logo
ADVERTISEMENT
home / Home & Garden
பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்

பால்கனி தோட்டம் அமைப்பது எப்படி? சில எளிய தோட்ட அமைப்பு குறிப்புகள்

தோட்டம்! மனதிற்கு அமைதியையும், தன்னையே மறக்கும் அழகான சூழலையும் தரக்கூடிய அற்புத இடம்!

இன்று அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தோட்டம் அமைக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் அதிகரித்து விட்டது. சிறிதும் இடம் இல்லாதவர்கள் கூட, அடுப்பங்கரை தோட்டம், படுக்கையறை தோட்டம் என்று, தங்கள் வீட்டிற்குள் எங்கெல்லாம், சூரிய கதிர்கள் வருகின்றது, அதனை பயன்படுத்தி ஒன்று இரண்டு செடிகளையாவது வளர்க்க முயற்சிகின்றனர். அவற்றையும், அதிக ஆர்வத்துடனும், அக்கரையுன்டனும் பராமரித்து வருகின்றனர். இந்த வகையில், பால்கனி (balcony garden) தோட்டம் இன்று பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. முடிந்த வரை கிடைத்த இடத்தில், எத்தனைச் செடிகள் வைக்க முடியுமோ, அத்தனையும் வைத்து, தங்களுக்கு பிடித்த ஒரு தோட்டத்தை வீட்டிற்குள்ளேயே அமைத்து விடுகின்றனர்.

நீங்களும் அப்படி ஒரு அழகிய தோட்டம் அமைக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான மற்றும் பயனுள்ள குறிப்புகள்(tips):

1. இருக்கும் இடத்தை திட்டமிடுங்கள்

எடுத்தவுடன் செடிகளையும், பூத்தொட்டிகளையும் வாங்கி விடாமல், உங்களுக்கு இடத்தை முதலில் நிர்ணயுங்கள். பால்கனியில் இருக்கும் அனைத்து இடத்தையும் உங்களால் பயன்படுத்த முடியாமல் போகலாம். அதனால், பிற தேவைகளுக்காக இடத்தை ஒதுக்கி, விட்டு, பின்னர் இருக்கும் இடத்தில், எப்படி தொட்டிகள் வைக்கலாம், எவ்வளவு பெரிய அல்லது சிறிய தொட்டிகளை வைக்கலாம், சுவற்றின் மீதும், பாதுகாப்பு இரும்பு கதவுகள் மீதும், எத்தனை சிறிய கொக்கி கொண்ட தொட்டிகள் வைக்கலாம், மேலும் உங்கள் பால்கனியில் தொங்கும் தொட்டிகளை கட்ட முடியுமா என்றெல்லாம் முதலில் திட்டமிடுங்கள்.  

ADVERTISEMENT

2. செடி வகைகள்

Pexels

பின்னர், நீங்கள் எந்த வகை செடிகளை வளர்க்கப் போன்கின்றீர்கள் என்பதை பற்றி திட்டமிடுங்கள். குறிப்பாக பூக்கள் வகை, காய் வகைகள், மூலிகை வகைகள் அல்லது அலங்கார செடிகள், என்று எதை தேர்வு செய்யப்போகின்றீர்கள் என்று முடிவு செய்யுங்கள். சிலர் போன்சாய் மர வகைகளையும் வளர்க்க விரும்புவார்கள். அதனால், நீங்கள் சரியாக திட்டமிட்டு, ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

3. சூரிய ஒளி

நீங்கள் தேர்வு செய்யும் செடிகளுக்கு ஏற்றவாறு, அதற்கு தேவையான சூரிய ஒளியைப் பற்றியும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் காய் மற்றும் பூக்கள் வகைகளை தேர்வு செய்தால், போதிய சூரிய ஒளி உங்கள் பால்கனிக்கு கிடைக்க வேண்டும். எனினும், அலங்கார செடிகளுக்கு குறைந்த அளவே சூரிய ஒளி கிடைத்தால் போதும். போதிய சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், செடியல் ஆரோக்கியத்தோடு வளர முடியாமல் போகலாம்.

ADVERTISEMENT

4. பராமரிப்பு

Pexels

உங்களுக்கு பிடித்த மற்றும் உங்கள் பால்கனிக்கு ஏற்ற செடிகளை தேர்வு செய்தால் மட்டும் போதாது, உங்களால் அந்த செடிகளை எவ்வளவு நேரம் மற்றும் உழைப்பை செலவு செய்து பராமரிக்க முடியும் என்பதை பற்றியும் நீங்கள் திட்டமிட வேண்டும். சில செடிகளுக்கு அதிக பராமரிப்புத் தேவை, சில செடிகள் வாரம் ஓரிரு முறை தண்ணீர் ஊற்றினாலே போதும், நன்றாக வளரும். அதனால், உங்களால் எவ்வளவு நேரம் செலவிட்டு செடிகளை பராமரித்து, அக்கறையோடு வளர்க்க முடியும் என்பதை பற்றி நீங்கள் தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும். அதற்கு தகுந்தவாறு, செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.

5. தண்ணீரின் தேவை

இன்று தண்ணீர் தட்டுப்பாடு பெரிய அளவு நாடு முழுவதும் இருகின்றது. அந்த வகையில், நீங்கள் வளர்க்கத் திட்டமிடும் செடிகளுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் செலவு செய்ய வேண்டும், மேலும் அந்த செடிகளுக்குத் தேவையான தண்ணீரை உங்களால் தரமுடியுமா என்றெல்லாம் நீங்கள் சிந்தித்து, பின்னர் அதற்கு தகுந்தவாறு செடிகளை தேர்வு செய்து, உங்கள் பால்கனி தோட்டத்தை அமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

6. உங்கள் பட்ஜெட்

Pexels

நீங்கள் செடிகளை வாங்கப் போகின்றீர்களா, அல்லது, உங்கள் வீட்டில் தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் விதைகள் போன்றவற்றை பயன்படுத்தி நீங்களே செடிகளை உண்டாக்கப்போங்கின்றீர்களா என்று முடிவு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் செடிகளை வெளியே வாங்கப்போகின்றீர்கள் என்றால், உங்கள் பட்ஜெட் என்ன என்பதை நிர்ணயிக்க வேண்டும். இதுமட்டுமல்லாது, சில செடிகளுக்கு அதிக பராமரிப்புத் தேவைப்படும். அதாவது அவற்றிற்கு அவ்வப்போது உறங்கள் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், அவை வாடிவிடக் கூடும். மேலும் நீண்ட நாட்களுக்கும் இருக்காது. அதனால், உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை பற்றியும் நீங்கள் திட்டமிட வேண்டும். முடிந்த வரை செலவுகள் குறைவாக இருக்கும் செடிகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள். 

 

ADVERTISEMENT

மேலும் படிக்க – வீட்டில் வளர்க்க அதிர்ஷ்டம் தரும் சில செடிகள்!

மேலும் படிக்க – மழையின்றி வறளும் பூமி, மனிதர்களால் மாசடையும் காற்று. இதில் நமது பொறுப்புகள் என்னென்ன?

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

08 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT