logo
ADVERTISEMENT
home / அழகு
நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில  மேக்கப் தவறுகள்

நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில  மேக்கப் தவறுகள்

நீங்கள் கல்யாணம், விழா காலம் என்று வரும் நாட்களில் ஒப்பனை செய்து கொள்வீர்களோ அல்லது அதன் மீது பிரியப்பட்டு தினம் புசுவீர்களோ , இதில் இந்திய  பெண்கள் செய்யக்கூடிய சில தவறுகள் (mistakes)உள்ளனர். நீங்கள் மேக்கப்பில் எக்ஸ்பெர்ட் ஆக இருந்தாலும் சரி இதை நாம் எல்லோரும் செய்து கொண்டு தான் இருக்கிறோம் , அறியாமல் புரியாமல் செய்துகொண்டுதான் இருக்கப்போறோம்! இதை உடனடியாக நிறுத்த மேலும் படியுங்கள் . இதை பற்றி தெரிந்து கொண்டு, உங்கள் ஒப்பனையை இன்னும் சிறப்பாக அமைத்து நீங்கள் இன்னும் நன்றாக தெரியலாம்!

மேட் சிறந்தது  என்று நினைத்தால் –

பெரும்பாலும் நாம் நம் முகத்தில் ஏற்படும் அந்த எண்ணெய் பசை கொண்ட அழுக்கான தோற்றத்தை நினைத்து பயப்படுவது உண்டு. இதற்கு தட்ப வெப்பமே காரணம்! அதனால் நாம் நம் வயதிற்கும் மேல் நம்மளை காட்டக்கூடிய ஒரு மேட் பாவுண்டேஷன் மற்றும் செட்டிங் பவுடர்களுக்கு  செல்கிறோம்.இது உங்கள் முகத்தில் ஒப்பனை சரியாக அமையாத (கேக்கி) ஒரு தோற்றத்தை அளிக்கும். அதனால், கனமான காம்பெக்ட்களை விட்டுவிட்டு, ஷீர் போவுண்டஷன் , ஈரத்தன்மை கொண்ட ஹயிலைட்டர்ஸ் மற்றும் பிபி கிரீம்களுக்கு மாறுவது நல்லது. ஏனெனில், உங்கள் சருமம் இயல்பாகவே பனித்துளிகள் போல ஈரப்பதத்துடன் இருக்கும் , மேட் அல்ல. இதை நீங்கள் பிரதிபலிக்க வேண்டியது அவசியம். .

காஜலை அதிகமாக பயன்படுத்துவது –

2-makeup-mistakes-all-Indian-girls-make

நாம் பார்க்கும் பார்வையில் மாயத்தை உண்டாகும் இந்த கோஹ்ல பென்சிலுடன் நாம் அனைவரும் ஒரு உண்மையான உறவை வைத்திருப்போம்! அனால் அதற்காக அதை மிகவும் அழுத்தி தடிமனாக பூசவேண்டாம். எனில் அது சிலருக்கு   நன்றாக அமைவதில்லை . ஒரு மிதமான கொடு வரைவது உங்களை இன்னும் அழகாக காட்டும். மேலும், அதை ஸ்மாட்ஜ் செய்து ஒரு ஸ்மோகி தோற்றத்தையும் குடுக்கலாம்!

ADVERTISEMENT

கோஹ்ல பென்சிலால்  வரக்கூடிய பாண்டா கண்கள் –

பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கரும் வளையம் இன்னும் அதிகமாக தெரிய காரணமே இந்த கண் மை தான். அதை நீங்கள் படுக்கும் முன் சுத்தமாக அகற்றி விட வேண்டும். அடுத்த நாள் மீண்டும் அதை மிதமாக பூசுங்கள். அல்லது ஒரு பழுப்பு நிற பென்சிலில் உங்கள் கீழ் கண்களை ஸ்மட்ஜ் செய்தால் அது உங்கள்  கண்களை இன்னும் பெரிதாக விழித்தது போல காண்பிக்கும்.

இலகுவான நிறங்களில் பாவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது –

4-makeup-mistakes-all-Indian-girls-make
பெண்களே .. தன்னுடைய நிறத்திற்கும் மாறாக ஒரு படி இலகுவான நிறத்தில் பாவுண்டேஷனை தேர்தெடுப்பதினால் அது உங்களை வெள்ளையாக காட்டாது! இது உங்கள் சருமத்தை இன்னும் ஒரு சாம்பல் நிறத்தில் ( க்ரே) காட்டும். ஆகையால், பாவுண்டேஷனை தேர்ந்தெடுக்கும்போது , உங்கள் மணிக்கட்டு இடத்தில தடவாமல், உங்கள் தாடை பகுதிகளில் தடவி போதிய வெளிச்சத்தில் டெஸ்ட் செய்யுங்கள். அதுவே உங்கள் உண்மையான நிறத்திற்கு ஏற்ற பாவுண்டேஷனை காட்ட உதவும்.

புருவங்களில்  –

உங்கள் புருவங்கள் நிச்சயம் உங்கள் முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும் என்பதுதான் நிஜம்! ஆகையால், புருவங்கள் மெல்லியதாக இருந்தால் அதை ஐ ப்ரோ பென்சிலை வைத்து சரி செய்யுங்கள். ஏனெனில், மெல்லிய புருவங்கள் உங்களை வயதானவர் போலவும் அடர்த்தியான ப்ரோ உங்களை  இளமையாகவும் காட்டும். உங்கள் பார்லர் நியமனம் புருவங்களை சுத்த படுத்தி ஒரு வரையறுக்கப்பட்ட வடிவத்தை கொண்டுவர வேண்டும்.

பகலில் ஒரு பிரகாசமான ஐ ஷாடோ –

6-makeup-mistakes-all-Indian-girls-make
பளபளக்கும் நிறங்கள் – அதாவது ஷிம்மர் ( மினுக்கும் வனங்கள்) , ஊதா, எலெக்ட்ரிக் ப்ளூ இவைகளை நீங்கள் பகலில் பூசினால் அது உங்களை இன்னும் அதிக ஒப்பனை விட்டதுபோல் காண்பிக்கும். இதுபோன்ற நிறங்களை இரவில் வெளியில் செல்லும் பொது பூசிக்கொண்டு, பகலில் இலகுவான நிறங்கள் – பிங்க், நுட் , பழுப்பு மற்றும் டொப்(taupe)  பூசுவது உங்களை இன்னும் பளபளப்பாக காட்ட உதவும்.

ADVERTISEMENT

லிப்ஸ்டிக் மற்றும் ப்ளஷ் பொருந்தவில்லை –

மிகைப்படுத்திய ஒப்பனையை தவிர்க்க பிங்க் ப்ளஷ்ஷை பிங்க் லிப்ஸ்டிக் உடன் பூசுங்கள், ஆரஞ்சு லிப்ஸ்டிக் உடன் பீச் ப்ளஷ், ரெட் லிப்ஸ்டிக் உடன்   பெர்ரி ப்ளஷ் மற்றும் பீச் லிப்ஸ்டிக்கை ஒரு நூற்றல் பீச் ப்ளஷுடன் பொருத்தமிட்டு அணியுங்கள். இது ஒரு மிக முக்கியமான ஒப்பனை விதி. எக்காரணத்திற்கும்   இதை தவற விடாதீர்கள்.

வறண்ட சருமத்தில் ஒப்பனை செய்வது –

காரியங்களை போல், இந்தியர்கள் தன்  சருமத்தை ஒழுங்காக பராமரிப்பது இல்லை! அதனால், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், அதை முதலில் நீங்கள் ஒரு நல்ல மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தி மேன்மை ஆக்குவது முக்கியம். சருமத்தில்  ஈரப்பதம் மிக அவசியம். இல்லாவிட்டால் , உங்கள் சருமத்தில் எந்த மேக்கப்பும் படியாத (கேகி) தோற்றத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

விகாரமான வெளிச்சத்தில் ஒப்பனை –

எப்போதும் உங்கள் ஒப்பனையை ஒரு விகாரமான வெளிச்சத்தில் பூசுவதை தவிர்க்கவும். சூரிய  வெளிச்சத்தில் உங்கள் ஒப்பனையை பூசி பாருங்கள். மேலும், உங்கள் சருமத்தில் முதலில் ஒரு மொய்ஸ்சுரைசர், அதன் மேல் ஒரு ப்ரைமர் பூசிக்கொண்டு பாவுண்டேஷனை பூசுவது அவசியம். இதனால் உங்கள் சருமம் இயல்பாகவே ஜொலிக்கும் தோற்றத்தை பெரும்.

