பெண்களாகிய நாம் அழகை பராமரிக்கிறோம் என்கிற பெயரில் முகத்தையும் கைகளையும் மட்டும் பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறோம். முகமும் கைகளும் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? பாதங்களும் அழகாக இருக்க வேண்டும். பாதம் அழகாக இல்லாமல் இருப்பதற்கு காரணம் போதிய பராமரிப்பு இல்லாததே! தங்களது முகம், கை, கால்களுக்கு மட்டும் பராமரிப்புக்களைக் கொடுத்துவிட்டு, பாதங்களை மறந்துவிடுவார்கள். ஆனால் அழகு என்பது வெறும் அப்பகுதிகளில் மட்டுமல்ல, தலை முதல் பாதம் வரை நாம் சுத்தமாக பராமரிப்பதில் தான் உள்ளது.
அதில் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பெடிக்யூர்(pedicure) தான் சிறந்த வழி. இதைச் செய்ய அழகு நிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே இவற்றை எளிமையாக செய்யலாம். இங்கு வீட்டிலேயே பெடிக்யூர்(pedicure) எப்படி செய்வது என்பது இங்கு கற்றுத்தருகிறோம்.
இதை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தாலே போதும், குதிகால் வெடிப்பு வருவதைத் தடுக்கலாம்.
பெடிக்யூர்(pedicure) செய்யத் தேவையான பொருட்கள்
நெயில் பாலிஷ் ரிமூவர், காட்டன்
ஒரு வாளி, வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை, ஷாம்பு, கல் உப்பு
நெயில் கட்டர், மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார்
மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெய்
செய்முறை 1
முதலில் கால் விரல் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை ரிமூவர் கொண்டு நீக்க வேண்டும். அதிலும் அந்த ரிமூவர் ஆல்கஹால் மற்றும் அசிட்டோன் இல்லாததாக இருக்க வேண்டும்.
செய்முறை 2
பின் ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் கல் உப்பு, சிறிது ஷாம்பு மற்றும் பாதி எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரில் கால்களை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
செய்முறை 3
பின்பு மெருகேற்ற உதவும் கல் அல்லது பிரஷ் அல்லது நார் கொண்டு பாதங்கள் மென்மையாக தேய்த்து விட வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் விரைவில் வெளியேறிவிடும்.
செய்முறை 4
அடுத்து நெயில் கட்டர் கொண்டு கால் விரலில் உள்ள நகங்களை வெட்டி நீக்கி விட்டு, நகங்களின் முனைகளை தேய்த்து விடுங்கள். இதனால் கால்விரல் நகங்கள் சீராகக் காணப்படும்.
செய்முறை 5
இறுதியில் கால்களை ஒருமுறை நீரில் கழுவி, பின் துணியால் துடைத்து உலர வைத்து, மாய்ஸ்சுரைசர் அல்லது எண்ணெயைத் தடவ, பாதங்கள் பொலிவோடும், சுத்தமாகவும், வறட்சியின்றியும் காட்சியளிக்கும்.
குறிப்பு இச்செயலை இரவில் படுக்கும் முன் செய்து, மாய்ஸ்சுரைசர் தடவிய பின் கால்களுக்கு காட்டன் சாக்ஸ் அணிந்து கொண்டால், பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பு விரைவில் மறைவதைக் காணலாம். மேலும் இச்செயலை வாரம் ஒருமுறை செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.
- பெடிக்யூர்(pedicure) செய்யும் மற்றொரு முறை
முதலில் கால்விரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால், அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள். - பின்பு ஒரு அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலந்து, பின் அதனுள் கால்களை 5 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு கால்களைத் தேய்த்து வெளியே எடுத்து, துணியால் துடைக்கவும்.
- அடுத்து அகன்ற டப்பில் வெதுவெதுப்பான நீரை பாதியாக நிரப்பி, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, எலுமிச்சைத் தோலை நீரிலேயே போட்டு, கால்களை நீரில் மீண்டும் 5 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். பிறகு பியூமிக் கல் பயன்படுத்தி, குதிகால்களை நன்கு தேய்த்து விட்டு, கால்களை வெளியே எடுத்து துணியால் துடைக்க வேண்டும்.
- ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி பொடி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை கால்களில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு கையால் கால்களை சிறிது நேரம் தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
- இறுதியில் கெட்டியான ஏதேனும் ஒரு மாய்ஸ்சுரைசரை கால்களில் தடவி, மென்மையாக 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த முறையில் மாதம் இருமுறை பெடிக்யூர்(pedicure) செய்து வந்தால் கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்க உங்கள் பாதம் அழகாக காட்சியளிக்கும்.
அழகான மெஹந்தி டிசைன்ஸ் வீட்டிலிருந்து வரைவது எப்படி?
திருமணத்திற்கு சிறந்த பட்டுப் புடவை தேர்வு செய்யும் முறைகள்!
வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube, shutter stock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo