logo
ADVERTISEMENT
home / Dad
பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்படி இருந்தால் சிறந்தது? ஓர் உளவியல் பார்வை.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்படி இருந்தால் சிறந்தது? ஓர் உளவியல் பார்வை.

உலகில் மிக உன்னதமான உறவு என்பதும் அதே சமயம் மிகவும் பொறுப்பு மிக்க உறவு என்பதும் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவுதான். மற்ற உறவுகள் என்று வரும்போது நாம் இவ்வளவு கவனமோ அக்கறையோ செலுத்த தேவையிருக்காது. 

குழந்தை என்பது இந்த பூமிக்கு வருகையில் அதற்கு எதுவும் அறிவுறுத்தப்பட்டு இங்கே வருவதில்லை. இன்னார்தான் உன் பெற்றோர் அவர்களிடம் நீ இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு அவை இங்கே வருவதில்லை. 

குழந்தைகள் முழுக்க முழுக்க உங்களால் உருவானவர்கள். உங்கள் மீதுள்ள நம்பிக்கையால் உயிரானவர்கள். நீங்கள் அவர்களை பாதுகாப்பீர்கள் என்பதை நம்பியே இந்த உலகிற்கு வருகிறார்கள். அவர்களை சரியானபடி புரிந்து கொள்தல் என்பதே மிகப்பெரிய கலை. சில தலைமுறைகளுக்கு முன்பைப் போல இல்லாமல் இந்தத் தலைமுறை பெற்றோர் நல்ல அறிவுடனும் தெளிவுடனும் இருப்பது சந்தோஷத்துக்குரியது. 

குழந்தைகளுக்கு எது நல்லது? ஹோம் ஸ்கூலிங்கா ட்ரெடிஷனல் ஸ்கூலிங்கா !

ADVERTISEMENT

pixabay, Youtube

சகோதர சண்டைகள்

பெற்றோர் குழந்தைகளிடம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அவர்களின் கண் பார்வை தூரத்திற்கு இறங்கி அமர்ந்து அவர்களோடு அவர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு நம்பிக்கை பிறக்கும்.  குழந்தைகள் உள்ள வீட்டில் சகோதர சண்டைகள் எப்போதும் நடந்தபடியே இருக்கும். 

இதற்கு காரணம் இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயம் பெற்றோர்கள் முதல் குழந்தையை புறக்கணிப்பதுதான். வேண்டும் என்றே இதை செய்வதில்லை என்றாலும் முதல் குழந்தை வேகமாக ஓடி வந்து தாயின் மடியில்  அமர விரும்பும்போது இரண்டாவது குழந்தை மடியில் கிடப்பதால் அதனைத் தாய் தடுக்க வேண்டி வரலாம். இதனால் முதல் குழந்தை மனம் உடைந்து போகும். 

ADVERTISEMENT

முதல் மனைவி இருக்க இரண்டாவது மனைவி தேடும் சமயம் முதல் மனைவிக்கு என்னென்ன வலிகள் தோன்றுமோ அதே மனநிலையில்தான் குழந்தையும் இருக்கும். இதனால்தான் அடிக்கடி சகோதர சண்டைகள் நிகழ்கின்றன. இதனை உடன் பிறந்தோரிடம் நிலவும் பகைமை என உளவியல் கூறுகிறது. இதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. 

பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் சமநிலையில் நடத்த தவறுவதால் ஏற்படும் எதிர் வினைகள்தான். இதனை சமாளிக்க இரண்டாவது குழந்தை உறக்கத்தில் இருக்கும் சமயம் முதல் குழந்தையை மடியில் வைத்துக் கொள்வது அவர்கள் எதிர்பாராத தருணங்களில் பரிசு கொடுப்பது தின்பண்டங்களை வாங்கி வந்து முதல் குழந்தையிடம் கொடுத்து பாப்பாவுடன் பகிர்ந்து உன்ன சொல்வது போன்ற பல விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்கலாம். இரண்டாவது குழந்தை பற்றி பேசும் போதெல்லாம் முதல் குழந்தை பற்றியும் பேசி இருவரையும் சமமாக நடத்தினால் போதுமானது. 

பள்ளிக் குழந்தைகளுக்கான சில சுவையான லன்ச் ரெசிப்பீஸ் !

ADVERTISEMENT

pixabay, Youtube

பெற்றோரின் வயதும் குழந்தைகளின் வயதும்

பொதுவாக எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தை பெற்று விட முடியாதுதான். ஆனால் குறிப்பிட்ட வயதுகளில் பெற்றோர் ஆகும் போது அதனால் குழந்தைகள் நலன் பாதிக்கப்படுவது உண்மைதான் என்கிறது உளவியல். 

அதிக வயத்துக்குப் பின்னர் பெற்றோர் ஆகும் சமயம் உங்களிடம் நிதானம் இருக்கும். பக்குவம் இருக்கும். ஆனால் ஒரு குழந்தையை குழந்தையாகவே அணுகுவதில் உங்களுக்கு பல சிரமங்கள் இருப்பதால் உங்களால் அதனை செய்ய முடியாமல் போகலாம். தவிர வயதான பின்னர் குழந்தை பெற்றுக் கொள்வதால் உடல் ரீதியானபாதிப்புகள்  தவிர மனரீதியான பாதிப்புகளும் நிகழ்கின்றன. 

இரண்டு தலைமுறைக்கு முன்னர் பெற்றோர் குழந்தைக்கான வயது வித்யாசம் என்பது 20 ஆக இருந்தது. அதனால் குழந்தைள் மனோநிலையில் அவர்களை அணுக பெற்றோர்களுக்கு சுலபமாகவே இருந்தது. இப்போதோ பெற்றோர் குழந்தைக்கான வயது வித்யாசம் என்பது 30 வருடங்கள் அல்லது அதற்கும் மேல் என்று ஆகிவிட்ட நிலையில் குழந்தைகள் நிறைய சந்தோஷங்களை இழக்கத்தான் வேண்டி இருக்கிறது. 

ADVERTISEMENT

உங்களது பொறுப்பான தன்மைகள் உங்கள் அனுபவங்களை குழந்தைகளுக்கு பழக்கி விடுவது சரியான விஷயம் அல்ல. அவர்களை அவர்களுக்கான தனித்துவத்தோடு அவர்களாகவே வளர விடுவதுதான் சரியான முறை. பேரன்டிங் (parenting) என்ற சொல்லுக்கு குழந்தை வளர்ப்பு என்கிற அர்த்தம் வராமல் பெற்றோராக இருத்தல் / நடந்து கொள்ளுதல் என்று அர்த்தம் வரும் வகையில் வைத்திருக்கிறார்கள். ஒருகட்டத்திற்கு பின்னர் குழந்தைகள் தங்களாகேவே வளர்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

pixabay, Youtube

ஒழுக்கம் அவசியமானது

குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஒழுக்கம் அவசியமானது. இல்லையெனில் நாளை அவர்கள் பெரியவர்கள் ஆகும்போது மற்றவர்களை அவர்கள் நடத்தும் விதம் என்பது முகம் சுளிக்க வைக்கலாம். ஒழுக்கமற்றவர்கள் பதவிக்கு வரும்போது அவர்களால் மற்றவர்கள் நோகடிக்கப்படலாம். அதிகார துஷ்ப்ரயோகம் என்பது ஒரு சமூகத்தின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி விடக் கூடிய தன்மை வாய்ந்தது.

ADVERTISEMENT

ஆகவே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்க நல்ல பெற்றோராக இருத்தல் மிக முக்கியமானது. ஒரு தலைமுறையை சரியாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்புணர்ச்சி உங்கள் கையில் இருப்பதாக நினைத்து அவர்களைக் கையாளுங்கள். அதற்காக நீங்கள் கீழ்கண்ட விஷயங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம். 

உணர்வுகளை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தும் திறன்

மென் திறன்கள்

விழுமியங்கள் (values)

ADVERTISEMENT

அறிவுக்கூர்மை

ஆக்கத்திறன்

உறவுகளை சிறப்பாக கையாளும் திறன்

உடல் மற்றும் மன நலம் பேணுதல்

ADVERTISEMENT

விளையாட்டு, நடனம், மொழிகள் போன்ற பாடத்திட்டங்களை தாண்டிய திறமைகள்

பணத்தை கையாளும் திறன்

வீட்டை நிர்வகிக்கும் திறன்

மேற்கண்டவற்றை குழந்தைகள் கையாள வாய்ப்பு தர வேண்டும். இவை இருந்தாலே நீங்கள் ஒரு நல்ல விதையை இந்த பூமியில் ஊன்றி விட்ட பெருமையை அடைய முடியும்.

ADVERTISEMENT

pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
24 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT