நம்மில் பலருக்கும் பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கொஞ்சம் கேப் கிடைத்தாலும் தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம்(sleep) தூக்கம்(sleep), தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று இன்றும் பல பேர் ஆசைப்படுவர். தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில் இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தற்போது தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும். குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம்(sleep) தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது.
மனிதர்களின் தூக்கம்(sleep) குறித்து முன்னரே ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என தெரிவித்திருந்தனர்.
அதுவும் கட்டுப்பாடற்ற தூக்கம்(sleep) உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர்கள் கூறி ”குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம்(sleep) மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும்”எனறும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் இறப்பதற்கான அபாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது. அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
பகலில் தூங்குவதால் ஏற்படும் பாதிப்பு
குறிப்பாக இரவில் நைட் ஷிஃப்ட் வேலைப்பார்த்து விட்டு பகலில் தூங்குபவர்கள், காலை, மதியம் உணவை சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்குவதும்(sleep), இரவில் உணவை உண்டுவிட்டு உறங்காமல் வேலைக்குச்செல்வதும், உடலில் உள்ள சமநிலையை கெடுத்து விடுகிறது. இப்படி வேலைக்குச் செல்பவர்கள் அதிகபட்சமாக பகல் நேர உணவுகளைத் தவிர்த்துவிட்டு, நீண்ட நெடிய உறக்கத்தை மேற்கொள்ளலாம். இரவில் 3 முதல் 4 மணி நேர இடைவெளி விட்டு, உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
அடிக்கடி ஷிஃப்ட் முறையில் வேலைகள் மாறிக்கொண்டேயிருந்தால், திடீரென்று உணவுப் பழக்கமும், தூக்கமும் மாற்றிக் கொண்டே இருக்கவேண்டிய நிலை ஏற்படும். இது, உடலில் தேவையில்லாத உஷ்ண நோய்களை உண்டாக்கி விடும். முடிந்தவரை இரவு நேர வேலைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
காலை, மதியம் சாப்பிட்ட உணவைவிட, குறைந்த கலோரி அளவிலான எளிதில் செரிக்கக்கூடிய உணவை இரவில் உட்கொள்ளவேண்டும். மாவுச்சத்து, மாவும், புரதமும் கலந்த சரிவிகித உணவாக அது இருக்கட்டும். முடிந்தவரை இரவு வேளையில் ஹோட்டல், ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதே சிறந்த தீர்வு.
காலை நேரத் தூக்கத்தையும் சேர்த்து ஒருவர் 8 மணி நேரம் தூங்கி விட்டால் பிரச்னை இல்லை. காலையில் சீக்கிரமே எழாதபோது, நம் உடல் சூரிய ஒளி படாதபோது, நம் உடலில் வைட்டமின்கள் குறைவதற்கான வாய்ப்பாகவும் அமைந்துவிடும். தாமதமாக எழும்போது தேவையில்லாத மனச்சோர்வும், பதற்றமும் தொடரும். தொடர்ச்சியான பதற்ற நிலை, சிலருக்கு நெஞ்சு வலியைக்கூட உண்டாக்கலாம்.
சுட சுட சுவையான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி?
ஸ்ருதி ஹாசனின் காதல் முறிவிற்கு இது தான் காரணமா? சோகத்தில் ஸ்ருதி
சண்டைக்கு பிறகு கணவன் மனைவி சமாதானம் ஆவது எப்படி?
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo