logo
ADVERTISEMENT
home / Celebrity Weddings
அம்பானி வீட்டு திருமணத்தில் நடைபெற்ற சுவாரசியங்கள்! காதலில் மிதந்த தம்பதிகள்

அம்பானி வீட்டு திருமணத்தில் நடைபெற்ற சுவாரசியங்கள்! காதலில் மிதந்த தம்பதிகள்

கடந்த வாரம் நடைபெற்ற ஆகாஷ் அம்பானி(ambani) ஷ்லோக்கா திருமணம் திரைதுறை பிரபலங்கள் திரண்டு வர மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஆட்டம் பாட்டத்திற்கு சற்றே குறைவில்லாமல் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் அனேக காரியங்கள் மிகவும் சுவாரசியமாக நடைபெற்றன.

குறிப்பாக ஷ்லோக்கா சிறு குழந்தைபோல் பேசிய காட்சிகள் மற்றும் நடந்துகொண்ட விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆகாஷ் அம்பானி(ambani) வெட்கப்பட்ட சில இடங்கள், தனது மனைவியாக வரபோகும் காதலியை காதல் நிறைந்த பார்வையுடன் பார்த்த காட்சிகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்தன.

இந்த ஆகாஷ் அம்பானி(ambani) வீட்டு திருமணக்கொண்டாட்டத்தில் அனைவரும் பிங்க் கலர் உடையில் மிக அழகாக இருந்தனர். திருமணத்தின் போது மணப்பெண் அணிந்திருந்த சிவப்பு கலர் உடை மிகவும் கச்சிதமாக எடுப்பாக பொருந்தியிருந்தது. அதற்கு ஏற்றார் போன்று மணப்பெண் அனிந்திருந்த பாரம்பரிய நகைகள் அவர் அழகை மேலும் அழகாக்கியது.

மணக்கோலத்தில் ஆகாஷ்(ambani) ஷ்லோக்கா இருவரும் மிகவும் அழகாக காதலுடன் மின்னிக்கொண்டிருந்தனர். திருமணத்தின் போது மணப்பெண்ணின் தாயார் கண்ணீர் வடித்த காட்சிகள் அனைவரையும் பாசத்தில் கட்டிப்போட்டது. இவர்கள் பள்ளிப்பருவம் முதல் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் திருமணம் தான் என்றாலும் நீண்ட நாள் காதல் கைகூடிய மகிழ்ச்சியில் இருவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர்.

ADVERTISEMENT

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ்(ambani) அம்பானியின் திருமண அழைப்பிதழ்லே பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது மேலும் குறிப்பிடத்தக்கது.

அந்த திருமண அழைப்பிதழை கண்டு பலரும் வாய் மேல் கை வைத்தனர். வெளியில் பெட்டில் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அழைப்பிதழ் உள்ளே விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியை திறக்கும் போது கோவிலில் கேட்பது போல மணியோசை கேட்கிறது. அதன் மேல் விலையுர்ந்த சில கற்களுடம் பொருத்தப்பட்டுள்ளன. இதையெல்லாவற்றையும் கடந்து அழைப்பிதழை திறந்தால் அதிலும் பிரம்மாண்டம். குறிப்பாக மணமக்களின் பெயரில் முதல் எழுத்து தங்கத்தினால் செய்யப்பட்டுள்ளது.

அதன் ஓரத்தில் வரும் டிசன்களும் தங்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கே மினி கோவில் போன்று தோற்றம் அளிக்கும் இந்த பத்திரிக்கை ஒன்றின் விலை 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவலும் பரவி வருகிறது.

திருமணம் முடிந்து பார்ட்டியில் போது தனது ஆசை காதலியை அனைவரின் முன்பு ஆகாஷ்(ambani) உதட்டோடு உதடு முத்தமிட்ட காட்சி அனைவரையும் ஆச்சரியத்திலும் வெக்கத்திலும் ஆழ்த்தியது. குறிப்பாக இந்த நிகழ்வை ஷ்லோக்காவே எதிர்பார்க்கவில்லை என்பது தான் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

12 Mar 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT