வீட்டில் பெண் பிள்ளைகள்(Daughter) குறித்த வயதை அடைந்ததும் இந்த திருமண பேச்சு ஆரம்பமாகிவிடும். குறிப்பாக கல்லூரி படிக்கும் போதே திருமணத்தை குறித்து பெற்றோர் கவலை பட ஆரம்பித்துவிடுகின்றனர். பெண்ணிற்கு ஏற்ற மாப்பிள்ளையை அங்கு இங்கும் தேடி அலைய ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் வளர வளர பெற்றோர்களுக்கு பொறுப்பு அதிகரித்து கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.
பெற்றோர்கள் ஒவ்வொன்றாக தங்கள் பொறுப்புகளை செய்து முடிக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பெற்றோருக்கு பொறுப்புகள் குறைகின்றது. பிள்ளைகளுக்கு(Daughter) தான் பொறுப்புகளும் கடமைகளும் அதிகரிக்கின்றன. இதை அநேக பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க மறந்து விடுகின்றனர். அப்பாடா கல்யாணம் பண்ணி பாரு, வீட்டை கட்டிப்பாரு என்று சும்மாவா சொன்னான் என்று திருமணம் முடிந்ததும் பெரு மூச்சு விடுகின்றனர்.
ஆனால் அதற்கு பிறகு தான் உங்கள் பெண்ணிற்கான பொருப்பு அதிகரிக்கின்றது. பிறகு தான் தெரியும் நீங்கள் உங்கள் பிள்ளைகளை(Daughter) எப்படி வளர்த்துள்ளீர்கள் என்பது. உங்கள் வீட்டில் இருக்கும் வரை எவ்வளவு செல்லமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திருமணம் முடிந்து புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் கணவரிடம் எந்த மாதிரி இருக்க வேண்டும் என மனதளவில் உங்கள் பெண்பிள்ளைகளுக்கு நீங்கள் தைரியம் கொடுத்துள்ளீர்களா என்று யோசிக்க வேண்டும். காரணம் இதை ஒரு பெற்றோரா நீங்கள் தான் சொல்லித்தர வேண்டும்.
தைரியம்
இத்தனை நாட்கள் பிள்ளைகள்(Daughter) உங்கள் வீட்டில் முழு சுதந்திரத்துடன் இருந்திருப்பார்கள். காரணம் அவர்கள் பிறந்தது முதல் பார்த்து பழகிவந்த வீடு இது. குறிப்பாக இங்கு இருக்கும் அனைத்தும் நமக்கு சொந்தமானது என்று எண்ணத்துடன் வளர்ந்திருப்பார்கள். திருமணம் முடிந்தது இது நாள் வரை உங்கள் பிள்ளைகள் இருந்த வீடு இனி நம்முடையது இல்லை என்கிற உணர்வு வரும். கணவரின் வீடு தான் இனி நமக்கு எல்லாம் என அவர்கள் மனதில் பதியவைக்க பெற்றோர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் இது ஒரு மிகப்பெரிய தவறு என்கின்றனர் வல்லுநர்கள். இது அவர்களது தைரியத்தை முற்றிலுமாக குறைக்கின்றது. நமக்கு இந்த உலகில் யாரும் நிறந்தரம் இல்லை என்கிற உணர்வை கொடுக்கின்றது. அதற்கு பதிலாக இந்தணை நாட்கள் உங்கள் பிள்ளைகள் இருந்த வீட்டை அவர்களுக்காக பெற்றோர் விட்டு கொடுங்கள். இந்த வீடும் வீட்டில் நீ பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் உண்ணுடையது தான், அதே போன்று உன் கணவர் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தைரியத்தை கொடுங்கள்.
அன்பு
பெற்றோராகிய நீங்கள் குறிப்பாக அம்மாக்கள் பிள்ளைகளி்டம்(Daughter) அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். அதற்காக அன்னை தெரசாவாக இருக்க சொல்லவில்லை தேவையான அன்பை செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். அதிக கோபப்படும் குணம் இருந்தால் அதை குறைக்க சொல்லிக்கொடுங்கள். ஏனெனில் உங்கள் பி்ள்ளைகிளின் கோபத்தை நீங்கள் ரசித்தது போன்று மற்றவர்கள் ரசிக்காமல் இருக்கலாம். கோபத்தை குறைத்து அன்பை வெளிப்படுத்த கற்றுத்தாருங்கள்.
புதிய உறவு
திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு செல்லும் போது கணவரை மட்டும் நம்பி செல்லாமல் அங்கு இருக்கும் புதிய உறவுகளை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். மாமியார் மாமனார் மற்றும் பிற உறவுகள் புதிதாக இருக்கலாம். அவர்ளுடன் அன்பாக பழகவும் அந்த உறவிற்கான அர்த்தத்தை பெற்றோராகிய நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டியது கட்டாயம்.
செக்ஸ் உறவு
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது தாம்பத்தியம். அது என்னவோ நம்ம நாட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம்(Daughter) இதை பற்றி மட்டும் பேசுவது கிடையாது. பேச மிகவும் தயங்குகின்றனர். காரணம் அதை ஒரு மூடி மறைக்கப்பட்ட போக பொருளாக பார்க்கின்றனர். இதனாலையே நிறைய குடும்பங்களில் பிரச்சனை ஏற்படுகின்றது. தாம்பத்தியம் பற்றி கண்டிப்பாக பெற்றோர்கள் பேசவேண்டும். செக்ஸ் என்றால் என்ன? அது ஒரு தவறாக விஷயம் கிடையாது என்பதை அவர்களுக்கு நன்றாக புரிய வைக்க வேண்டியது அவசியம். கணவன் மனைவிக்கு இருக்கும் நெருக்கமான பந்தம், உறவில் ஆணி வேர் செக்ஸ் தான் என்பதை கற்றுக்கொடுங்கள். பெற்றோர் பேச தயங்குவதால் உங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் தவறாக வழிநடத்த நேரிடும் சூழல் ஏற்படும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo