயற்கை ரசம் உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் இயற்கை உணர்வைத் தட்டி எழுப்பும்.

இதன் விலை 209 இங்கே வாங்கவும்

Before I Fall by Lauren Oliver

ADVERTISEMENT

எல்லா புத்தகங்களுமா வெற்றி பெற்ற திரைப்படம் ஆகிறது ? நிச்சயமாக, பெரும்பாலானவை வெற்றி பெறுகின்றன. அதில் ஒன்றுதான் மேற்கண்ட புத்தகம். பாத்திரங்களின் உணர்வுகளை மிக சரியாக படம்பிடிக்கப்பட்டுள்ளது இந்தக் கதையில் மட்டும்தான். நாயகி சமந்தாவின் பார்வை வழியே இந்த உலகத்தை நாம் காணும் போது அந்த கணங்கள் அற்புதமானது.

இதன் விலை 337 இங்கே வாங்கவும்.

All The Bright Places by Jennifer Niven

இருவேறு எதிரெதிர் துருவங்கள் இணையும்போது என்னாகும் என்பதையே இந்தக் கதை நமக்கு சொல்கிறது. சாக விரும்பும் ஒரு இளைஞனிடம் இருந்து வாழ்வதைக் கற்றுக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதைதான் இந்தப் புத்தகம்.

ADVERTISEMENT

இதன் விலை 319 இங்கே வாங்கவும்

இந்திய எழுத்தாளர்களின் காதல் பார்வைகள்

Those Pricey Thakur Girls by Anuja Chauhan

ADVERTISEMENT

இது இந்திய வெர்ஷனான Pride & Prejudice என்று மேலோட்டமாக படித்தவர்கள் சொல்லலாம். ஆனால் ஆழமாக போனால்தான் இதன் உண்மைத்தன்மை உங்களுக்குப் புரிய வரும். ஐந்து சகோதரிகள் அவர்களின் ஐந்து விதமான காதல்கள் மற்றும் அதற்கான தேடல்கள்தான் கதை.

இதன் விலை 218 இங்கே வாங்கவும்.

Devdas by Sarat Chandra Chattopadhyay

இந்தியாவில் வாழ்ந்து கொண்டு தேவதாஸ் கதை தெரியாமல் யாருமே இருக்க முடியாது. இந்தக் கதையை பல்வேறு வடிவங்களில் ஒவ்வொருவரும் எழுதியபடியேதான் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் சரத்தின் எழுத்துக்களில் கல்கத்தா நம்முள் கலக்கும் மாயத்தை உணர முடியும்.

ADVERTISEMENT

இதன் விலை 189 இங்கே வாங்கவும்

When Dimple Met Rishi by Sandhya Menon

அதே வழக்கமான ஒரு பையன் ஒரு பெண்ணை சந்திக்கும் கதைதான் என்றாலும் இந்தக் கதையில் பெற்றோர்கள்தான் இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்பதில் வித்யாசத்தை காட்டியிருக்கிறார் எழுத்தாளர் சந்தியா. இந்தியக் குடும்பங்களில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் நகைச்சுவையாகக் காட்டியிருக்கும் இந்தப் புத்தகம் மினி பாலிவுட் மசாலா

இதன் விலை 340 இங்கே வாங்கவும்

ADVERTISEMENT

Nick Of Time by Komal Mehta

இது நிச்சயமாக நிக் ஜோனஸ் பற்றி எழுதப்பட்ட புத்தகம் அல்ல என்பதை நான் உறுதியாக சொல்வேன் ஏனெனில் அவரின் கதையை நான் முன்னமே படித்திருக்கிறேன். இது காதல் வெறுப்பு மற்றும் முக்கோண காதலின் கலவையாக இருக்கும்.

இதன் விலை 117 இங்கே வாங்கவும்

The Story Of A Long-Distance Marriage by Siddhesh Inamdar

ADVERTISEMENT

இந்தக் கதை இரண்டு நபர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் மிகப் பெரிய மாற்றத்தின் பயணத்தைக் பற்றியது. இதன் எழுத்தாளர் திருமணத்தைப் பற்றி பல சுவையான சுவாரஸ்யமான விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

இதன் விலை 159 இங்கே வாங்கவும்

2018ன் சிறந்த ரொமான்டிக் நாவல்கள்

ADVERTISEMENT

Surprise Me by Sophie Kinsella

திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் தொலைந்து போன காதலின் பொறியைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் கதை. வாழ்வில் தொலைந்ததை மீட்டெடுக்க விரும்பும் அணைத்து காதல் ஜோடிகளும் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்.

இதன் விலை 480 இங்கே வாங்கவும்

Every Breath by Nicholas Sparks

ADVERTISEMENT

ஒரு என்கவுண்டர் ரொமான்டிக்காக முடிந்தால் எப்படி இருக்கும். அதைத்தான் இந்தக் கதை நமக்கு சொல்கிறது. எப்போதும் நிகோலஸ் ஸ்பார்க் அழகான கதைகளை சொல்வதில் வல்லவர் முடிவு எப்போதும் சந்தோஷமாக இருக்காது என்பது இவருக்கான முடிவு அல்ல !

இதன் விலை 319 இங்கே வாங்கவும்

From Lukov with Love by Mariana Zapata

நீங்கள் பயந்து கொள்ளாத ஒரு ரோலர்கோஸ்டர் பயணமாக இந்தக் கதை இருக்கும். ஒரு ஸ்கேட்டர் தனது தொழிலை காதலுக்காக விட்டுக் கொடுக்கும் கதை. முடிவில் என்ன நடக்கும் என்பதில் சுவாரசியம் கூட்டியிருக்கிறார் எழுத்தாளர். கதை முழுவதும் நாயகியோடு நாமும் பயணிப்பதை உணரலாம்

ADVERTISEMENT

இதன் விலை 1685 இங்கே வாங்கவும்

One Small Thing by Erin Watt

தனது சகோதரியின் மரணத்துக்கு காரணமான நபரின் மேல் காதலில் விழும் ஒரு பெண்ணின் கதை. அவனது சோக கதையில் தன்னைப் பறிகொடுத்து விடும் நாயகி இறுதியில் என்ன முடிவெடுக்கிறாள் என்பது ஏற்கனவே கேட்ட கதையாக இருக்கலாம். ஆனாலும் படித்தால்தான் இதன் வித்யாசம் புரியும்

இதன் விலை 992 இங்கே வாங்கவும்

ADVERTISEMENT

காமரசம் ததும்பும் சில ரொமான்டிக் நாவல்கள்

Outlander by Diana Gabaldon

துரோகம் , வேட்கை மற்றும் போர் இது அத்தனையையும் இந்த நாவலில் நீங்கள் வாசிக்க முடியும். ஒரு செக்சி நர்ஸ் காயப்பட்டு கிடைக்கும் ஒரு போர்வீரனை எப்படி அணுகுகிறாள், தனக்குள்ளாகவே போர் புரிந்து அந்த வீரன் இதனை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.

ADVERTISEMENT

இதன் விலை 450 இங்கே வாங்கவும்

50 Shades Of Grey Series

இருக்கலாம் இதனை நீங்கள் படமாகவே பார்க்கலாம் என்று நினைக்கலாம்தான். ஆனால் நாவல் எப்போதும் அற்புதமான கதையம்சத்தை உடைக்காமல் தருவது. படிக்கும்போது அந்தக் கதாபாத்திரங்களை நீங்கள் பின் தொடரும்போது உங்களுக்கும் அவருக்குமான பிணைப்பு அதிகரிக்கும். படத்தில் தவறவிடப்பட்ட பல ட்விஸ்ட்கள் புத்தகத்தில் இருக்கிறது.

இதன் விலை 619 இங்கே வாங்கவும்

ADVERTISEMENT

The Sleeping Beauty Quartet by Anne Rice

இதன் நான்கு புத்தகங்களில் The Claiming of Sleeping Beauty, Beauty’s Punishment, Beauty’s Release, and Beauty’s Kingdom, எல்லாமே க்ரே சீரியஸை போன்ற காமத்தை தூண்டும் அடிமை முதலாளி வகையைக் கொண்டதுதான். இது டார்க் வகையை சேர்ந்ததாக இருந்தாலும் நடுத்தர ரொமான்ஸை விரும்புபவர்கள் இந்தக் கதையை விரும்புவார்கள்.

இதன் விலை 486 இங்கே வாங்கவும்

Tremble by Tobsha Learner

ADVERTISEMENT

இது நவீன பெண்மணியின் 9 விதமான காமத்தின் ருசிகளைப் பற்றி பேசுகிறது. காமம் , நேர்மை, துரோகம் என எல்லாவற்றிலும் இந்தக் கதை புகுந்து வெளியே வருகிறது. படிப்பவர்களுக்கு விருந்துதான்.

இதன் விலை 359 இங்கே வாங்கவும்

Evidence Of Desire by Lexi Blake

ஒரு கொலையில் மர்மமாக தொடங்கும் இந்தக் கதை குற்றவாளி தனது வக்கீலோடு எப்படிக் காதலில் விழுகிறாள் என்று தொடர்கிறது. மில்ஸ் அண்ட் பூன்ஸ் கதைகளில் இருந்து மாறுபட்டு நல்ல ஒரு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்கிறது இந்தக் கதை

ADVERTISEMENT

இதன் விலை 811 இங்கே வாங்கவும்

—-

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT

 

 

24 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT