இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது ஃப்ரைடு ரைஸ். சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை இதன் வெரைட்டிகள் நீள்கிறது. எளிமையான செய்முறை, எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற வசதி, சாப்பிடும்போது கிடைக்கும் அலாதிச் சுவை மற்றும் திருப்தியான உணர்வு ஆகியவை இதன் பக்கம் பெரும்பாலானவர்களை திரும்ப வைத்திருக்கிறது. குழந்தைகளுக்கு பிரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிக்கன் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி – 1 கப்,
வெங்காயம் – 1 கப்,
எலும்பு இல்லாத கோழி – 1/2 கப்,
கேரட் – 1,
பீன்ஸ் – 15,
வெங்காய தாள் – 1,
குடைமிளகாய் – 2,
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
முட்டை -3,
சில்லி சாஸ் – 1 ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 ஸ்பூன்,
மிளகு தூள்-1 ஸ்பூன்,
நெய் – 1/4 கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
காய்களை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் சிறிது வெங்காயத்தாளையும் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும். இதனுடன் கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதனுடன் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுதூள் சேர்த்து மூடி வைத்து வேகவைக்கவும். காய்கறி பாதி வெந்தவுடன் ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். சுவையான சிக்கன் ஃப்ரைடு ரைஸ் (fried rice) ரெடி.
மேலும் படிக்க – குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்
வெஜ் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – 250 கிராம்,
வெங்காயம் – 1,
கேரட் – 1/2 கப்,
பீன்ஸ் – 1/2 கப்,
பச்சை பட்டாணி – 1/2 கப்,
முட்டைக்கோஸ் – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 1/2 கப்,
குடைமிளகாய் – 1/2 கப்,
இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு,
மிளகு பொடி – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்து முக்கால் பாதி வரை வேக விடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து ஒரு தட்டில் சாதத்தை உலர விட வேண்டும். கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்கி, அத்துடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு குடைமிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும். அது வதங்கிய பிறகு சாதத்தை போட்டு கிளறவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். பிறகு மிளகு பொடி சேர்த்து கிளறவும். சுவையான வெஜ் ஃப்ரைடு ரைஸ் (fried rice) தயார்.
மேலும் படிக்க – உங்கள் பளபளப்பான முக அழகை சில பருக்கள் வந்து கெடுக்கிறதா ! சிம்பிளாக சரி செய்து விடலாம் !
மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான்கள் – 15,
இஞ்சி, பூண்டு – ஒரு ஸ்பூன்,
வெங்காயத்தாள் – சிறிதளவு,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பச்சை மிளகாய் – 3,
சோயா சாஸ் – 4 தேக்கரண்டி,
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி,
சாதம் – 4 கப் (வடித்து ஆறவைத்தது),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் பட்டன் காளான்களை எடுத்துக்கொண்டு நீரில் சுத்தப்படுத்தி நறுக்கிக்கொள்ளவும். பின்னர் காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். அடுத்து பூண்டு, இஞ்சி பொடியாக நறுக்கியதை சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு, நறுக்கிய காளான் துண்டுகளை வாணலியில் சேர்க்கவும். அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, வடித்து வைத்திருந்த சாதத்தைக் கொட்டி கிளறவும். பின்னர் மிளகுத்தூள், சோயா சாஸ் முதலியவற்றை சேர்த்து சூட்டிலேயே இறக்கி, அதன் மேல் சில வெங்காயத்தாள்களை தூவி கலந்தால் சுவையான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (fried rice) தயார்.
பன்னீர் ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
பன்னீர் – ஒரு கப்,
பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 2 பல்,
கேரட் – 1,
பீன்ஸ் – 7,
வெங்காயத்தாள் – அரை கப்,
உப்பு, மிளகு – தேவையான அளவு,
எண்ணெய் – 3 ஸ்பூன்.
செய்முறை :
ப.மிளகாய், பூண்டு, கேரட், பீன்1, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெந்நீரில் பன்னீரைப் போட்டு 5 நிமிடம் கழித்து தண்ணீரை வடித்து மிக பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசியைக் கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர் வெங்காயத்தாள், கேரட், பீன்ஸ் மற்றும் துளி உப்பு சேர்த்துக் கிளறி வேக வையுங்கள். இத்துடன் நறுக்கிய பன்னீரைச் சேர்த்து காய்கறிகளோடு பன்னீர் சேரும் வரை வதக்குங்கள். இதில் வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறுங்கள். இறுதியாக உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து சாஸுடன் பரிமாறுங்கள். சூப்பரான பன்னீர் ஃப்ரைடு ரைஸ் ரெடி.
மேலும் படிக்க – கண் பார்வையை அதிகரிக்க சில எளிய வழிகள்!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!