மேக்கப்புடன் உறங்குவது –

பல பெண்கள் படுக்கும் முன் ஒப்பனையை சோம்பலின் காரணமாக சுத்தம் செய்ய வெறுப்பார்கள். அனால் இது உங்கள் துளிகளை அடைத்து பருக்கள் மற்றும் ஆக்னே உண்டாக வாய்ப்புள்ளது. அதனால், படுக்கும் முன் ஒரு வைப்ஸ்ஸை  வைத்து உங்கள் ஒப்பனையை சுத்தமாக தொடைக்கவும். அதற்கு பிறகு ஒரு கிளென்சர் பயன்படுத்தி முகத்தை கழுவி மாய்ஸ்சுரைசரை பூசுங்கள். இதை பகலில் மற்றும் இரவில் பின்பற்றுங்கள்.

ADVERTISEMENT

எல்லா ப்ரொடக்ட்களுக்கும் ஒரே மேக்கப்  பிரஷை பயன்படுத்துவதை தவிர்க்கவும் –

makeup-brushes

உங்கள் மேக்கப் பிரஷை கழுவுவது அவசியம். இல்லையென்றால்   எல்லா பொருட்களிலும் அடுத்து அடுத்து பயன்படுத்துவதினால் அதில் அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசி சேர்ந்துவிடும்.மேலும் இது உங்கள் சருமத்தை பாதித்து அரிப்பு உண்டாக்கும். எனவே உங்கள் பியூட்டி    ப்ளெண்டர் மற்றும் மேக்கப் பிரஷை கழுவுவது அவசியம்.

தடித்த உதட்டுச் சாயங்களை தேர்ந்தெடுப்பது –

இந்தியா ஒரு வண்ணமிக்க  நாடாகும். அதனால் நாம் ஆழமான அர்த்தமுடைய பிரகாசமான நிறங்களில் விஷயங்களை வெளிப்படுத்துவோம்.பளிச்சிடும் பிங்க், சிவப்பு,சாம்பல், கருப்பு நிறங்களில் லிப்ஸ்டிக் அணிவதால் தவறு ஏதும் இல்லை என்றாலும் இதை அதிகப்படியாக பூசுவதை தவிர்க்கவும். கூடுதலாக ஒப்பனையை பூசாமல் சமநிலை படுத்த பாருங்கள்.

பவுடர்ரை  அதிகப்படியாக பூசாதீர்கள் –

ஆம் அது ஒரு ஒளி கசியும் (ட்ரான்ஸ்லுசென்ட்) பவுடர் என்றாலும் அதை  அளவாகவே பயன்படுத்துங்கள். அது கண்களுக்கு தெரியாமல் போகாது! முதலில் சிறிதாக எடுத்து பூசவும். அதன் மேல்  இன்னும் தேவை என்றால் பூசவும். இந்த ட்ரான்ஸ்லுசென்ட் பவுடர் கேகி லுக் குடுக்க கிடையாது. இது உங்கள் பிவுண்டேஷனை  சரி செய்ய உதவும்.

ADVERTISEMENT

 பிரகாசமான கண் ஒப்பனை மற்றும் அடர் நிற உதடுகள் –

எவ்வளவு பெரிய விழாவாக இருந்தாலும் சரி, உங்கள் கண் ஒப்பனையும் உதடையும் பளிச்சிடும் நிறங்களில் அணிவதை தவிர்க்கவும். நீங்கள் உங்கள் கண்களுக்கு ஒரு போல்ட் ஸ்மோகி தோற்றம் அளிக்க விரும்பினால், அதற்கு உங்கள் உதடுகளை இலகுவான நிறங்கள் ( பேபி பிங்க், மேவ் , நியூட்ரல் ,நுட் ) சிறப்பாக இருக்கும்.

உதடுகளில்  கோடு வரைவதில்லை  –

லிப் லைனர் அணிவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. லைனர் உங்கள் உதடுகளை வரையறுக்கப்பட்டது போல் மற்றும் பெரிதாகவும் காண்பிக்க உதவும். உங்களால்  லிப் லைனர் பயன்படுத்தாமல் லிப்ஸ்டிக்கை ஒரு எக்ஸ்பெர்ட் போல் பூசமுடியும் என்றால் லைனரை விட்டு விடுங்கள். இல்ல என்றால், இந்த வித்தையை தவறாமல் முயற்சி செய்யுங்கள்.

பிறைமறை (primer) பூசிக்கொள்வதில்லை –

பிறைமற் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு ஒப்பனை பொருள். பிறைமறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் ஒரு கேன்வாஸ் போல் மென்மையான தோற்றத்தை பெறலாம். மேலும் இது உங்கள் முகத்தில் இருக்கும் ஆக்னே, பருக்கள் , சுருக்கங்கள் அனைத்தையும் மறைத்து ஒரு புது பொலிவு தரும். இதற்கு மேல் நீங்கள் ஒரு பாவுண்டேஷனை பயன்படுத்தினால் அது நீண்ட நேரம் நீடிக்க வாய்ப்புள்ளது.

உதடுகளில் லிப் கிளாசை பூசுவது –

உங்கள் உதட்டில் லிப்ஸ்டிக்க்கை அடித்த பிறகு லிப் க்ளோஸய் பூசுவது தவறில்லை. ஆனால் அது ஒரு உருகும் தோற்றத்தை அளித்தால், நீங்கள் முதலில் உங்கள் உதட்டில் லிப் பாமை தடவுங்கள். அதன் மேல் ஒரு லிப்ஸ்டிக் மற்றும் ஒரு ட்ரான்ஸ்பேரண்ட் லிப் கிளாசை பூசுங்கள்.

ADVERTISEMENT

ப்ளஷை பயன்படுத்தும் விதம் –

ப்ளஷை இரண்டு வகையில் பயன்படுத்தலாம். ஒன்று – பிரஷால் உங்கள் ஒப்பனை பொருளில் தடவி உங்கள் கணங்களில்  பூசுவது. இனொன்று – அந்த பிரஷ்ஷில் பௌடரை தடவி கூடுதலாக இருக்கும் ஒப்பனை பொருளை தட்டி எடுப்பது. இதனால் உங்கள் முகத்தில் ப்ளஷ் அதிகமாக  இல்லாமல் போதுமான அளவில் இருக்க உதவும்.

காலாவதியான பொருட்களை தூக்கி எறியுங்கள் –

ஒரு ஒரு ஒப்பனை பொருளும் ஒரு காலாவதி  உடன் வரும். அது முடிந்து விட்டது என்றால் உங்கள் சருமத்தில் எரிச்சல், அரிப்பு மற்றும் மற்ற பிரெச்சனைகள் தொண்டங்கிவிடும். நீங்கள் இது போல உங்கள் மனதிற்கு பிடித்த  லிப்ஸ்டிக்கை பல ஆண்டுகளாக வைத்திருக்கிறீர்கள் என்றால், அதை தூக்கி எரியும் நேரம் வந்துவிட்டது.

உங்கள் விரல்களால் அல்லது ஒரு மேக்கப் ஸ்பான்ஜினால் பவுன்டேஷனை பூசுவது –

விரல்களால் நீங்கள் பவுன்டேஷனை பூசுவது மிக தவறான செயல் ஏனெனில் உங்கள் விரல்களில் இருக்கும் அழுக்கு உங்கள் முகத்தில் சென்று துளைகளை முடியப்படு முடியதுடன் அதில் மேலும் பருக்கள் மற்றும் ஆக்னேவை உருவாக்கும். ஸ்பான்ஜ் உங்கள் ஒப்பனை பொருளை அதிகம் உறிஞ்சிவிடும். அதனால், ஒரு நல்ல பவுன்டேஷன் பிரஷை பயன்படுத்துங்கள்.

வெள்ளை ஐ லைனரை பயன்படுத்துவது –

வெள்ளை ஐ லைனரை பயன்படுத்தி உங்கள் கண்களை பெரிதாக காட்டுவது பழைய ஐடியா. இன்றைக்கு பல பெண்களின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருப்பதினால், நீங்கள் ஒரு நல்ல கன்சீலர் அல்லது ஒரு பீச்சி ஐ லைனரை பயன்படுத்தி உங்கள் கண்களை இயல்பாக காட்டுங்கள்.

ADVERTISEMENT

பிரான்சர் எல்லா இடத்திலும் பூசுவது –

உங்கள் இயல்பான நிறமே பழுப்பு என்றால் உங்கள் முகத்தில் அதிக பிரான்சர் தேவை இல்லை. இது உங்கள் முகத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை முன்வைக்க பயன்படும் ஒரு பொருள் . இதை உங்கள் நெற்றி, தாடை வரிகளில் மற்றும் மூக்கின் மேல் பூசினால் போதும்.

மேட் லிப்ஸ்டிக்கை துளையிட்ட உதடுகளில் பூசுவது –

உங்கள் லிப்ஸ்டிக்கை துளையிட்ட உதடுகளில் (cracked lips) பூசினால் அது நிச்சயம் நன்றாக அமையாது. முதலில் உங்கள் உதடுகளை எக்ஸ்போலிஎட்  (exfoliate) செய்யவும். அதில் ஒரு லிப் பாமை தடவி அது நன்றாக ஈரப்பதத்தை அடைந்த உடனே லிப்ஸ்டிக்க்கை பூசுங்கள்.

அதிகமாக மஸ்காரா பூசுவது –

உங்களுக்கு இயல்பாகவே கண் இமைகளில் இருக்கும் முடி அடர்த்தியாக இருந்தால் அதில் மேலும் அதிகம் மஸ்காரா அடிப்பது சீராக அமையாது. இரண்டு முறை பூசிக்கொண்டாள் போதுமானது.

பவுண்டேஷனை முகத்தில் மட்டும் பூசுவது –

உங்கள் பவுண்டேஷனை முகத்தில் மட்டும் பூசிக்கொண்டு கழுத்து பகுதியை விடுவது சரியான தோற்றத்தை அளிக்காது. அது உங்களை அழகாக காட்டாது. ஆகியனால், உங்கள் முகத்தில் பூசும் பவுண்டேஷனை கழுத்திற்கு பூசுங்கள் அல்லது ஒரு டின்டேட் மாய்ஸ்சுரைசரை கழுத்து பகுதியில் பூசலாம்.

ADVERTISEMENT

அதிகமாக க்ளிட்டர் பயன்படுத்துவது –

ஹைலைட்டர் பயன்படுத்துவது உங்களை இன்னும் அழகாக காண்பிக்கும். ஆனால்  அதிகமாக பயன்படுத்தாதீர்கள் . மிதமாக உங்கள் தாடை வரிகளில், மூக்கின் மேல் மற்றும் கன்னங்கள் தேவை பட்டால் பூசவும்.

போதுமான அளவு மஸ்காரா போடுவதில்லை –

மஸ்காரா உங்கள் கண்களை மேலும் திறந்து பெரிதாக காட்ட கூடிய  ஒரு அற்புதமான திறன் கொண்ட ஒப்பனை(makeup) பொருள் . இதை இந்திய பெண்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்றாலும் உங்களுக்கு கண் மை போட அலுப்பாக இருந்தால் நீங்கள் நிச்சயம் ஒரு மஸ்காராவை பயன்படுத்தி பாருங்கள்.

சன்ஸ்க்ரீன் பூசிக்கொள்ள மறப்பது –

சன்ஸ்க்ரீன் ஒரு ஒப்பனை பொருள் இல்லாவிட்டாலும் அதை நீங்கள் நிச்சயம் பூச வேண்டும். ஒரு வேலை உங்களுக்கு இதை பூச நேரம் இல்லை என்றால் உங்கள் மற்ற ஒப்பனை பொருள்களில் SPF  (பாவுண்டேஷன் ,லிப்ஸ்டிக், காம்பெக்ட்) இருக்கும். அதை வாங்கி பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

மஸ்காராவிற்கு  பிறகு ஒரு ஐ லாஷ் கேர்க்லரை பயன்படுத்துவது –

உங்கள் கண் இமைகளில்  மஸ்காரா பூசிய பிறகு அதை கேர்ள் செய்வதினால் உங்கள் கண் இமையில் இருக்கும் முடிகள் சேதம் ஆகிவிடும். இதை  செய்யாதீர்கள்.

ADVERTISEMENT

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம் ,இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

 மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

18 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT