திருமணம் என்பது காலம் காலமாக உயிர்த்து வாழ வேண்டிய ஒரு உறவு. இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்பே விவாகரத்துக்கான நாளையும் சேர்த்தே முடிவு செய்யும் நபர்கள் அதிகம் ஆகிவிட்டனர். எவ்வளவோ வழக்குகள் . தீர்ப்பெழுதப்படாமல் கோர்ட் வாசலில் காத்துக் கிடக்கும் அதே சமயத்தில்தான் அதே அளவுக்கு திருமண மண்டபங்களும் நிறைந்து வழிகின்றன.
இந்த முரண்பாடுகளுக்கு நடுவே தடுமாறுகிறது இன்றைய தலைமுறை. இதற்கு ஒரு தீர்வாக ஷில்பா ஷெட்டி ஒரு நாளிதழில் தனது பெட்ரூம் ரகசியங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி நகரும் ஒரு முயற்சிதான் திருமணம் என்பதை தம்பதிகள் இருவருமே புரிந்து கொண்டு திருமண பந்தத்தில் நுழைய வேண்டும். நீண்ட காலம் ஒரே மனிதரோடு வாழ்வது என்பது எளிதான விஷயமே இல்லை. தம்பதிகளில் பலர் மணமுறிவை நோக்கி நகரும் போதும் சிலர் அன்யோன்யமாக இருக்கவும் செய்கின்றனர் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கு இதற்கு விதி விலக்கல்ல. அவர்களது காதல் அதற்குள் என்னவாக மாறியது எதற்காக இந்த விலகல் உறவில் சிக்கல்கள் என்பதற்கு தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஷில்பா.
தனது காதல் கணவர் ராஜ் குந்த்ராவுடன் தனக்கான உறவை நீட்டிக்க பல கடினமான கட்டங்களை தாண்டி வந்திருக்கிறார் ஷில்பா ( Shilpa ). அது பற்றி அவர் கூறுகையில்
நிதானம் என்பது வலிமையான உறவுக்கு முக்கிய தேவை என்கிறார். எதற்கும் பொறுமையற்ற தனம் இங்கு அதிகமாக இருக்கிறது. ஆயுள் முழுவதும் வர வேண்டிய காதல் உறவை அல்பாயுசில் முடித்து விடுகின்றனர் பல தம்பதிகள். வாய்ப்பு தர வேண்டும். புரிந்து கொள்ள போதிய நேரம் தர வேண்டும். இதற்கான பொறுமை கூட இல்லாதவர்கள்தான் விவாகரத்து வாங்க அவசப்படுகின்றனர் என்கிறார்.
நிதானமாக அணுகுவதும் காத்திருப்பதும் காதலின் முக்கிய குணங்கள். எதிலும் அவசரம் இல்லாமல் பொறுமையாக இருக்க வேண்டும். கல்யாண சந்தோஷத்தில் சில நாட்கள் காதலை கொட்டி விட்டு பின்னர் பேசாமல் இருப்பது மிக தவறான செயல். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அன்பை பொழியுங்கள். -உணர்வுகளால் ஒன்றிணைந்த ஒரு உறவை அவ்வளவு சீக்கிரம் பிரித்து விட முடியாது.
காலம் மாறி இருக்கிறது என்பதை ஆண்கள் ஏற்று கொள்ள வேண்டும். சரிசமமாக பெண்களை மதிக்க அவர்கள் முன்வர வேண்டும். உதட்டளவில் இல்லாமல் மனதளவில் மனைவியின் சுதந்திரங்களை மதிக்க வேண்டும். இருவரும் சேர்ந்து ஒன்றாக செல்லும் பயணத்தில் பரஸ்பர புரிதல்கள் அவசியம் தேவை.
அழகென்பது காலத்தால் மாறி விடக் கூடிய ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அழகை அடிப்படையாக வைத்து யாரையும் நேசிக்காமல் குணத்தை பார்த்து உங்கள் மனதை பறி கொடுங்கள் என்கிறார் ஷில்பா.
பரஸ்பரம் இருவருக்கும் வெவ்வேறு விதமான தேடல்கள் இருக்கலாம். தேவைகள் இருக்கலாம், ஒருவருக்கொருவர் அதனை புரிந்து மற்றவருக்கு அது கிடைக்க உதவி செய்வது வாழ்க்கையை இன்னும் அழகாக்கும்.
உங்களை ஆயுள் முழுக்க பார்த்துக் கொள்ள போகும் உங்கள் ஆரோக்யத்தில் அக்கறை செலுத்தும் உங்களை உயிரென நேசிக்கும் ஒரு உயிரை நீங்கள் மரியாதை குறைவாக நடத்தாதீர்கள். அடிமை போல நடத்தாதீர்கள். தேவைகளுக்கு அவர்கள் பணம் கேட்டால் கொடுங்கள். அதற்கு பதிலாக அவர்களிடம் அல்பமாக நடந்து கொள்ளாதீர்கள்.
உங்கள் காதல் ஆலமரம் போல நீடூழி வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒருவருடைய நிலையை இன்னொருவர் உணர்ந்து அதற்கேற்றாற் போல வாழுங்கள். ஒரு உறவு உயிரோடு இருப்பதும் உயிர் இழந்து போவதும் நம் கைகளில்தான் இருக்கிறது. அனுசரித்து போகும் தம்பதிகள் எப்போதும் அற்புதமான வாழ்வைத்தான் வாழ்வார்கள் என்று தனது தாம்பத்ய ரகசியங்களை கூறியிருக்கிறார் ஷில்பா ஷெட்டி.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
தாய்மை அடைந்திருக்கிறேன் என்பது எனக்கே தெரியாது – எமி ஜாக்ஸன்
உங்களோடு “செம்புலப் பெயர் நீர் போல ஒன்றிணையும்” ஒரு இதயத்தை கண்டுபிடிக்க 9 குறிப்புகள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.