திருவண்ணாமலையை சேர்ந்த அரசு சிறப்பு குற்றப் பொது வழக்கறிஞர் அர்ச்சனா சென்னை இன்னுமொரு தாய்லாந்தாக மாறி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழகம் வெளிநாட்டினர் வந்து இன்பம் அனுபவித்து போகும் செக்ஸ் டூரிசம் ஆக மாறி இருப்பதாக கூறும் அவர் சென்னையிலும் இது நடப்பதாக அதிர்ச்சி தகவல் அளிக்கிறார்.
சர்வதேச அளவில் இந்த வகை செக்ஸ் டூரிசம் (sex tourism) நடந்து கொண்டே இருக்கிறது. தாய்லாந்தை இதற்கு உதாரணமாக காட்டலாம். உலகெங்கிலும் உள்ள செக்ஸ் பிரியர்கள், வெறியர்கள், மனநோயாளிகள் இந்த நாட்டிற்கு செக்சிற்காகவே படையெடுக்கின்றனர்.
செக்ஸ் டூரிசம் என்பது குழந்தைகளை வன்புணரும் மனநோயாளிகளான பீடோஃபைலிக் (paedophile) போன்றவர்களுக்கு மட்டுமேயான வார்த்தை. இது அந்த கூட்டங்கள் நடத்தும் மிகப்பெரிய வன்முறைக்கான அதிகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்த மாதிரியான குற்ற கும்பலை பிடிக்க அமெரிக்கா இன்டர்போல் எப்பிஐ என பல தனிப்படைகளை அமைத்திருக்கிறது. ஆனாலும் இவர்களை முழுவதுமாக ஒழிக்க முடியாமல் உலகமே தவிக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை மும்பை, கோவா, புனே, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இது முதன் முதலில் பரவியது கோவாவில்தான். தாய்லாந்துக்கு தன்னுடைய செக்ஸ் ஆசைகளை தீர்க்க கிளம்பி வரும் மக்களை போலவே கோவாவது நோக்கியும் வெளிநாட்டினர் இதற்காகவே வருகை தருகின்றனர்.
‘எஸ்கார்ட்’ என்கிற பெயரில் 10 வயது முதல் 15 வயது வரையிலான ஆண், பெண் குழந்தைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களுடன் தங்க வைத்துக் கொள்வார்கள் இதுதான் முதல்படி. இப்படி தங்க வைக்க பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை செலவு செய்கிறார்கள். ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை பேக்கேஜ் முறையில் குழந்தைகளை அனுபவிக்க பணம் தருகின்றனர்.
இயற்கைக்கு மாறான பல வழிகளில் அவர்கள் குழந்தைகளை துன்புறுத்தி தங்கள் பாலியல் வெறியை தீர்க்கின்றனர். அவர்களுடன் குழந்தைகள் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ரணம் என்றுதான் சொல்ல வேண்டும். உள்ளூர் அரசியல்வாதிகளின் கட்டப்பஞ்சாயத்துடன் இந்த தொழிலில் கோடிக்கணக்கில் பணம் விளையாடுகிறது.
கடந்த ஐந்து வருடங்களாக கோவா மட்டும் அல்லாமல் பல்வேறு இந்திய மாநிலங்களுக்கும் இவர்கள் வருகின்றனர். தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னை இவர்களுக்கான கூடாரமாக தற்போது மாறியிருக்கிறது. வடபழனி, சாலிக்ராமம், கோடம்பாக்கம், கே கே நகர், தி நகர் போன்ற இடங்களில் இந்த தொழில் ரகசியமாக நடக்கிறது.
இந்த தொழிலுக்காக ஆண் மாற்று பெண் குழந்தைகள் குறி வைத்து கடத்தப்படுகிறார்கள். ஆகவே குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு. அதிலும் முக்கியமாக விபத்து நேரங்களில் கோல்டன் ஹவர் எவ்வளவு முக்கியமாக கருதப்படுகிறதோ அதே அளவு குழந்தை கடத்தலில் இந்த கோல்டன் ஹவர் முக்கியமானது.
குழந்தை காணாமல் போன முதல் இரண்டு மணி நேரங்களில் உடனடியாக காவல்துறை, சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 போன்றவர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தையின் அடையாளங்கள் ஆடை புகைப்படம் முதலியவற்றை மின்னஞ்சல் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவதும் அவசியம்.
உங்களுக்கு சந்தேகம் ஏற்படக்கூடிய நபர்கள் தொலைபேசி எண்களை காவல்துறையில் ஒப்படைக்க வேண்டும். இவற்றை எல்லாம் ஒரு மணி நேரத்திற்குள் செய்து விட்டால் காவல்துறை தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் குற்றவாளிகளை கொண்டு வந்து விடுவார்கள்.
இரு சக்கர வாகனங்கள் மூலம் தேடும் காவல்படை ரெட் பிரிகேட் பிரிவு, ப்ளூ பிரிகேட் பிரிவு போன்றவை மூலம் டோல் கேட் , நெடுஞ்சாலை போன்ற இடங்களை வளைத்து உடனடியாக பிடிக்க முடியும்.
நம் நாட்டில் எப்படியான குற்றவாளியும் உடனடியாக தப்பிக்க பல்வேறு ஓட்டைகள் இருக்கின்றன. ஓட்டைகளுக்குள் தான் சட்டமே இயங்குகிறது. அதனால் நமது பிள்ளைகளை நாமே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வது மிக சிறந்த தீர்வாகும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!