logo
ADVERTISEMENT
home / ஃபேஷன்
வலி மிகுந்த காலனி கடியில் இருந்து விடுபட 15 வீட்டு வைத்தியங்கள்

வலி மிகுந்த காலனி கடியில் இருந்து விடுபட 15 வீட்டு வைத்தியங்கள்

மகிழ்ச்சியாகவும் உற்ச்சாகத்தோடும் நீங்கள் தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று எண்ணிக் கொள்ளலாம். மற்ற நாட்களை விட இன்று நீங்கள் அதிக தன்னம்பிக்கையோடு தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.  ஏனென்றால், நீங்கள் புது காலணிகளை அணிந்திருக்கிறீர்கள். ஆனால், திடீரென்று உங்கள் காலில் ஒரு வித அரிப்பும் சில அசௌகரியமும் ஏற்படுகிறது. அது உங்கள் பாதத்தை மேலும் மேலும் புண்ணாக்குகிறது. காரணம் தெரிவதற்கு முன்பே நீங்கள் உங்களது புது காலணிகளை வெறுக்க தொடங்குவீர்கள். இது குறிப்பாக பெண்களிடையே அதிகம் ஏற்படும் ஒரு அசௌகரிய நிகழ்வு. இது ஒரு சிறிய விடயமாக இருக்கலாம், ஆனால் அதிக வலி தரக்கூடியது தான் இந்த காலனி(shoe) கடி. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடு பட மற்றும் நீங்கள் விரும்பிய காலணிகளை அணிய, இங்கே சில பயனுள்ள குறிப்புகள்.
காலனி கடியை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில சுவாரசியமான தகவல்கள், உங்களுக்காக!

காலனி கடி என்றால் என்ன?
காலனி(shoe) கடி என்பது பாதத்தில் ஏற்படும் ஒரு வித கொப்பளம். இது தொடர்ச்சியாக உங்கள் காலனி(shoe) பாதத்தில் உரசுவதால் ஏற்படுகிறது. மேலும் இது நீங்கள் நடப்பதை கடினமாக்கி விடும். இது குறிப்பாக உங்கள் கணுக்காலில், பின்னம் பாதம் அல்லது பாதத்தில் ஏற்படும். இது உராய்வின் காரணமாகவே அதிகம் ஏற்படுகிறது. இது தடித்த தோல், ஆணி, சுத்திகால், தடித்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சில நேரங்களில் திரவம் அல்லது சீல் ஏற்படக் கூடும்.

ஏன் காலனி(shoe) கடி ஏற்படுகிறது?
இரண்டு பிரதான காரணங்களால் காலனி கடி ஏற்படக் கூடும். இங்கே அவை:

புது காலணிகள்:
உங்கள் பாதங்களுக்கு சௌகரியம் அல்லாத காலணிகளை அணிவது ஒரு முக்கிய காரணம். அது தரமற்ற காலணிகள் அல்லது உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத பொருளால் செய்யப்பட்டது. உதாரணத்திற்கு, சுத்தமான தோலால் செய்யப்பட்ட காலணிகள் அடர்த்தியாக, கூறிய தலையோடு உயர்ந்த குதின்காளோடு மற்றும் அற்புதமான வடிவத்திலும் தோற்றத்திலும் இருக்கும்.

ADVERTISEMENT

ஏற்ற அளவில் இல்லை
அளவில் சிறிய காலணிகளை அணிவதும் உங்களுக்கு இந்த காலனி(shoe) கடி ஏற்பட ஒரு காரணமாகும். அவ்வாறு அணிவதால் சரியான காற்று கால்களுக்கு கிடைக்காமல் போகக் கூடும். அது காலனி(shoe) கடி உருவாக காரணமாகிவிடும். சராசரியாக 9௦% பெண்கள் சிறய காலணிகளையே அணிகிறார்கள். அதில் 8௦% பெண்கள் இந்த பிரச்சனையை ஏற்படுவதாக கூறுகிறார்கள். இதன் விளைவு, 9 முறை அதிக பெண்கள் ஆண்களை விட இந்த சுத்தி கால், கால் பெருவிரல் வீக்கம், மற்றும் வலி மிகுந்த பாதம் போன்ற பிரச்சனைகளால் அவதிப் படுகிறார்கள். மேலும், இத்தகைய பிரச்சனைகள் உங்கள் வயது அதிகரிப்பதாலும், நீங்கள் தொடர்ந்து சௌகரியமற்ற சிறிய காலணிகளை அணிவதாலும் அதிகமாகக் கூடும். அனேகமானவர்கள், தங்களது கால் அளவை அவ்வப்போது அளப்பதில்லை. இதனாலேயே சரியான அளவில் காலணிகளை அணியாமல், சீல், வலி, ஆணி போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப் படுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட வகையான காலனி இந்த பிரச்சனையைத் தருமா?
நீங்கள் ஒவ்வொரு முறையும் குழாய்கள் அல்லது மணிக்கட்டுகள் அல்லது ஆக்ஸ்போர்ட் அணியும் போது காலனி(shoe) கடி ஏற்படுவதுண்டு. இவ்வகையான காலணிகள் ஆரோக்கியமானது அல்ல. உங்களிடம் இரண்டு சோடி காலணிகள் இருந்தால் ஒன்று நிச்சயம் காலனி(shoe) கடியை உருவாக்கக் கூடும். அதற்கான காரணம் மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டில் ஒன்றாக இருக்கக் கூடும். குறிப்பாக காலணிகள் எப்போது நீங்கள் அணியும் போது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால், உங்கள் கால்கள் காலணிகளை அணியும் போது தொடர்ந்து அழுத்தம் பெறுகிறது. மேலும் உங்கள் மொத்த எடையையும் அது சுமந்து கொண்டிருக்கின்றது. இதனால் உங்கள் பாதங்களை நீங்கள் மொத்த எடையோடு காலனி மீது வைக்கும் போது சில அசௌகரியங்கள் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு நாற்காலியில் அமரும் போதோ அல்லது படுக்கையில் படுக்கும் போதோ மட்டும்தான் உங்கள் கால்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறை அத்தகைய புதிய வடிவங்களையும் சிறிய காலணிகளையும் அசௌகரியத்தையும் கடந்து தேர்ந்து எடுக்க தூண்டுகிறது. இதனால் பின் வரும் காலங்களில் நீங்கள் அதிகம் வருந்தும் சூழலை ஏற்படுத்துகிறது.

15 சிறந்த காலனி கடிக்கான வீட்டு வைத்தியம் – தீர்வுகள்
பின் வருபவை, உங்கள் காலனி(shoe) கடிக்கான சிறந்த மற்றும் எளிதான வீட்டு கை வைத்திய முறைகள்

பற்பசை
நம் அனைவரின் வீடுகளிலும் பற்பசை உள்ளது. அது எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். அதில் இருக்கும் சேர்மானங்கள், அதாவது மெந்தால், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடா ஒரு நல்ல நிவாரணியாக செயல் படுகிறது. ஒரு சிறிய அடுக்கு பற்பசையை (வெள்ளை, ஜெல் அல்ல) சீராக பாதிக்கப் பட்ட இடத்தில் தடவவும். அப்படியே 3௦ நிமிடங்களுக்கு அல்லது இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.இதமான சுடு நீரால் உங்கள் கால்களை நன்கு கழுவி விடவும்.

ADVERTISEMENT

பெட்ரோலியம் ஜெல்லி
உங்கள் தோல் விரைவாக காலனி(shoe) கடியால் பாதிக்கப் படுகிறது என்றால், நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லி பயன் படுத்தலாம். ஒரு சிறிய பாட்டில் பெட்ரோலியம் ஜெல்லி எப்போதும் உங்கள் கை பையில் இருக்கும்மாறு பார்த்துக் கொள்ளுங்கள். கால்களை நன்கு கழுவி விட்டு, சிறிதளவு வாசலினை பாதிக்கப் பட்ட இடத்தில் தடவலாம். சிறிது நேரம் அப்படியா விட்டுவிட்டு பின் உங்கள் காலனியை(shoe) அணியலாம். இப்போது எந்த வலியும் இன்றி நீங்கள் நடக்கலாம். மேலும், நீங்கள் இதனை உங்கள் கால்களில் தடவி விட்டு இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு காலையில் கால்களை நன்கு கழுவி விடலாம். இவ்வாறு செய்வதால் அதிக பலனும் கிடைக்கும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்குவதோடு இதமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பனி
இது ஒரு சுலபமான வழி. நீங்கள் உங்கள் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பனிக்கட்டியை எடுத்து பாதிக்கப் பட்ட இடத்தில் இதமாக தேய்த்து விட்டால் போதும். அது உடனடி நிவாரணத்தை கொடுக்கும். இது வலியையும் குறைக்க உதவும். மேலும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும். வீக்கம் இருந்தாலும் இது ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும். குறிப்பாக பனி கட்டி நிவாரணம் காலனி(shoe) கடிக்கு ஏற்ற வீடு வைத்தியமாகும்.

தேன்
எந்த விதமான தோல் பிரச்சனைகள் இருந்தாலும், தேன் ஒரு நல்ல மருந்தாக இருக்கும். குறிப்பாக காலனி(shoe) கடிக்கு, நீங்கள் தரமான தேனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எனினும் காலில் தேனை தடவிய பின் நடக்கவோ அல்லது வெளியிலோ செல்வதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் தேன் தடவிய பின் கால்களில் எளிதாக தூசி மற்றும் குப்பை ஒட்டி கொள்ளகூடும். இது நீங்கள் விரைவாக குனமடைவதை தவிர்ப்பதோடு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

கற்றாளை
கற்றாளை அனேக தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல நிவாரணியாக இருக்கும். அதற்க்கு விரைவாக குணப் படுத்தும் தன்மை உள்ளது. மேலும் எதிர்ப்பு சக்த்தியும் ஆரோக்கியத்தையும் அதிகப் படுத்தக் கூடிய தன்மை அதற்க்கு உண்டு. தோல் அரிப்பை குறைத்து குளிரூட்டும். நல்ல மற்றும் புதிய கற்றாலையை எடுத்து பாதிக்கப் பட்ட இடத்தில் அதன் ஜெல்லை தடவவும். அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும். அப்போதுதான் அது நன்றாக வேலை பார்க்கும். தொடர்ந்து இவ்வாறு செய்யும் போது தழும்புகள் மற்றும் காலில் ஏற்பட்டுள்ள புண் விரைவாக குணமடையும்.

ADVERTISEMENT

எலுமிச்சைபழம்
எலுமிச்சைபழம் என்ன செய்யக் கூடும்? அமிலத்தன்மை உள்ள எலுமிச்சைப்பழம் ஒரு கிரிமி நாசினி. மேலும் அது அரிப்பை குறைக்கவும் உதவும். காலணிக் கடியால் ஏற்பட்ட தழும்புகளையும் அது குணப்படுத்த உதவும். சிறிது எழுமிச்சைபழ சாற்றை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி அதனை காய விடுங்கள். பின் இதமான சுடு நீரில் கால்களை நன்கு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற கணக்கில் ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் விரைவான மற்றும் முழுமையான பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய்
இது ஒரு நல்ல தீர்வு. என் அம்மா கூட இதனை அதிகம் பரிதுரைப்பார். அரிப்பில் இருந்து வறண்ட தோல் வரை தேங்காய் எண்ணெய் ஒரு நல்ல நிவாரணி. சிறிது சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து பஞ்சில் நனைத்து பாதிக்கப் பட்ட இடங்களில் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும். இது ஒரு நம்பகமான தீர்வாக இருக்கும். மேலும் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி கற்பூரத்தை சேர்த்து பாதிக்கப் பட்ட இடத்தில் தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு அதிகம் ஆக்ஸிஜனேற்ற கொன்றது. அது கிரிமி நாசினியாகவும் நோய் திறப்பு தன்மை கொண்டதாகவும் இருக்கும். பல அற்புதங்களை அது செய்யும். உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் அது பல நன்மைகளை செய்யும். காலனி கடிக்கு இது ஒரு நல்ல தீர்வு. மேலும் அத்தகைய பிரச்சனைகள் வரவிடாமலும் அது தடுக்கும். ஒரு தடிமமான துண்டாக உருளைக்கிழங்கை நறுக்கி உங்கள் பாதத்தின் அடியில் நன்கு தேய்த்து விடுங்கள். அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் அதிக உருளைக்கிழங்கு சாறு கிடைப்பது போல தேய்த்து விடுங்கள். மேலும் அதனோடு சிறிது மிளகு கீரை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்தும் தேய்க்கலாம். இது விரைவாக குணமடைய உதவும்.

மஞ்சள் மற்றும் வேப்பில்லை
மஞ்சள் மற்றும் வேப்பில்லை, இவை இரண்டிற்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், 5 அல்லது 6 வேப்பிலைகளை எடுத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கலவை செய்து கொள்ள வேண்டும். பின் அடர்த்தியாக பாதிக்கப்பட இடத்தில் தடவவும். அப்படியே 3௦ நிமிடங்கள் விட்டு விடவும். இதை தினமும் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

ADVERTISEMENT

ஆலிவ் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்க்கு பிறகு, ஆலிவ் எண்ணெய் ஒரு நல்ல ஈரத்தனை தரக் கூடிய போர்லுலாகும். ஆலிவ் எண்ணெய்யை இரண்டு விதத்தில் நீங்கள் காலனி கடிக்கு பயன் படுத்தலாம். ஒன்று ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். இது உடனடியான நிவாரணத்தைக் கொடுக்கும். மேலும் இந்த இரண்டோடும் சிறிது தேன் கலந்து ஒரு கலவை செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் விரைவாக குணமாகும்.

அரிசி மாவு
அரிசி மாவு ஒரு நல்ல தேய்ப்பான். அது காலனி கடி மற்றும் அதனால் உருவான தழும்புகளை எளிதாகவும் விரைவாகவும் குணப் படுத்த பெரிதும் உதவும். மேலும் இறந்த தோல்களையும் அகற்றி புதிதாக தோல் உருவாக உதவும். மேலும் இது ஒரு நல்ல வலி நிவாரணியும் கூட. இந்த அரிசி மாவை தண்ணீர் சேர்த்து ஒரு கலவையாக செய்து காலனி கடியால் ஏற்பட்ட தழும்பின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். பின் அது காய்ந்த பின் இதமான சுடுநீரால் கால்களை நன்கு கழுவி விட வேண்டும்.

ஆல்கஹால் தேய்த்தல்
காலனி கடியை நீங்கள் அல்கஹால் தேத்தும் சரி செய்யலாம். இதற்க்கு கிரிமி நசனி சக்த்தியும் உள்ளது. அது உங்களுக்கு எரிச்சல் மற்றும் வலியில் இருந்து உடனடி நிவாரணத்தை கொடுக்கும். மேலும் புண் ஏற்படாமல் பாதுகாக்கும். நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், சிறிது அல்கஹாலை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பஞ்சு வைத்து தடவி விட வேண்டும். இவ்வாறு 2 முதல் 3 நாட்களுக்கு பல முறை அல்லது முடியும் போதெல்லாம் செய்து வர வேண்டும். உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்பிரின்
ஆஸ்பிரின் ஒரு சிறந்த தலைவலி நிவாரணி. இதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதால் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இது வீக்கம் மற்றும் புண் அதிகமாவதை தவிர்க்கும் குணம் கொண்டது. மேலும் நீங்கள் இதில் ஒன்றை உட்கொள்ள வேண்டும். இதை சிறிது தண்ணீர் விட்டு ஒரு கலவை போல செய்து பாதிக்கப் பட்ட இடத்தில் தடவினால் விரைவில் குணமாவதை நீங்கள் காணலாம். அதன் பின் இதமான சுடுநீரால் கழுவி விட வேண்டும்.

ADVERTISEMENT

முக பூச்சு
காலனி கடி பெரும்பாலும் வியர்வையால் உருவாகிறது. இதுதான் காரணம் என்றால் நீங்கள் சிறிது முக பூச்சை எடுத்துக் கொண்டு உங்கள் பாதங்களில் பூசலாம். அது உங்கள் பாதங்களை சுத்தமாகவும் உலர்ந்தும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இந்த பூச்சு எரிச்சல் மற்றும் கூச்சச்சை குறைக்கும்.

வெண்ணெய்
வெண்ணெய் ஒரு சிறந்த நீர்த்தன்மை தரக் கூடிய பொருளாக மட்டும் இல்லை. அதற்க்கு அரிப்பு, எரிச்ஹ்கல் மற்றும் வலியை குறைக்கக் கூடிய தன்மைகளும் உள்ளது. ஒரு தேக்கரண்டி வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி பின் ஒரு அடர்ந்த படிவத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு இதமான சுடுநீரில் கால்களை கழுவி விட வேண்டும். அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம். இதை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை செய்து வந்தால் விரைவான பலன்கள் கிடைக்கும்.

இதனோடு சேர்த்து நீங்கள் வேறு கால்களுக்கு போடும் கிரீம்கள், தேய்ப்பான் மற்றும் பூச்சுக் கலவை போடலாம். அது உங்களுக்கு விரைவான பலனைத் தரும். அழகான பாதங்களை பெறுவது அனேக பெண்களுக்கு விருப்பமான ஒன்று. அதிக செலவு இல்லாமல் மேலே குறிப்பிடப் பட்டுள்ள சில செய்முறை உங்களுக்கு எளிதாகவும் உடனடி தீர்வு தரக்கூடியதாகவும் இருக்கும்.

எப்படி காலனி கடியை வரும் முன் தவிர்க்கலாம்?
இங்கே 1௦ குறிப்புகள், காலனி கடியை வரவிடாமல் தவிர்க்க:

ADVERTISEMENT

 1.    முதலில் காலணிகளை வாங்கும் முன் அவற்றை அணிந்து உங்களுக்கு சரியாக இருக்கின்றதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். முடிந்த வரை இணையத்தளத்தில் காலணிகளை வாங்குவதை தவிர்பப்து நல்லது. ஏனென்றால் சில நேரங்களில் நீங்கள் சரியான அளவை வாங்கத் தவறலாம்.

2.    நீங்கள் கால்களுக்கு கட்டு போடலாம். ஒரு படைடை எடுத்து உங்கள் காலனியில் ஒட்டி அலல்து உங்கள் பாதத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டிக் கொண்டு நடக்க தொடங்கலாம். இது உங்கள் தோளுக்கு விரைவாக குனமளிப்பதொடு காலனி கடியும் வராமல் தவிர்க்க உதவும்

3.    உங்கள் காலணிகள் புதியது மற்றும் சரியான அளவில் இல்லை என்றால், நீங்கள் அடர்ந்த கால் உரையை அணிய முயற்ச்சிக்கலாம். அல்லது இரண்டு காலனி உரையை அணியலாம். இது சற்று பஞ்சு போன்ற உணர்வை உங்கள் பாதத்திற்கு தருவதோடு காலணிகளையும் சரியாக உங்கள் கால்களோடு இருக்க செய்யும்

4.    தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் சிறிது எடுத்து உங்களது புது காலனிக்குள் தடவி விடுங்கள். குறிப்பாக பிரச்சனையை இருக்கும் இடத்தில். இவ்வாறு மூன்று இரவுகள் செய்து வர உங்கள் காலனி அணிவதற்கு இதமாகவும் தக்க அளவிலும் மாறும்

ADVERTISEMENT

5.    மற்றுமொரு எளிமையான தீர்வு என்னவென்றால், ஒரு ஒழுகாத பையில் தண்ணீர் எடுத்து உங்கள் காலனிக்குள் வைத்து குளிர் சாதனா பெட்டிக்குள் வைத்து உறைய வைத்து விடுங்கள். இதனால் காலணிகள் சற்று தளர்ச்சி அடையும். அதை நீங்கள் எளிதாக அணிந்து கொள்ளலாம்

6.    உங்கள் காலணிகளை சற்று சூடு செய்தும் அணிந்து கொள்ளலாம். சில கால் உரையை எடுத்து காலனிக்குள் வைத்து சூடான காற்றை அதனுள் ஊதுங்கள். இதனால் ஏற்படும் சூட்டால் காலணிகள் சற்று சௌகரியமான அளவிற்கும் உங்கள் பாதங்களுக்கு இதமாகவும் மாறும்.

7.    மெழுகு எடுத்து உங்கள் காலில் பாதிக்கப்பட்ட பகுதிக்கேற்றவாறு காலனியில் தேய்த்து விடுந்தால். மெழுகு ஈரத்தனை தருவதோடு தோல் மற்றும் காலனிக்கு இடையே ஏற்படும் உறைவை குறைக்க உதவும்.

8.    நீங்கள் பாதுகாப்பான் திண்டு பயன் படுத்தியும் காலனி கடியை தவிர்க்கலாம். அது ஒரு காலனிக்குள் இருக்கும் அட்டை போல இருக்கும். அதனை காலனிக்குள் வைத்து பின் அணிவதால் உங்கள் பாதங்களுக்கு இதமான உணர்வு கிடைக்கும். இந்த பாதுகாப்பான் திண்டை போல மிருதுவான மற்றும் அடர்ந்த உணர்வை உங்கள் பாதங்களுக்கு கொடுக்கும். மேலும் அது காலனி கடியை வரவிடாமல் தவிர்க்க உதவும். இதனால் கால் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.

ADVERTISEMENT

9.    பாதம் பாதுகாப்பான்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பு. உங்கள் காலில் கொப்புளம் ஏற்பட்டிருந்தால் இது ‘U’ வடிவத்தில் இருக்கும். இதில் மெத்தை போன்ற பொருள் இருப்பதால் உங்கள் பாதங்களுக்கு நல்ல உணர்வை கொடுக்கும்

10.  இறுதியாக, எனினும் நல்ல பலன் தரக்கூடிய ஒரு குறிப்பு. முடிந்த வரை காலணிகளை வாங்காதீர்கள். ஆடம்பர அழகான தோற்றத்தை காட்டிலும் உங்கள் ஆரோக்கியம் முக்கியம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
28 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT