logo
ADVERTISEMENT
home / Diet
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!

குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!

எந்தப் பக்க விளைவும் இல்லாமல் இயற்கையாகவே உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது நெல்லிக்காய் ஜூஸ். உடல்  எடை மட்டுமல்லாது, சருமத்திற்கும், கூந்தலுக்கும், இருதயத்திற்கும், கண்களுக்கும் நன்மைகள் செய்யும் சக்தி கொண்டது நெல்லிக்காய். அதனால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

நெல்லிக்காய்யை அப்படியேவும் சாப்பிடலாம், வேக வைத்து இனிப்பு கலந்தும் சாப்பிடலாம். மோரில் ஊறவைத்து பதப்படுத்தியும் சாப்பிடலாம். ஆனால், உடல் எடை குறைய வேண்டுமெனில், ஜூஸ் (gooseberry juice) செய்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்வது?

நெல்லிக்காய் ஜூஸ் பல பொருட்களை சேர்த்து செய்யலாம். அவற்றுள் சில,

1. நெல்லிக்காய் , இஞ்சி மற்றும் கறிவேப்பிலை

தேவையான பொருட்கள்:

ADVERTISEMENT

2 நெல்லிக்காய்(கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்)
சிறிய துண்டு இஞ்சி
தேவைக்கேற்ப கல் உப்பு
ஒரு கொத்து கறிவேப்பிலை

செய்முறை:

மேலே சொன்ன பொருட்களை நன்றாக அரைத்து வடிகட்டி, உங்கள் சுவைக்குத் தகுந்தவாறு தண்ணீர் சேர்த்து பருக வேண்டும்.

2. நெல்லிக்காய், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு

ADVERTISEMENT

Shutterstock

தேவையான பொருட்கள்:

2 நெல்லிக்காய்(கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள்)
சிறிய துண்டு இஞ்சி
½ தேக்கரண்டி சீரகம் 
¼ தேக்கரண்டி மிளகு 
½ எலுமிச்சை

செய்முறை:

ADVERTISEMENT

இவை அனைத்தும் குளிர்காலத்திற்கு ஏற்ற பொருட்கள். சுறு சுறுவென்று இருக்கும் இவற்றையும்  அரைத்து, வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து அவ்வப்போது பருகிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க – நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்

3. நெல்லிக்காய் மற்றும் புதினா

தேவையான பொருட்கள்:

4 நெல்லிக்காய்
2 கொத்து புதினா

ADVERTISEMENT

செய்முறை:

  • நெல்லிக்காய்யை கொட்டை நீக்கி சிறிதாக நறுக்கிக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு, அதோடு புதினா இலைகளை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  • அதோடு 1 டம்ளர் தண்ணீர்விட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.
  • நீரழிவு நோய் உள்ளவர்கள் அப்படியே பருகலாம்.
  • கசப்பு தன்மையை போக்க 1 தேக்கரண்டி தேன் சேர்த்து குடிக்கலாம். 

நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

Shutterstock

  1. உடலில் உள்ள புரதச்சத்தை அதிகரித்து, கொழுப்பை குறைக்கும்
  2. நீரழிவு நோய்யை கட்டுக்குள் வைக்கும்
  3. நெல்லிக்காய்யில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், எலும்புகள் உறுதியாக்கும். உருக்கி என்ற செல்கள் எலும்பை வலுவிளக்கச் செய்யும். நெல்லிக்காய் அதைத் தடுக்கும் ஆற்றல் உடையதால், எலும்புகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
  4. நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகம் இருப்பதால், புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
  5. நெல்லிக்காயில் எந்தப் பொருளிலும் இல்லாத அளவு வைட்டமின்-சி இருக்கிறது. ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்கும்.
  6. மேலும், ஈரல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டதால், உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றும். ரத்தத்தையும், உடலையும் சுத்தம் செய்ய நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 
  7. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகிவர, ரத்தம் நன்றாக ஊரும். ரத்த சோகை வராமல் தடுக்கும்.
  8. நெல்லிக்காய் (nellikai) கூந்தலை நன்றாக கருமையாகவும், செழிப்பாகவும் வளர உதவும். கூந்தல் உதிராமல் தடுக்கும்.
  9. நீண்டநாள் இளமையாகத் தோற்றமளிக்க உதவும். வயது முதிர்வை தடுக்கும்.
  10. தினமும் நெல்லிக்காய் ஜூஸ் பருகி வருவதால், உடல் எடையை மட்டும் குறைக்காது, கொலெஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கும்.
  11. நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்களும், ஃபேட்டி அமிலங்களும் இருதயத்தின் ஒட்டுமொத்த செயல்களையும் சீராக வைக்க உதவும். 
  12. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக அமையும். 
  13. நெல்லிக்காயில் அல்கலைன் தன்மை இயற்கையாகவே இருப்பதால், சிட்ரிக் அலர்ஜி உள்ளவர்கள் நெல்லிக்காயை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
  14. வயிற்றில் உள்ள செரிமான அமைப்பை உறுதியாக்கும்.

நெல்லிக்காய் கிடைக்கும் காலங்களில், வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, எப்போதும் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியை, ஜூஸ் செய்யும்போதும், சாலட் மீதும், வேக வைத்த காய்கள் மீதும் பயன்படுத்தலாம். ஊறுகாய், ஜாம் போன்று தயாரித்தும் வைத்துக்கொள்ளலாம். வெய்யில் காலங்களில், மோரில் கலந்து பருகலாம். அறுசுவை கொண்ட நெல்லிக்காயை பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை சீராக்குங்கள்!

ADVERTISEMENT

மேலும் படிக்க – அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு – பீட்ரூட் !

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

01 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT