logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணி பழம்!

உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணி பழம்!

உடல் குளிர்ச்சியை தரும் கிர்ணி பழத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ் மெக்னீஷியம், இரும்புச் சத்து என பல்வேறு சத்துக்கள் உள்ளன. ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள 54.6 கலோரிகள், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் அதிகமாக நிறைந்துள்ளது.  

  • தலைமுதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புத சக்தி கிர்ணி பழத்திற்கு (muskmelon) உண்டு. இந்த பழத்தில், புரதமும், கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால் கேசத்துக்கு உறுதியையும், சருமத்துக்குப் பொலிவையும் அள்ளித் தருவதில் வள்ளலாக இருக்கிறது. 
  • சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியக்கும். இதனால் முகம் சோர்வாக காணப்படும். இவர்கள் கிர்ணி பழத் துண்டு ஒன்றை எடுத்து கைகளால் நன்கு மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

pixabay

  • தோலில் எண்ணெய் பசை குறைந்து வறண்டு இருப்பவர்களுக்கு தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாக தோன்றும், இதற்கு கிர்ணி பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் சமஅளவு கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்.
  • நூறு கிராம் கிர்ணி பழ விதையுடன் பயத்தம்பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைமுடி சுத்தமாவதோடு முடியின் பளபளப்பும் கூடி ஆரோக்கியமாக செழித்து வளரும். கிர்ணி பழ விதை தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராகவும் செயல்படுகிறது. 

மேலும் படிக்க – காலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் !

ADVERTISEMENT
  • கிர்ணி பழ விதையை காய வைத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும், இதனுடன் ஓட்ஸ் பவுடர் இரண்டையும் சமஅளவு எடுத்து பேஸ்ட் போல கலந்து வெள்ளரி ஜூஸ் சேர்த்து தலை முடி முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.
  • இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கிர்ணி பழம் (muskmelon) அதிகம் சாப்பிடுவதால் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது.

pixabay

  • பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் கிர்ணி பழம் நல்லது. 
  • கிர்ணி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மையை சரி செய்து களைப்பை நீக்கி, வாதத்தை மற்றும் பித்தத்தையும் குறைக்கும். வேறு எந்தப் பழமும் இதை போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

மேலும் படிக்க – பெண் உறுப்பில் ஏற்படும் அரிப்பை சரி செய்ய சில எளிய வீட்டு வைத்தியங்கள் !

  •  உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்பட்டால்,  தினமும் இரண்டு கிர்ணி பழ (muskmelon) துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர கண்கள் பிரகாசிக்கும்.
  • கிர்ணி பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். 

ADVERTISEMENT

pixabay

  • கிர்ணி பழ விந்தையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாக கிடைகின்றன. கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். 
  • கிர்ணி பழத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் எளிதில் ஜீரணமாகாமலும் போகலாம். அதனால் எப்போதும் இதனுடன் வெல்லத்தை சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.
  • சிறுநீரகத்தில் உள்ள கல்லையும் கரைய வைக்கும் வல்லமை கிர்ணிப்பழத்துக்கு உண்டு. 
  • கிர்ணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை மற்றும் மதிய வேளைகளில்  கிர்ணி பழங்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் குறையும்.
  • இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்துவர இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

மேலும் படிக்க – இயற்கையான முறையில் சுருள் முடியை நேராக்க சில எளிமையான டிப்ஸ்!

pixabay

ADVERTISEMENT
  • இந்த பழத்தில் போலேட் சத்து மிக அதிக அளவு உள்ளது. ஒரு கிர்ணி பழத்தின் கால் பகுதியில் 25 மி.கி ஆளவு போலேட் சத்து உள்ளது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் க்ளினிகல் ந்யுட்ரிஷன் நடத்திய முதல் கட்ட ஆய்வுப்படி குறைந்த அளவு புற்று நோய் அறிகுறிகள் இருக்கும் மனிதர்களை பாதுகாக்கும் தன்மை போலேட் சத்துக்கு உள்ளதாக அறியப்படுகிறது. 
  • கிர்ணி பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். இதனால் நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
  • கிர்ணி பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் அண்டாது.

Muskmelon Benefits in Hindi

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

06 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT