கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.
வெள்ளம் காரணமாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட மாநிலமாக கேரளா (kerala) இருக்கிறது. கடந்த சில நாட்களில் 100க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது வயநாடு, மலப்புரம் பகுதிகள்தான். அதைத்தவிர தமிழகத்தில் மூணார், அவிலாஞ்சி போன்ற இடங்களும் வெள்ளத்தால் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தத்தளிக்கின்றன.
கேரளாவின் வரைபடத்தையே மாற்றியமைக்கும் வெள்ளமாக இந்த வெள்ளம் பார்க்கப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் மலப்புரம் பகுதியில் மீட்பு பணியினர் கண்ட ஒரு காட்சி அவர்களை கண்ணீரில் கலங்க வைத்திருக்கிறது.
திருமணமானவருடன் தவறான தவறான உறவு. ஆண்ட்ரியாவின் வாழ்வில் தொடர்கதையாகும் துயரங்கள்..
Youtube
மலப்புரம் சாத்தக்குளம் பகுதியை சேர்ந்த கீது எனும் பெண்ணிற்கு 21 வயதுதான் ஆகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவருக்கு துரு என்கிற 1 வயது குழந்தை இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மதியம், இயற்கை தன்னுடைய கோரத்தாண்டவத்தை இவர்கள் வீட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.
கீதுவின் கணவர் சரத்தும் அவரது அம்மாவும் வீட்டிற்கு வெளியே இருந்திருக்கின்றனர். கீது தனது ஒரு வயது குழந்தை துருவுடன் வீட்டினுள் இருந்திருக்கிறார். அப்போது நிலச்சரிவு ஏற்படவே ஓடுங்கள் ஓடுங்கள் என்று சத்தமிட்டமபடியே மனைவி குழந்தையைக் காப்பாற்ற வேகமாக வீட்டிற்குள் ஓடியிருக்கிறார்கள் சரத்தும் அவரது அம்மாவும்.
ஆனால் அதற்குள் மளமளவென வீடு மண்ணில் புதைந்திருக்கிறது. இதில் சரத் எப்படியோ தப்பி வெளியேறி இருக்கிறார். ஆனால் வீட்டுக்குள் இருந்த கீது, சரத்தின் அம்மா , மற்றும் குழந்தை துரு ஆகியோரைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களது உடல்களை எடுக்க மூன்று நாட்கள் மண்ணை அகற்ற வேண்டி இருந்தது.
மூன்று நாட்கள் கழித்து மீட்பு பணியினர் கண்ட காட்சி அவர்கள் மனதைப் பிசைவதாக இருந்தது. தனது ஒரு வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி கீது மண்ணில் புதைந்திருந்தார். நீண்ட முயற்சிக்குப் பின்னரே கீது மற்றும் துரு வின் உடல்களை மேலே கொண்டு வந்திருக்கின்றனர்.
மனைவி மற்றும் மகனின் உடல்களைக் கண்டதும் கதறிய சரத்தின் அழுகுரல் அங்கு கூடி இருந்த அத்தனை பேர் உயிரையும் உலுக்கியது. இதனைப் பார்த்த மீட்பு படையினரும் கண்கலங்கினர். சரத் அழுவதைப் பார்த்து கண்கலங்கிய அக்கம்பக்கத்தினர் சரத்தும் கீதுவும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்த நிலையில் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தம் தெரிவித்தனர்.
குழந்தை துரு பிறந்த உடன் கீதுவின் பெற்றோர் சமாதானம் ஆகி பேச வரும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட உடன் அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதுதான் மனித இயல்பு. ஒவ்வொரு உயிரும் இந்த instinct படி தான் பேரிடர் காலங்களில் நடந்து கொள்கிறது.ஆனால் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் இயல்பான instinct தாண்டி தாம் நேசித்தவர்களைக் காப்பாற்ற துணிந்து செயல்படும் இதயங்கள் இன்னமும் இந்த பூமியில் இருக்கதான் செய்கிறது என்பதை இந்த சோக சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.
தான் இறக்கும் தருவாயிலும் குழந்தைக்கு வலிக்காத வண்ணம் துருவை நெஞ்சோடு அணைத்தபடி இறந்திருக்கிறார் கீது. அந்த நொடி என்ன நடக்கிறது என்பது குழந்தைக்குத் தெரியாது. ஆனால், அம்மா உன்னோடுதான் இருக்கிறேன் என்கிற பாதுகாப்பை தன் நெஞ்சோடு அணைத்தபடி குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார் கீது.
பேரன்பின் பிடியில் இருந்த ஒரு குடும்பம் இயற்கையின் கோர தாண்டவத்தில் புதைந்தே போயிருக்கிறது. அதன் தலைவனைத் தனியாகத் தவிக்க விட்டபடி.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.