logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
வளர் இளம்பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய ஆரோக்கிய உணவுகள்!

வளர் இளம்பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய ஆரோக்கிய உணவுகள்!

இன்று வளரும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார்கள். போதிய உடல் உழைப்பு இல்லாததும், சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை (healthy food) எடுத்துக் கொள்ளாததுமே இதற்கு காரணம் என மருத்துவர்கள் முதல் பிட்னஸ் ட்ரைனர்கள் வரை தெரிவிக்கின்றனர்.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை குழந்தைப் பருவம் கடந்து ‘டீன் ஏஜ்’ பருவத்தை அடையும்போது உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய்க் கால தொடக்கம், உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என இயல்பில் பல மாறுதல்கள் நிகழும். 

இத்தகைய சூழலில் அவர்களது உணவு விஷயத்தில் அதிக அக்கறைசெலுத்த வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு. அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறுவது தொடர்பான உணவுகள் குறித்து பார்க்கலாம்.

1. சாமை கிச்சடி

தேவையான பொருட்கள்: 

ADVERTISEMENT

சாமை – 1 கப், 
கருப்பு உளுந்து – 2 கப், 
வெங்காயம் – 2, 
பூண்டு – 3 பல், 
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன். 
பச்சை மிளகாய்- 2, 
உப்பு – தேவையான அளவு. 

youtube

செய்முறை :

ADVERTISEMENT

ஒரு கப் தோலுடன் இருக்கும் கறுப்பு உளுந்தை வெறும் வாணலில் வறுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது வறுத்த பருப்பை அப்படியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் நன்றாக ஊறிய பருப்புடன் ஒரு கப் சாமை, 5 கப் தண்ணீர் சேர்த்து, அத்துடன் தேவையான அளவு வெங்காயம், பூண்டு பற்கள், மஞ்சள் தூள், தேவைக்கேற்ப பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு குழைவாக வெந்ததும் அதை இறக்கி, தேங்காய் துவையலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

                    மேலும் படிக்க – சுவையான பவர்ச்சி மட்டன் ஹைதிராபாதி பிரியாணி செய்வது எப்படி?

2. முருங்கை கீரை மசியல்

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை – 1 கட்டு, 
நிலக்கடலை – 1/2 கப், 
பூண்டு – 3 பல், 
வரமிளகாய் – 2,  
கடுகு, உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், 
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

ADVERTISEMENT

youtube

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உளுந்து, கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் அதனுடன் முருங்கை கீரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். அதே சமயம் வேர்க்கடலையை வறுத்து பொடித்து தோல் நீக்கிய பின் அதனுடன் வரமிளகாய், பூண்டு பற்கள் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை வதக்கிய கீரையுடன் சேர்த்து கிளறவும். 

ADVERTISEMENT

வாரம் ஒரு முறை முருங்கை கீரையை சாப்பிட்டு வருவதால் உயிர்சத்துகள், தாது உப்பு, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியன உடலில் சேர்ந்து உடலுக்கு வலு சேர்க்கிறது. மேலும் வளரும் இளம்பெண்களுக்கு (foods) இரத்த விருத்தி அடைய செய்வதோடு, குழந்தை பேறு அடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்க உதவும்.               

3. உளுந்து களி

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து மாவு – 2 கப்,
அரிசி மாவு – 1/2 கப்,
நெய் – 2 ஸ்பூன்,
வெல்லம் – 1 கப், 
ஏலக்காய் பொடி – சிறிது.

ADVERTISEMENT

youtube

செய்முறை : 

முதலில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த உளுந்து மாவை ஒரு கடாயில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கையால் கலந்து விடவும். அதனுடன் அரிசி மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்பு இந்த கரைசலை ஒரு முறை நன்றாக கலக்கி கொதிக்கும் நீரில் ஊற்றி கிண்டவும். சுமார் ஐந்து நிமிடம் வரை நன்கு சேர்த்து ஒரு கேசரி பதம் வரும் போது தீயை மிதமாக வைத்து நல்லெண்ணெய் சேர்க்கவும். களி வெந்து  வரும் நேரத்தில் தேய்காய் துருவல், வெல்லக் கரைசல் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். சுவையான உளுந்து களி ரெடி! 

ADVERTISEMENT

பூப்பெய்த பெண்களின் சீரான மாதவிடாய் மற்றும் உடல் பலத்துக்கு இது முக்கிய பங்காற்றுகிறது. பெண்களின் இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு பிரச்னைகளுக்கு சிறந்த மருந்தாகிறது. உடல் சூட்டினை தணிக்க செய்வதோடு, இரத்த கட்டிகளுக்கு சிறந்த மருந்தாகிறது.

                  மேலும் படிக்க – குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

 

4. எள்ளு உருண்டை

தேவையான பொருட்கள் :

ADVERTISEMENT

எள்ளு – 200 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 3 டீஸ்பூன்.

 

youtube

ADVERTISEMENT

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைத்து பாகு காய்ச்சவும். (ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பாகை விட்டு, உருட்டினால் உருட்ட வர வேண்டும்.

அதுதான் பாகுக்கு சரியான பதம்). பதம் வந்ததும் வறுத்த எள்ளுடன் பாகு சேர்த்துக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து சற்று சூடாக இருக்கும் போதே கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு உருட்டவும். சுவையான தித்திப்பான எள்ளு உருண்டை ரெடி. 

மேலும் படிக்க – மோமோஸ் பிடிக்குமா! வாங்க இனி வீட்லயே சுலபமா சமைக்கலாம் !

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

13 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT