இன்று இருக்கும் குழந்தைகள் பயங்கர கெட்டிக்காரர்கள். தாங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்வதில் அதிக சாமர்த்தியம் நிறைந்தவர்கள். ஆனால், இதுவே பெற்றோகளுக்கு ஒரு பெரிய சவாலாகி விடுகின்றது. அனேக அம்மாக்கள், எப்படி தங்கள் குழந்தையை தங்கள் பேச்சை கேட்க வைப்பது (child listen to you) என்பதில் அதிக சிக்கல்களையும், சவால்களையும் சந்திகின்றனர். எனினும், அப்படியே குழந்தைகளை விட்டு விடவும் முடியாது.
இதற்கு தீர்வு தான் என்ன? உங்களுக்காக இங்கே சில பயனுள்ள குறிப்புகள்.
1. உங்கள் குழந்தை உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்
நீங்கள் உங்கள் குழந்தையிடம் சில விடயங்களை பேச நினைத்தால், முதலில் அவர்கள் உங்களை கவனிக்கும் நிலைக்கு வரும் வரை எதுவும் பேசத் தொடங்காதீர்கள். நீங்கள் பேசுவதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலோ, அல்லது விருப்பம் இல்லாமல் இருந்தாலோ, நீங்கள் பேசுவதில் பயன் இல்லை. அதனால், அவர்கள் முழு ஈடுபாட்டோடு உங்களை கவனிக்கும் வரை பேசாதீர்கள்.
2. மீண்டும் மீண்டும் கூறாதீர்கள்
Pexels
உங்கள் குழந்தை நீங்கள் கூறியதை மதிக்கவில்லை என்றால், அவர்களிடம் மீண்டும் மீண்டும் அதனை கூறாதீர்கள். அவர்களாகவே உங்களிடம் வரும் வரை, நீங்கள் வேறு வேலையை பாருங்கள். நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை கூறுவதால், அவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகலாம்.
3. சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்
ஒரு விடயத்தை அவர்கள் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது அவர்களுக்கு நீங்கள் ஏதாவது வேலை கொடுக்க நினைத்தாலோ, அவர்களிடம் அதிகம் வார்த்தைகளை பயன்படுத்தி பேசாதீர்கள்,. அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சில வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுக்கு கட்டளை இடுங்கள்.
4. அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள்
Pexels
உங்கள் குழந்தையிடம் நீங்கள் பேச வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு செயலை செய்ய வேண்டினாலோ, முதலில் அவர்கள் பார்வையில் இருந்து பாருங்கள். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியுமா, அவர்களுக்கு அது பிடித்த வேலையா, அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று பாருங்கள்.
5. ஒன்று கூடி செயல்படுங்கள்
எப்போதும் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கட்டளையிடுவது போல அவர்களை மட்டும் வேலை செய்ய சொல்லாமல், நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வேலையை செய்ய முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து வேலை பார்க்கும் போது, பேசிக் கொண்டே செய்வீர்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் பல புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதோடு, ஆர்வத்தோடும் செயல்படுவார்கள்.
6. பொறுமையாக இருங்கள்
Pexels
உங்கள் குழந்தை உங்கள் பேச்சை கேட்காமல் உங்களுக்கு இம்சை கொடுத்தால், சண்டை போடாதீர்கள், மற்றும் கோபத்தை காட்டாதீர்கள். முடிந்த வரை பொறுமையாக இருங்கள். உங்கள் அமைதியே அவர்களை சிந்திக்க வைத்து, உங்கள் மீதான மரியாதையையும், பயத்தையும் உண்டாக்கும். இதனால், அவர்களே நாளடைவில், சிந்தித்து, உங்கள் பேச்சை கேட்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்து, உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். கோபத்தை காட்டினால், அது எதிர்மறையாக முடிந்து விடக் கூடும்
7. வழக்கமாக்குங்கள்
உங்கள் குழந்தைக்கு தினமும் செய்ய வேண்டிய வேலை, வாரா வாரம் செய்ய வேண்டிய வேலை மற்றும் மாதா மாதம் செய்ய வேண்டிய வேலை என்று பட்டியலிட்டு அதனை வழக்கமாக்குங்கள், இப்படி செய்தால், அவர்கள் சில நாட்களிலேயே அந்த அட்டவணைக்கு பழகிக் கொண்டு, அவர்களாகவே அந்த வேலைகளை செய்யத் தொடங்குவார்கள். இது உங்களுக்கு சுலபமாகி விடும்.
8. அவர்கள் கூறுவதை கேளுங்கள்
Pexels
உங்கள் குழந்தைகள் மட்டும் நீங்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்று இல்லை. நீங்களும் சற்று காது கொடுத்து உங்கள் குழந்தை கூறுவதை கேட்க வேண்டும். அவர்களுக்கு உண்டான மரியாதையையும், முக்கியத்துவத்தையும் நீங்கள் தர வேண்டும்.
9. அவர்களை புரிந்து கொள்ள அவர்களை கவனியுங்கள்
உங்கள் குழந்தைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் அவர்களை கவனியுங்கள். அவர்களது விருப்பம், வெறுப்பு, என்று அனைத்தையும் கண்காணியுங்கள். அப்படி அவர்களை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான பாதையில் அவர்களை எடுத்து செல்ல முடியும், மேலும் உங்கள் பேச்சையும் அவர்களை கேட்க வைக்க முடியும்.
10. விளையாட்டு தனமாக இருங்கள்
Pexels
குழந்தைகளுக்கு எப்போது கட்டளையிடும் பாணியும், அதிகார தோரணையும் பிடிக்காது. அதனால் அவர்களுடன் எப்போதும் விளையாட்டு தனத்தோடு நீங்களும் குழந்தையாய் மாறி அவர்களுடன் சேர்ந்து வேலை பாருங்கள். இது அவர்கள் கவனத்தை ஈர்க்கும். மேலும் உங்கள் பேச்சையும் கேட்கத் தொடங்குவார்கள். எப்போதும், அவர்களுக்கு ஏதாவது சுவாரசியமான கதை சொல்லி உங்கள் அன்பு வலைக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க – எப்படி வேகம் குறைந்த குழந்தையை ஊக்கவித்து விரைவாக வேலைகளை செய்ய வைப்பது?
பட ஆதாரம் – Shutterstock, Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!