ஒரு நாளின் எந்த நொடியாக இருந்தாலும் வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் யார் தான் நல்ல வாசனையை வேண்டாம் என்று சொல்வார்கள்? நாள் முழுவதும் நல்ல வாசனையோடு இருக்க வேண்டும் மற்றும் ஒரு சரியான திசையில் நாளை துவங்கவும் இது உந்துதலாக இருக்கும் என்ற எண்ணம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது என்பதை, நாம் எல்லோரும் ஒத்துக்கொள்ளலாம்! மார்க்கெட்டில் ஊடுருவிய பிராண்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், சரியான வாசனையை தேர்ந்தெடுக்கும் நம் விருப்பங்கள் கூட கெட்டுவிட்டது. உங்களுக்கான சரியான வாசனை திரவியத்தை தேர்ந்தெடுக்கும்போது, நீங்கள் எந்த இடத்திற்கு செல்ல இருக்கிறீர்கள் மற்றும் எந்த மாதிரியான விழாவிற்கு நீங்கள் வாசனை திரவியத்தை தேர்வு செய்கிறீர்கள் என்று எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். விருப்பமான சில நிராகரிக்கமுடியாத உயர்ந்த வாசனை திரவியங்களை கீழே சரிபார்க்கலாம்.
எந்த பருவத்திற்கும் மற்றும் எந்த விழாவிற்கும் மத்தியில் செல்லவதற்கான நறுமணத்தை தேர்வு செய்யும் வழிமுறைகள் மற்றும் எந்த வாசனையை (fragrance) தேர்வு செய்வது ஆகியவற்றில் நீங்கள் உறுதியாக இல்லையெனில், எப்படி தேர்வு செய்வது என இங்கே படிக்கவும்.
நீங்கள் தேர்வு செய்யக் கூடிய நறுமணங்கள்
நீங்கள் தேர்வு செய்ய சில குறிப்புகள்
நறுமணத்தை சோதனை செய்வது எப்படி
உங்கள் வாசனை திரவியத்தை சேமிப்பது எப்படி
வாசனை திரவியத்தின் திறனை எப்படி அதிகரிப்பது
பத்து சிறந்த விலையுயர்ந்த வாசனை திரவியங்கள்
இந்தியாவில் 12 சிறந்த மலிவான வாசனை திரவியங்கள்
உங்களுக்கு பிடித்த பிளாக்கர் அல்லது நீங்கள் பின்தொடரும் பிரபலம் யாராக இருந்தாலும், அனைவரும் பிதற்றுகின்ற அந்த விலையுயர்ந்த வாசனை திரவியத்தைதான் நாம் எல்லோரும் வாங்க விரும்புகிறோம், என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த பிராண்ட்களுக்காக டன் கணக்கில் பணத்தை செலவிடும் அளவிற்கு மதிப்பானதா அல்லது மார்க்கெட்டில் இந்த பிராண்ட்களுக்கு ஏதாவது மாற்று இருக்கிறதா, என்பதுதான் கேள்வி? நீங்கள் பெரிய பிராண்ட்களில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா அல்லது மிகவும் விலை குறைந்ததை முயற்சிக்க விரும்புகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது. இருக்கின்ற பட்ஜெட்க்குள் நெருக்கினால் சரியான வாசனை (perfume) திரவியத்தை தேர்வு செய்ய உதவும் மேலும் உங்கள் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
நீங்கள் தேர்வு செய்யக் கூடிய நறுமணங்கள் (The Fragrances You Can Choose)
எந்த வாசனை (perfume) திரவியத்தை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க, நீங்கள் எந்த விஷேஷத்திற்கு அதை அணிந்து கொண்டு போகப்போகிறீர்கள் என்பதை பொறுத்து தேர்வு செய்யுங்கள்; அந்த ஸ்பெஷல் டேட், அல்லது அந்த முக்கியமான சந்திப்பு(மீட்டிங்), அல்லது நீங்கள் பங்குபெறும் பார்ட்டி அல்லது நீங்கள் தினசரி இந்த நறுமணத்துடனே இருக்க விரும்புகிறீர்கள் எனில். ஒவ்வொரு விழாவும் அதன் தனி வாசனையோடு அழைக்கும். உங்களுக்கு பிடித்த ஒரு மலர் அல்லது மிஸ்ட்டி வாசனை அல்லது மஸ்கி வாசனை, எதுவாக இருந்தாலும், தினசரி பயன்படுத்த மிஸ்ட்டி மற்றும் சிட்ருசி வாசனை நன்றாக இருக்கும். இந்த மெல்லிய வாசனைகள் அந்நாளிற்கு உங்களை அலங்கரித்தாலும், நல்ல தாக்கத்துடன் ஊம்ப் தேவைப்படும்போது வலிமையான வாசனையை தேர்வு செய்யுங்கள்.
பருவ காலத்தை பொருத்தும் வாசனை திரவியங்களின் (perfumes) தேர்வு மாறுபடும், கோடைகாலத்திற்கு மலர் மற்றும் மிஸ்ட்டி வாசனை திரவியம் சிறப்பாக இருக்கும், மழைக்காலத்திற்கு மிகவும் ஆழ்ந்த மஸ்கி மற்றும் வுட்டி வாசனைகள் மிகத் தேவையான ஊக்கத்தை தரும். வாசனை திரவியங்களை தேர்வு செய்யும் போது உங்களை சுற்றி உள்ள மக்களை மனதில் வைத்து கொள்ளுங்கள். வலிமையான வாசனை திரவியங்கள் சில பேரை எரிச்சலடைய செய்யும், அதனால் குறிப்பிட்ட நபர்களுக்கு மத்தியில் செல்ல இருக்கும் போது கவனமாக தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
நீங்கள் தேர்வு செய்ய சில குறிப்புகள் (Tips To Choose Best Perfume)
பொதுவாக வாசனை (perfume) திரவியத்தில் இருக்கும் நறுமணத்தை மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம்: மேல், நடு மற்றும் அடித்தளம். இந்த அடுக்குகளுக்கு இடையில் நடக்கும் கெமிக்கல் விளைவுதான் ஒரு குறிப்பிட்ட நறுமணத்தை உருவாக்கி நமக்கு இதமான வாசனையை தருகிறது. ரோஸ், ஜாஸ்மின், மாக்னோலியா, லில்லீஸ் போன்றவை மலர் வாசனை திரவியங்கள் அதுபோல சிட்ரஸ், கிரேப்புரூட், டங்கெரின் போன்றவை நமக்கு சிட்ரஸ் தேர்வுகளாகும். ஆப்பிள், பியர், ஸ்ட்ராபெர்ரி, பீச்எஸ் மற்றும் ரேஸ்ப்பெர்ரி போன்ற பழம் சார்ந்த புது வாசனை திரவியங்கள் நமக்கு தேர்வுகள் செய்ய இருக்கிறது. சின்னமோன் மற்றும் ஸ்டார் அனீஸ் போன்ற மசாலா சார்ந்த வாசனைகளை கூட நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
அதிக வலிமையான அல்லது மஸ்கி வாசனைகளை தேர்வு செய்ய விரும்பும் மக்கள், சந்தனமரம், பிர்ச், சிடார் போன்ற வுட்டி குறிப்புகளை அடித்தள குறிப்பாக இருக்க உறுதி செய்ய வேண்டும்.
நறுமணத்தை சோதனை செய்வது எப்படி (How To Check Aroma Of The Perfume)
வாங்குவதற்கு முன் நறுமணத்தை (fragrance) சோதித்துப் பார்ப்பது சிறந்ததென்றாலும், நீங்கள் தேர்வும் செய்யும் மனம் எந்த சரியான தருணத்திற்கு உபயோகிப்பது என்பதை உறுதி செய்யவும் வேண்டும். ஒரு எளிய முகர்ந்து பார்க்கும் சோதனை மூலம் நீங்கள் தேர்வு செய்யப்போகும் வாசனை திரவியத்தின் அடித்தள குறிப்பு உங்களுக்கு பிடிக்கிறதா என்று உறுதி செய்யுங்கள். மேலும், வாசனை திரவியத்தின் திறனை சோதனை செய்ய நீங்கள் விரும்பினால், உங்கள் வ்ரிஸ்ட்டில் தடவி அதன் நீடிக்கும் தன்மையை சரி பார்க்கவும்.
பெரும்பாலான மக்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்வது பிடிக்கும், ஆனால் வாசனை திரவியத்தை பொறுத்தவரை கடைக்கு நேராக சென்று அங்கிருக்கும் சோதனை திரவியங்களைக் கொண்டு உங்கள் வாசனை திரவியத்தை மதிப்பிடலாம். ஆன்லைனில் முயற்சி செய்து உங்கள் பிடித்தமான வாசனையை அணுகும் சிக்கலான செயல்முறையை எளிதாக்க உதவும்.
உங்கள் வாசனை திரவியத்தை சேமிப்பது எப்படி (How To Save Your Perfume)
முதலில், காலாவதியான தேதிக்கு வரும்போது, நீங்கள் ஒரு முறை கூட ஸ்ப்ரே செய்யாமல் இருந்தால் உங்கள் வாசனை (perfume) திரவியம் குறையாது. வாசனை திரவியத்தில் ஆக்ஸிஜென் அறிமுகப்படுத்திய பிறகு தான் படிப்படியாக சென்ட் குறைய ஆரம்பித்தது(அதாவது: ஸ்பிளாஷ் பாட்டிலை திறக்கும் போது, அல்லது ஆட்டோமைசரை முதல் முறை பம்ப் செய்யும்போது). உங்கள் வாசனை திரவியத்தை அறையின் சாதாரணமான வெட்பத்தில் வைப்பதே நல்ல பழக்கம். ஒருவேளை பருவநிலை மிகவும் சூடாகவும் அல்லது ஈரப்பதமாகவோ இருந்தால், உங்கள் வாசனை திரவியத்தை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும், இந்த செயல்முறையால் உங்கள் வாசனை திரவியம் வெயிலில் பட்டு பாலாவதை தடுக்கலாம். மேலும், உங்கள் வாசனை திரவியத்தின் புது தன்மையையும் மற்றும் அதில் இருக்கும் இயற்கை எண்ணெயின் மணத்தையும் பராமரிக்கிறது, பாத்ரூம் அல்லது வேறு ஈரமான இடங்களில் அதை வைக்காதீர்கள்.
உங்கள் வாசனை திரவியத்தின் சிறந்த பயன் பெற, அதை ஒரிஜினல் பாக்சில் தலைகீழாக வைக்கவும். ஒரு காலகட்டத்திற்கு மேல் வெயிலிலும் சூரியஒளியிலும் வைத்திருப்பது உங்கள் நறுமணத்திற்கு சீர்கேடாக விளையும். ஒரு இருட்டான கப்போர்டு அல்லது ட்ராயரில் கூட நீங்கள் வைக்கலாம். மேலும், பயன்படுத்துவதற்கு முன் உங்கள் வாசனை திரவிய குப்பியை குலுக்க வேண்டாம், அது உங்கள் வாசனை திரவியத்தை வெளிக் காற்று பட வைத்து மேலும் மோசமான சில கெமிக்கல் விளைவுகளை வாசனை திரவியத்திற்குள் ஏற்படுத்தும்.
வாசனை திரவியத்தின் திறனை எப்படி அதிகரிப்பது (How To Increase The Efficiency Of Perfume)
உங்கள் வ்ரிஸ்ட் மீது வாசனை திரவியத்தை தேய்ப்பதற்கு பதிலாக, வெறுமனே மென்மையாக ஸ்ப்ரே செய்யுங்கள் மேலும் சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் வாசனை திரவியத்தை நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும் அருமையான டிப் என்னவென்றால் வாசனை திரவியத்தை ஸ்ப்ரே செய்வதற்கு முன் வேசெலின் அல்லது பெற்றோலியம் ஜெல்லியை உங்கள் வ்ரிஸ்ட் அல்லது நீங்கள் உங்கள் உடலில் எந்த இடத்தில் வாசனை திரவியத்தை ஸ்ப்ரே செய்ய இருக்கிறீர்களோ அந்த இடத்தில் தடவவும். உங்கள் வ்ரிஸ்ட், உங்கள் காதின் பின்புறம், உங்கள் முட்டிக்கு பின்புறம், உங்கள் கழுத்திற்கு பக்கவாட்டில், உங்கள் முழங்கைகுள், மேலும் உங்கள் காலின் பின்புறம் மற்றும் கணுக்கால் ஆகியவை உங்கள் வாசனை திரவியத்தை நாள் முழுவதும் நல்ல நறுமணத்துடன் வைக்கும் சிறந்த இடங்கள். உங்கள் வாசனை திரவியத்தை நீங்கள் குளித்த உடன் மற்றும் உடை உடுத்துவதற்கு சற்று முன் ஸ்ப்ரே செய்வதால், அதிகநேரம் வைத்திருக்கும்.
சோதனை திரவியங்கள் கிடைக்கும் சாத்தியம்
நீங்கள் எந்த வாசனை (perfume) திரவியத்தை தேர்வு செய்வது என்று உறுதியாக இல்லை என்றால் சோதனை திரவையம் கிடைக்கும் சாத்தியத்தை செக் செய்யுங்கள். மேலும், நீங்கள் ஒரு புது வாசனை திரவியத்தை முதல் முறை வாங்குகிறீர்கள் என்றால், அந்த வாசனைக்கு மினி வெர்சன் இருக்கிறதா என்று பாருங்கள். புதிய வாசனைக்கு நீங்கள் பழக மட்டுமன்றி, வேறு வெளிப்புற காரணங்களினால் அதன் தன்மை மாறவோ அல்லது ஆக்ஸிடேஷன் ஏற்பட்டு அளவு குறையவோ செய்யும் வாய்ப்பை சமாளிக்க அது உங்களுக்கு உதவும். வாசனை திரவியத்தை விரைவாக மற்றும் சுறுசுறுப்பாக பயன்படுத்தவே பொதுவாக தயாரானது, எவ்வளவு சீக்கிரம் அதை பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக அதன் அசல் கலவை மாறாமல் நறுமணமாக இருக்கும். ஒரு பெரிய பாட்டிலை மாதக்கணக்கில் வைத்து மேலும் வாசனை திரவியத்தின் கலவையை மாற்றுவதற்கு பதிலாக அதன் சின்ன பேக்கேஜ் அல்லது டெஸ்ட்டர் வர்ஷனை தேர்ந்தெடுங்கள்.
வழிமுறைகளும் மற்றும் விளக்கங்களும் (Instructions And Explanations)
ஒவ்வொரு வாசனை திரவியத்திற்கும் அதன் தனிப்பட்ட விளக்கங்கள் இருக்கிறது மேலும் பயன்படுத்தும் வழிமுறைகள் ஒவ்வொரு வாசனை திரவியத்திற்கும் வேறுபடும். உங்கள் தனிப்பட்ட ஸ்டைல் மற்றும் தனித்தன்மைக்கு பொருந்துமாறு அந்த தயாரிப்பு இருக்கிறதா என்று அதை வாங்குவதற்கு முன் அதன் விளக்கத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். உங்கள் தனித்தன்மையை பூர்த்தி செய்யும் விதமாக, சிட்ரஸ், மலர்கள் அல்லது மஸ்கி ஆகிய அடித்தள வாசனைகளை தேர்வு செய்ய உறுதியாய் இருங்கள் அதேசமயம் உங்களுக்கு அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு அது மிகை ஆகி விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலே கூறிய குறிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வு செய்ய இந்தியாவில் கிடைக்கும் வாசனை திரவியத்தின் பட்டியலை கீழே காணலாம்.
பத்து சிறந்த விலையுயர்ந்த வாசனை திரவியம் (10 Best Expensive Perfumes)
1. ஈஸ் செயின்ட் லாரென்ட் ப்ளாக் ஓபியம் ஊ டி பர்ஃபூம் – Yves Saint Laurent Black Opium Perfume
இந்த வாசனை திரவியம் உங்கள் பாக்கெட்டில் இருந்து பதினான்கு ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் கரைத்தாலும், உங்களுக்கு பிடித்த பிரபலம் உபயோகப்படுத்தியது போல் நிச்சயம் வாசனையாக இருப்பீர்கள். பிங்க் பெப்பர், ஆரஞ்சு ப்லோஸம், மற்றும் பியர் ஆகியவை இந்த வாசனை திரவியத்தின் மேல் குறிப்புகள். நடு குறிப்பில் காஃபி மற்றும் மல்லிகை அதுபோல் வெண்ணிலா, பட்ச்சொலி மற்றும் சிடார் ஆகியவை அடித்தள குறிப்புகளாகும். அளவைப் பொறுத்து இரண்டு விதமாக இந்த வாசனை திரவியம் கிடைப்பதால், உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்யலாம்.
POPxo பரிந்துரைக்கிறது: பிளாக் ஓபியம் பை ஈஸ் செயின்ட் லாரென்ட், ரூ 14,220
2. டாம் ஃபோர்ட் வன்இல் ஃபட்டெல் – Tom Ford Vanille Fatale
கிரீமி வெண்ணிலா, ஹெடி சேஃப்ரான் மற்றும் மிர்ரின் மென்மையான நோட்ஸ் ஆகியவை காய்ந்து ஒரு இனிப்பான மேலும் ஒரு காரசாரமான சென்ட் தருவதாக நினைத்துப்பாருங்கள். வெண்ணிலா சென்ட்க்கு இந்த ஸ்மோகி அஃப்டர் வாசனை ஒரு ரிச்நெஸ் தரும் அது உண்மையில் நீண்ட நேரம் நீடிக்கும்.
உங்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு ஸ்ப்ரே, அதனால் எந்த நேரத்திலும் இந்த வாசனை திரவியம் தீர்ந்து விடுவதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
POPxo பரிந்துரைக்கிறது: வேன்நில் ஃபாட்டேல் பை டாம் ஃபோர்ட், ரூ. 16,896
3. பெண்களுக்கான எஸ்டே லாடெரின் பியூடிஃபுள் – Beautiful By Estee Lauder For Women Perfume
ஒரு சாதாரண நறுமணம் தரும் எஸ்டே லாடெரின் பியூடிஃபுள் மூன்று தசாப்தங்களாக இருக்கிறது ஆனால் இன்னும் அதுதான் மிகவும் புகழ்பெற்ற டாப் செல்லர்களில் ஒன்று. ரோஸ், மல்லிகை, மற்றும் கார்னேஷன் ஆகிய மலர்களின் எஸென்ஸ்ஸை சிட்ரஸ், மேலான்ஸ், ப்ளம்ஸ், மற்றும் பீசெஸ் ஆகிய பழங்களின் நோட்ஸ்களோடு அது ஒருங்கிணைக்கப்பட்டது.
POPxo பரிந்துரைக்கிறது: எஸ்டே லாடெரின் பியூடிஃபுள்; 30 மில்லி ரூ.5,455க்கு
4. லங்கோம் ல வி ஏ பெல் லஒ டி பர்ஃயும் – La Vie Est Belle By Lancome Perfume Spray
நாள் முழுதும் போட்டுக்கொள்ள லங்கோம் ல வி ஏ பெல் ஒரு குதூகலமான பழ நறுமணம் கொண்டது. அதில் வெண்ணிலா, பட்ச்சோல், பிராலைன், மற்றும் ஆரஞ்சு ப்லாஸம் மற்றும் ஜாஸ்மின் கலந்த பிளாக் கரண்ட் ஆகியவை இருக்கிறது. அது நண்பர்களுடன் வெளியே செல்ல அல்லது அந்த ஸ்பெஷல் லஞ்ச் டேட்க்கு பொருத்தமாக இருக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது: லங்கோம் ல வி ஏ பெல், 73.93 மில்லி ரூ.12,239க்கு
5. விக்டோரியாவின் சீக்ரெட் பாம்ஷெல் ஊ டீ பர்ஃயும் ஸ்ப்ரே – Victoria’s Secret Bombshell Perfume
உங்கள் கோடைகாலத்தை நினைவுபடுத்தும் விக்டோரியாவின் சீக்ரெட் பாம்ஷெல்லின் நறுமணம். அதில் பேசன் பழத்துடன் பியோன் சென்ட் இருக்கிறது. புதிய சிட்ரஸ் அடித்தளம் கொண்ட வாசனை திரவியம் அதில் இருக்கிறது மேலும் மலர்களின் அடித்தள தொனியையும் பராமரிக்கிறது.
POPxo பரிந்துரைக்கிறது : விக்டோரியாவின் சீக்ரெட் பாம்ஷெல், 1.7 அவுன்ஸ் ரூ. 6,525
6. லாக்சிடான் கிரிஸ்ப் சிட்ரஸ் வெர்பேனா ஒ டி டாய்லெட் ஸ்ப்ரே – L’Occitane Verbena Eau De Toilette
கோடைகாலத்தில் நீங்கள் மிகவும் எரிச்சலாக உணர்ந்தால், லாக்சிடான்னின் இந்த கிரிஸ்ப் சிட்ரஸ் ஸ்ப்ரேவால் கூல் ஆகுங்கள். பிரான்ஸ் வயலில் விளைந்த ஆர்கானிக் வெர்பேநாவினால் லெமன் நறுமணம் மெருகேறியது. அதில் சிட்ரஸ் அண்டர்டோன் இருப்பதால் உங்களை ஆட்கொள்ளாமல் நாள் முழுவதும் பிரெஷ்ஷாக உணரச் செய்யும்.
POPxo பரிந்துரைக்கிறது: வெர்பேனாவின் லாக்சிடான் , 100 மில்லி ரூ. 3,950க்கு
7. ஹுகோ பாஸ் ஃபெம் ஒ டி பர்ஃயும் – Hugo Boss FEMME Perfume
மஸ்கி வாசனை மலர்களின் நோட்ஸ்ஸோடு சேர்ந்து, ஹுகோவின் ஃபெம் ஒ டி பர்ஃயும் பாஸ்ஸின் நறுமணம் மாசில்லாமல் கிரிஸ்பாக இருக்கும் மேலும் பல நேரங்களுக்கு நீடித்திருக்கும். மஸ்கி அடித்தளம் ரோஸ் மற்றும் ஓரியன்டல் லில்லியோடு இணைந்து பழங்களின் டாப் நோட்ஸ்க்கு ஆதரவளிக்கிறது. இது நாள் முழுவதும் சரியான பிரதான வாசனையுடன் உங்களை வைக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது : ஹுகோ பாஸ் ஃபெம் 75மில்லி ரூ. 4,399க்கு
8. க்ளீன் ஒரிஜினல் ஒ டி பர்ஃயும் ஸ்ப்ரே – Clean Clean Original Perfume Spray
சிட்ரஸ் அண்டர்டோன்ஸ் கொண்ட லேசான மற்றும் நுண்ணிய மலர் நறுமணத்தை தேர்வு செய்ய விரும்பினால், க்ளீன் ஒரிஜினல் ஸ்ப்ரேவை வாங்குங்கள். அது மிகவும் கர்வமாக இல்லாமல் நுட்பமாகவும் மற்றும் புதிதாகவும் இருக்கிறது.
POPxo பரிந்துரைக்கிறது : க்ளீன் ஒரிஜினல் பர்ஃயூம் 60 மில்லி ரூ. 5,613க்கு
9. கோச் நியூ யார்க் தி பிராக்ரன்ஸ் ஒ டி பர்ஃயும் ஸ்ப்ரே – Coach Perfume Spray
நியூ யார்க் நகரத்தால் ஊக்குவிக்கப்பட்டு, இந்த வாசனை திரவியத்தில்
ஆடம்பரமும் கிளாஸ்சும் ஒருங்கே அமைந்திருக்கிறது. ரேஸ்ப்பெர்ரியின் ஃபிரூட்டி அண்டர்டோன்ஸ்ஸோடு ரோஸ் மலரின் ஊக்கமும் கலந்த நறுமணம் மேலும் மஸ்கி வெண்ணிலா நறுமணச் சுவையோடு நீடித்து இருக்கும்.
POPxo பரிந்துரைக்கிறது : கோச் நியூ யார்க் 90மில்லி ரூ. 5,265க்கு
10. கால்வின் க்ளென் இயூபோரியா ஒ டி பர்ஃயும் – Calvin Klein Euphoria EDP for Women
உங்கள் மீது கவனம் இருக்க விரும்பினால், கால்வின் க்ளென்னின் இயூபோரியாவை முயற்சித்துப் பாருங்கள். கவர்ச்சியான பழங்கள் மற்றும் மயக்க வைக்கும் மலர்களின் உணர்ச்சிமிகு கலவை ஆம்பர் மற்றும் மஹோகணியின் அடித்தளத்தில் உருவானது.
POPxo பரிந்துரைக்கிறது : கால்வின் க்ளென் இயூபோரியா 100 மில்லி ரூ. 4,631க்கு
உங்கள் பிடித்தமான நறுமணத்தை வாங்க உங்கள் பாக்கெட்டில் துளையிட வேண்டியதில்லை. நீங்கள் கண் வைத்த அந்த நறுமணத்தை வாங்க விலைமதிப்பில்லாத மாற்று வாசனைகளை பார்க்கலாம்.
இந்தியாவின் 12 சிறந்த மலிவான வாசனை திரவியங்கள் (12 Best Affordable Perfumes)
1. ரெவ்லான் சார்லி ரெட் – Revlon Charlie Red Perfume for Women,
வழக்கமாக வேலைக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்ல பொருத்தமானது, இந்த மலர் மற்றும் மஸ்கி வாசனை கொண்ட சார்லி ரெட். வழக்கத்திற்கு மாறானா ஆனால் புதிய சேர்க்கையில் அது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்!
விலை: ரூ 489. இங்கே வாங்கவும்.
2. நைக்கியின் ரெண்டி – Nike Trendy EDT for Women
நவீன பெண்ணிற்காக வடிவமைக்கப்பட்ட இது, விளையாட்டுத் தனமாகவும் இருக்கும் இருப்பினும் பெண்மையாகவும் இருக்கிறது! இதை பயன்படுத்துவதால் பூரணமாக ஒரு நாளை துவங்க அதிக புத்துணர்ச்சியும் தருகிறது! இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த வாசனை (perfume) திரவியங்களில் நைக்கியின் ரெண்டியும் ஒன்று!
விலை: ரூ 598. இங்கே வாங்கவும்.
3. அடிடாஸ்ஸின் ஃப்ரூட்டி ரிதம் – Adidas EDT Female Fruity Rhythm
ஃப்ளோரல் மற்றும் ஃப்ரூட்டி வாசனையை நேசிக்கும் யாருக்கும் இது ஒரு பிரோதமான தேர்வு! நீண்ட நாளை பற்றிய எண்ணம் உங்களை மன சோர்வடைய செய்தால், இது உங்களுக்கு பூரணமாக உடன் இருக்கும்.
விலை: ரூ 560. இங்கே வாங்கவும்.
4. ஃபெமினைன்னின் டீசல் பிளஸ் பிளஸ் – Diesel Plus Plus Perfume
கசப்பான ஆரஞ்சு மற்றும் பள்ளத்தாக்கின் லில்லி ஆகியவற்றின் மேல் நோட்ஸ்சுடன், இது உங்கள் நடுத்தர அதிக இனிப்பான-வாசனை சென்ட் அல்ல. நாங்கள் இந்த நறுமணத்தின் மென்மையை முழுவதுமாக நேசிக்கிறோம்!
5. தி பாடி ஷாப்பில் இருந்து ஆம்ஸ்சோனியன் வைல்ட் லில்லி பர்ஃயூம் எண்ணெய்
பாட்டிலின் உருவத்திற்கு விலை சற்று அதிகம் என்றாலும், உண்மையில் தினமும் ஒரு துளி பயன்படுத்தினாலே போதுமானது! (நீங்கள் வெளியே செல்ல, உங்கள் வ்ரிஸ்ட் மீது மற்றும் உங்கள் காதின் பின்னால் இதை ஒத்தி எடுத்தால் போதும்!) இது நீண்ட நேரம் நீடிக்கும், மேலும் உங்கள் கைபையில் எளிதாக எடுத்துச் செல்லலாம்.
விலை: ரூ 895. இங்கே வாங்கவும்.
6. வுமன்னுடைய பெனட்டன் ஹாட் ஈடிடி – Benetton Hot EDT for Women
இதில் இருக்கும் வுட்டி, பிரெஷ் மற்றும் ஓரியெண்டல், ஒரு யம்மியான நறுமணத்தை தருகிறது! இது சூப்பராக நீண்ட நேரம் இருக்கும் – நிச்சயம் உங்கள் பணத்தின் மதிப்பிற்கு உகந்தது!
விலை: ரூ 615. இங்கே வாங்கவும்.
7. பிலேபாய்யின் பிலே இட் ஸ்பைசி – Playboy Play it Spicy EDT for Women
அனைவரும் தற்பெருமை கொள்ள விரும்புவது பிலேபாய்! முற்றிலும் சாத்தியமாகும்! நீங்கள் உங்கள் வைல்ட் தோற்றத்தை காண்பிக்க நினைக்கும் போது பிலே இட் ஸ்பைசி பொருத்தமாக இருக்கும். விளையாடுங்கள்!
விலை: ரூ 675. இங்கே வாங்கவும்.
8. ஒரிஃபிளேம் குயின் ஆப் தி நைட் – Orimflame Perfume
வேலை இடங்களைவிட, இது அழகிய உடை அணிந்து டின்னர்க்கு மற்றும் வேறு ஸ்பெஷல் விழாவிற்கு செல்லும் போது பிலே செய்ய மிகச் சரியாக இருக்கும்! மேலும், இவ்வளவு ஃபேன்சியாக இருக்கும் இந்த வாசனை திரவிய பாட்டிலை யார் தான் விரும்பமாட்டார்கள்?!
விலை: ரூ 800. இங்கே வாங்கவும்.
9. போலீஸ்ஸின் சன்சென்ட் – Police Sunscent EDT for Women, Pink
தினசரி இதை பயன்படுத்தினால் நீங்கள் ஒரு விடுமுறையில் இருப்பதை போல உணர்வீர்கள்! இது உங்கள் வேலை செய்யும் திறனை குறைக்காது, கவலைப் படாதீர்கள்! காலையில் இருந்து மாலை வரை உங்களை புத்துணர்ச்சியான வாசனையுடன் வைத்திருக்கும் மேலும் குறிப்பாக அந்த புழுக்கமான நாட்களில் உயர்வாக இருக்கும்.
விலை: ரூ 999. இங்கே வாங்கவும்.
10. விக்டோரியாவின் சீக்ரெட் கார்டன் புயூர் செடுக்ஷன் – Victoria’s Secret Garden Pure Seduction Perfume
ஏதாவது இனிப்பான மற்றும் கவர்ச்சியானவை தேவை என்று நீங்கள் உணர்ந்து வாங்க நினைத்தால் கடல் கடந்து செல்லாமலேயே, இது உங்களை காப்பாற்ற வரும்! நிச்சயம் ஒரு சோம்பலான நாளில் உங்களை குதூகலிக்க செய்யும்.
விலை: ரூ 722. இங்கே வாங்கவும்.
11. பேப்இந்தியாவின் சிபிரஸ் பர்ஃயூம் எண்ணெய் – Fabindia Women’s Perfume
ஒரு பூந்தோட்டத்தைப் போல நீங்கள் வாசனையாக இருந்து இருந்து சலிப்படைந்து விட்டால், இந்த ஃபாரெஸ்ட்டி சென்ட்க்கு மாறுங்கள்! இதில் மென்மையான மற்றும் நீடித்த நறுமணம் இருக்கிறது மேலும் இது எளிதாக பயன்படுத்தும் விதமாக ரோல் ஆன் அப்ளிகேட்டருடன் வருகிறது. வெறுமனே உங்கள் வ்ரிஸ்ட்டில் மற்றும் காதின் பின்புறத்தில் தடவிக்கொண்டு செல்லலாம்!
விலை: ரூ 290. இங்கே வாங்கவும்.
12. டைடன்னின் ஸ்கின் நூட் – Titan Skinn Women’s Perfume
லிச்சீ மற்றும் ரோஸ்ஸின் நறுமணத்தால், நீங்கள் உணர்ச்சி மிகுந்து அசாதாரணமான வாசனையோடு இருக்க விரும்பினால் ஸ்கின் நூட் பயன்படுத்துங்கள். இதன் சிறப்பம்சம் என்ன? இது எப்போதும் அதிகமாக நீடித்து இருக்கும்!
விலை: ரூ 949. இங்கே வாங்கவும்.
மேலே பட்டியலிடப்பட்ட அழகான மற்றும் கவரக்கூடிய நறுமண வகைகளை, புதிதாக, நம்பிக்கையாக மற்றும் நேர்த்தியாக உணர உங்கள் அணிகலன்களோடு ஆய்வு செய்து கொண்டே இருங்கள். சரியான ஒன்றை பயன்படுத்தி மன நிலையை உயர்த்தி உங்களுக்கு பிடித்தமான நினைவுகளை தூண்டுங்கள். என்ன காரணமாக இருந்தாலும், நல்ல வாசனையோடு இருப்பதை நிறுத்தாதீர்கள். மேலும் பாட்டிலை ஒரு குளிர்ந்த மற்றும் காய்ந்த இடத்தில் வைக்க மறக்காதீர்கள்; மேலும் பாட்டிலின் மூடியை நீண்ட நேரம் திறந்து வைத்து அதன் எசென்ஸ் கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நறுமனைகளை நீங்கள் முயற்சி செய்ததுண்டா? எது உங்களுக்கு விருப்பமானது? கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் எங்களுக்கு தெரிவிக்கவும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.