அலுவலகம் செல்லும் ஆணோ, பெண்ணோ, ஒரு சரியான மற்றும் முறையான தொழில்முறை ஆடையை (dress) தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதில் பல விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பிற ஆடைகளை போன்று இந்த ஆடைகளை எந்த கட்டுப்பாடும் இன்றி தேர்வு செய்ய முடியாது. இந்த முறையான ஆடைகள் உங்களது மரியாதையை அலுவலகத்தில் அதிகப் படுத்துவதோடு உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும். அதனால் நீங்கள் இந்த தொழில்முறை ஆடைகளை தேர்வு செய்யும் போது சில குறிப்பிட்ட விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
pixabay
நீங்கள் முறையான அலுவலக ஆடைகளை தேர்வு செய்ய உங்களுக்கா சில எளிய குறிப்புகள் இங்கே:
1. உங்கள் பட்ஜெட்டை வகுத்துக் கொள்ளுங்கள்: எந்த ஒரு பொருளை வாங்க திட்டமிடும் முன் உங்கள் பட்ஜெட்டை வகுத்து கொள்ள வேண்டும். இது நீங்கள் சரியான பொருட்களை, சரியாக தேர்வு செய்து உங்கள் தேவைக்கேற்ப வாங்க உதவும். இந்த வகையில், அலுவலாக முறையான ஆடைகள் பல விலை ரகங்களில் கிடைகின்றன. உங்கள் பட்ஜெட் என்னவென்று நீங்கள் நிர்ணயித்துக் கொண்டால், அதற்கு ஏற்றவாறு வாங்க திட்டமிடலாம்.
2. இணையதளத்தில் வாங்காதீர்கள்: இணையதளத்தில் பல வகை ஆடைகள், பல விலைகளில் கிடைத்தாலும், உங்களால் ஓரளவிற்கு மட்டுமே அதனை யூகிக்க முடியும். குறிப்பாக ஒரு ஆடையின் நிறம் மற்றும் அந்த துணியின் தரம் மற்றும் வகை, நீங்கள் கணினியில் பார்பதற்கும் நேரில் உங்களுக்கு வந்த பிறகு பார்பதற்கும் பல வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இதனால் உங்கள் எதிர்பார்ப்புகளும் பாதிக்கப்படலாம். மேலும் சில தருணங்களில் நீங்கள் ஏமாற்றம் அடையும் சூழலும் ஏற்படலாம். அதனால் முடிந்த வரை, இதற்கென்று ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடைகளுக்கு நேராக சென்று உங்களுக்குத் தேவையான அலுவலக ஆடைகளை வாங்குவது சிறந்தது.
pixabay
3. சரியான நிறத்தை தேர்ந்தெடுங்கள்: நிறம் ஒருவரின் தகுதியை மற்றும் வெளிதோற்றத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக உங்களது அலுவலக ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யும் போது வெளிர் நிற சட்டைகள், அடர் நிற பாண்ட்டுகள், அதிகம் டிசைன்கள் இல்லாமல், பார்பதற்கு கண்களுக்கு எதுவாக இருக்கும் ஒரு ஆடையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
4. சூழலுக்கு ஏற்ற ஆடைகள்: நீங்கள் அலுவலகத்தில் எந்த விதமான நிகழ்வுகள் நடக்கவிருகின்றது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு ஒரு ஆடையை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக பல நிறுவனங்களில் வார இறுதியில் அனைவரும் காசுவல் ஆடைகளில் வர அனுமதிப்பார்கள். அதனால், பெண்கள், சுடிதார், புடவை போன்ற இயல்பான ஆடைகளிலும், ஆண்கள் T- சட்டைகள் போன்ற ஆடைகளிலும் வருவார்கள். அது போன்றே உங்கள் அலுவலகத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்க இருந்தால், அதற்க்கு தகுந்தார் போல முக்கியத்துவம் கொடுத்து நல்ல தொழில்முறை ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.
5. உங்கள் உடலுக்கு ஏற்ற ஆடையை தேர்வு செய்யவும்: பலர் ஆடைகளை தேர்வு செய்யும் போது அதிக இறுக்கமாகவோ அல்லது அதிக தளர்வாகவோ தேர்வு செய்வார்கள். இந்த இரண்டு வகையும் உங்கள் தோற்றத்தை பெரிதும் பாதிக்கும். அதனால் உங்கள் உடல் வாகிற்கு ஏற்றவாறு ஒரு சரியான அளவை தேர்வு செய்து அணிய வேண்டும்.
pixabay
6. முழுமையான தோற்றம்: நீங்கள் அணியும் ஆடை (dress) உங்களுக்கு ஒரு முழுமையான தோற்றத்தை தர வேண்டும். அது பிறர் உங்களை ஒரு நல்ல மரியாதையோடும், மகிழ்ச்சியோடும் பார்க்கத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்.
எது போன்ற ஆடைகளை தவிர்க்க வேண்டும்?
மேலே எப்படி பட்ட ஆடைகளை உங்கள் அலுவலக தேவைகளுக்கும், தொழில்முறை தேவைகளுக்கும் தேர்வு செய்ய வேண்டும் என்று பார்த்தோம், இப்போது எப்படி நீங்கள் எது போன்ற ஆடைகளை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்;
- ட்ரான்ஸ்பரென்ட் : ஒளி புகும் வகையில், அதாவது உங்கள் உள்ளாடை வெளியே தெரியும் வகையிலான ஆடைகளை தவறிக்க வேண்டும். இத்தகைய ஆடைகள் அலுவலகத்தில் மற்றவர்களின் கவனத்தை பாதிப்பதோடு, உங்களுக்கான மரியாதையையும் குறைத்துக் கொள்ளும் வகையில் அமைந்து விடும்.
- குறைந்த கழுத்து மற்றும் முதுகுப் பகுதி உள்ள ஆடைகள்: பல நவீன ரக ஆடைகள், அலுவலக தேவைகளுக்கு என்று இருந்தாலும், அவற்றில் சில குறைந்த கழுத்து பகுதிகளை கொண்டிருக்கும். அதாவது, மிகவும் இறக்கமான கழுத்து பகுதி மற்றும் முதுகு பகுதி. இது உங்கள் சருமத்தை வெளிகாட்டும் வகையில் இருக்கும். இத்தகைய ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இது நாகரீகமாகவும் இருக்காது.
pixabay
- கைகள் இல்லாத ஆடைகள்: கைகள் இல்லாத ஆடைகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. இவை உங்களுக்கு அணிவதற்கு வசதியாக இருந்தாலும், பிறர் கவனத்தி அதிகம் ஈர்க்கும் அல்லது பாதிக்கும் வகையிலும் இருக்கும்.
- முடிந்த வரை தைத்து வாங்குங்கள்: கடைகளில் ரெடி மேட் ஆடைகள் கிடைத்தாலும், முடிந்த வரை ஒரு தையர்காரரிடன் சரியான அளவு கொடுத்து, துணிகளை வாங்கித் தந்து உங்களுக்கு ஏற்றவாறு தைத்து வாங்கிக் கொள்ளுங்கள். இது நீடித்து உழைப்பதோடு, உங்களுக்கு ஏற்ற வகையிலும் இருக்கும்.
- காலணிகள்: ஆண்கள் மற்றும் பெண்கள் அலுவலகம் செல்லும் போது தங்களது காலணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சரியான மற்றும் பார்க்க நாகரீகமான காலணிகளை தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக உங்களுக்கு நடக்க எதுவாக இருக்க வேண்டும்.
pixabay
- அணிகலன்கள்: முடிந்த வரை அலுவலகம் செல்லும் போது தேவையற்ற மற்றும் பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணிகலன்கள் அணிவதை தவிர்ப்பது நல்லது. இது உங்களது தொழில்முறை தோற்றத்தை பாதிப்பதோடு, உங்கள் மரியாதையை குறைக்கும் வகையிலும் அலுவலகத்தில் இருக்கலாம்.
- ஆடம்பர மற்றும் விலை உயர்ந்த உடைகள் / பொருட்கள்: அலுவலகம் செல்லும் போது பொதுவாக ஆடம்பரத்தை முற்றிலும் வெளிபடுத்தாமல் ஆடை (dress) அணிவது நல்லது. மேலும் விலை உயர்ந்த உடைகள் மற்றும் நகை ஆபரணங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கே ஒரு தருணத்தில் அசௌகரியத்தை அலுவலகத்தில் உண்டாக்கலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.