logo
ADVERTISEMENT
home / DIY Life Hacks
சத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு !மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்

சத்குருவின் நதிகளை மீட்கும் திட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு !மேலும் சில பிரபலங்கள் இணைந்தனர்

கோவை வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவால் ஆரம்பிக்கப்பட்ட ஈஷா யோகா மையம் (isha yoga centre) இந்தியா முழுக்கப் பரவி பல ஆன்மிக சேவைகளை செய்து வருகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் பல வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் பரவி உலகெங்கும் ஆன்மிகத்தின் விதையை விதைத்தபடி இருக்கின்றது.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தன்னை சுற்றி என்ன விமர்சனம் நடந்தாலும் மலங்களை உரமாக போட்டாலும் மல்லிகை மனக்கத்தான் செய்கிறது அதைப் போலவே நானும் என்பது போல தன் மீது குறிப்பிட்ட வெறுப்பாளர்கள் துவேஷத்தைக் கக்கிக் கொண்டிருந்தாலும் மக்களிடம் தனது நோக்கமான உயிர் எனும் பூவை மலர செய்ய பல வழிகளில் முயன்று வருகிறார்.

Pinterest

ADVERTISEMENT

இயற்கை ஆர்வலரான சத்குரு அவர்கள்தான் முதன் முதலில் இலவசமாக மரங்களை நட ஆரம்பித்தனர். அதன் பின்னரே மரம் என்றால் என்ன மரம் வெட்டப்பட்டால் நாம் என்ன ஆவோம் போன்ற விழிப்புணர்வுகள் பிறந்தன. அதன் பின்னரே ஆங்காங்கே அனைவரும் தனித்தனியாக மரம் நடுதலை ஒரு சேவையாக செய்து வந்தனர்.

அதை போலவே ஆன்மிக குருவான சத்குரு இறைவனை வணங்குவதே என் வேலை என்றோ என் அன்பர்களின் வேலை த்யானம் செய்து அவரவர் வழியில் முன்னேறுவது என்றோ இல்லாமல் பல சமுதாயத்திற்கு அவசியமான விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். தன் மேல் எறியப்படும் கற்களை ஒன்று திரட்டி அதன் மூலமே அடுத்த தலைமுறைக்கான தெளிவான பாதையை உருவாக்கிக் கொண்டே போகிறார்.

Twitter

ADVERTISEMENT

தற்போது அவர் கையில் எடுத்திருப்பது காவேரி அழைக்கிறாள் எனும் ஆயுதம். நீண்ட வருடங்களாகவே நதி நீர் இணைப்பிற்காக ஈஷா யோகா மையம் போராடி வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் கூட இதற்காக ஆதியோகி சிலை அருகே பிரம்மாண்டமான மக்கள் திரண்டு உறுதி மொழி எடுத்திருந்தனர்.

அதன் அடுத்த கட்டமாக காவேரி அழைக்கிறாள் எனும் ஹேஷ் டேக் மூலம் தென்னிந்தியாவின் மக்களை முக்கியமாக தமிழக மக்களிடம் உதவி கேட்டிருக்கிறார் சத்குரு. காவேரி ஆற்றின் கரையோரம் மரங்களை நடுவதன் மூலம் மழைகள் பெருகும் , காவேரி ஆறு வறண்டு போய் அலங்கோலமாக இருப்பது மாறும் என்று சத்குரு அறிவியல் ரீதியாகவே நிரூபித்து அதன் படி செய்ய விழைந்திருக்கிறார்.

முன்பு இருந்ததை விட இப்போது எழுபது சதவிகித காவேரி ஆறு வெறும் மணலாக வறண்டு போய் கிடக்கிறது. இதனைக் காக்க ஒவ்வொருவரும் தங்களிடம் இருந்து வெறும் 42 ரூபாய் அளித்தால் அதனைக் கொண்டு காவேரி பாயும் இடமெல்லாம் மரம் நட்டு அதனைப் பராமரிக்க முடியும். அதன் மூலம் மழைப் பொழிவுகளும் ஏற்படும் வெள்ள அபாயங்களும் இருக்காது என்பது சத்குருவின் ஆசையாகும். அவரது பிறந்த நாள் பரிசாக மக்களிடம் அவர் இதையே கேட்டிருக்கிறார்.

 

ADVERTISEMENT

Youtube

இதன் உண்மைத் தன்மை மற்றும் அறிவியல் தாக்கங்களை உணர்ந்த பலர் சத்குருவுடன் இணைந்திருக்கின்றன. நடிகர், இயக்குனர் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரான கமல்ஹாசன் இதன் விபரங்களை பார்த்துவிட்டு சத்குருவிற்கு தனது ஆதரவை அளிப்பதாக கூறியதோடு மற்றவர்களையும் இந்த ரேலியில் பங்கு பெற வேண்டும் என்று அழைத்திருக்கிறார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நதிகள் மீட்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

ADVERTISEMENT

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் தத்துவம், மதம், அரசியல் இதனை தவிர்த்து விட்டு ஈஷாவின் நதிகள் மீட்பு திட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டிருக்கிறார். இந்த திட்டம் மதபேதம் இல்லாமல் அனைவருக்குமானது. எதிர்கால சந்ததிக்கானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் நதிகள் மீட்பு என்பது ஒட்டு மொத்த உலகை காப்பதற்கான பகுத்தறிவு என்று கமல்ஹாசன் தனது பதிவில் கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் இதற்காக ஒரு லட்சம் மரங்களை தனது சார்பில் நட நன்கொடை அளித்திருக்கிறார். அதனைப் போலவே நடிகை காஜல் அகர்வால், சுஹாசினி மணிரத்னம் ,தமன்னா போன்றோரும் தங்கள் ஆதரவை தெரிவித்து இந்த ரேலியில் இணைந்தனர். நாமும் நம்மால் இயன்ற மரங்களை காவிரிக்கு வழங்கலாம்.

இதன் விபரம் அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நான் தற்போது 10 மரங்களை காவேரியில் நடுவதற்கான உதவியை செய்திருக்கிறேன். இதனைப் படிக்கும் வாசகர்கள் பூமியைக் காக்க முன்வரும் சத்குருவிற்கு உங்கள் உதவிகளை சேருங்கள். ஒரு மரம் முதல் ஒரு லட்சம் மரம் வரை உங்களால் என்ன முடியுமோ அதற்கேற்ப உதவுங்கள். நீங்கள் தரும் அந்த 42 ரூபாய் நமது அன்னை பூமியை காக்கவும் காவேரி அன்னையின் தாகத்தை தீர்க்கவும் உதவி செய்யும். மனத்தடைகளைக் களைந்து மதத்தடைகளைத் தாண்டி நம் அன்னை பூமிக்கு உங்கள் உதவியை செய்யுங்கள்.

ADVERTISEMENT

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

04 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT