”சாதி மதம் இனம் மொழி தாண்டி வரும்
காற்றைப்போல காதலையும் சுவாசிப்போம்”
என ஷாஜகான் படத்தில் ஒரு வசனம் வரும். அந்தவகையில் நாளைக்கு வரும் காதலர் தினத்தை உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஆவலுடன்
எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து காதலை சொல்லப்போகிறவர்களும் ஒருவித படபடப்பான மனநிலையுடன்
காத்திருக்கின்றனர்.
காதலிக்கும் காலத்தில் உங்கள் காதலன்/காதலிக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் வேண்டும். அவருக்கு நீங்கள் மிகவும் முக்கியமானவர் என்பதை
உணர்த்திடும் வகையில் அவ்வப்போது சில அறிகுறிகளை(Signs) அவர் வெளிப்படுத்துவார். அப்படில்லாம் இதுவரைக்கும் இல்ல என்று நீங்கள் சொன்னால் ஒருவேளை நீங்கள் இதுபோல அறிகுறிகள் (Signs) கவனித்திருக்க மாட்டீர்கள்.
இல்லை எனில் உங்கள் இருவரது லவ்(Love)அந்தளவுக்கு ஸ்ட்ராங் இல்லை
என்று கூறலாம்.அது என்னென்ன மாதிரி வாழ்நாள் அறிகுறிகள்(Signs) என்று சொன்னால் தானே என்னால் அதனை கண்டறிய முடியும் என்று கேட்கிறீர்களா? உங்களுக்காகவே அது என்ன மாதிரியான அறிகுறிகள்(Signs) என்று இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.
அவற்றை படித்துப்பார்த்து இதுபோல உங்களவர் உங்களிடம் நடந்து கொள்கிறாரா? என்பதை செக் செய்யுங்கள். ஒருவேளை அப்படி எதுவும் இல்லை எனில் உங்கள் எதிர்கால வாழ்வு குறித்து அவருடன் பகிர்ந்து கொண்டு அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது? என்பதை கவனித்துப் பாருங்கள். எதிர்கால வாழ்வு குறித்த அக்கறை அவரது பேச்சில் வெளிப்படவில்லை என்றால் நீங்கள் இருவரும் ஒரு நல்ல புரிந்துணர்வில் இல்லை என அர்த்தம்.
எனவே காலம் தாமதிக்காமல் அந்த உறவில் இருந்து நீங்கள் வெளியேறுவது தான் உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நன்மையாக அமையும். அது என்ன மாதிரியான உணர்வுகள்,அறிகுறிகள்(Signs) என கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வாழ்நாள் முழுவதும் அவருக்கு ‘வேண்டும்’ என்பதற்கான அறிகுறிகள்! படித்துப்பார்த்து உங்கள் வாழ்வை மகிழ்ச்சியுடன் அமைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்!
1.எதிர்கால வாழ்வு
உங்கள் எதிர்கால வாழ்வு குறித்து அவருடன் பேசும்போது உங்களுக்கு அதுகுறித்த எந்தவித பயமும் இருக்காது. குறிப்பாக அவரது முகத்தில் எந்தவித அசவுகரியமும் இருக்காது. உங்கள் எதிர்கால வாழ்வு குறித்து அவருடன் பகிர்ந்து கொள்ளும்போது அவர் அந்த பேச்சிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்.
2.உங்களுடன் இருக்க
உங்களுடன் நேரம் செலவு செய்ய முயற்சி செய்வார். ஒரு நீண்ட விடுமுறை அல்லது அலுவலக வேலை தொடர்பாக எங்காவது நீண்ட தூரம்
சென்றிருந்தால் அது முடிந்து வந்தவுடன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் உங்களுடன் நேரம் செலவு செய்திட விரும்புவார்.
3.உங்கள் விருப்பம்
உங்கள் விருப்பம் அவர் விருப்பமாக மாறக்கூடும். உதாரணமாக உங்களுக்கு டான்ஸ் மீது ஆர்வமும் அவருக்கு பேஸ்கட் பால் மீது ஆர்வமும்
இருக்கும் பட்சத்தில் உங்களுக்காக அவர் டான்ஸ் ஆட முன்வரக்கூடும்.
4.பிளான்கள்
ஒருநாளில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வார். அதேபோல அன்றைய நாளில் உங்களது திட்டங்கள் குறித்தும்
அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்.
5.மனநிலை
உங்கள் மனநிலை பொறுத்தே அவரது மனநிலை அமையும். நீங்கள் சோகமாக இருந்தால் உங்களை சிரிக்க வைக்க அவர் தன்னால் இயன்ற
முயற்சிகளை எடுத்துக்கொள்வார்.
6.ஐ லவ்(Love) யூ
நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களிடம் ஐ லவ்(Love) யூ சொல்லத்தயங்க மாட்டார். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என அவ்வப்போது உங்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
7.அவரது நண்பர்கள்(Friends) உங்கள் நண்பர்கள்(Friends)
தனது நண்பர்களை(Friends) உங்களுக்கு அறிமுகப்படுத்துவார். தனது நண்பர்கள்(Friends) நடத்தும் ஹவுஸ் பார்ட்டிகள், குரூப் சாட்களில் உங்களுடன் சேர்ந்து கலந்து கொள்வார். இதன் வழியாக அவரது நண்பர்கள்(Friends) உங்களுக்கும் நண்பர்கள்(Friends) என்பதை உணர்த்துவார்.
8.தனது வீட்டிற்கு
உங்களை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அவரது குடும்பத்தினரிடம் உங்களை அறிமுகப்படுத்தி வைக்கத்தயங்க மாட்டார்.
9.சின்னஞ்சிறிய
உங்கள் குறித்த சின்னஞ்சிறிய விஷயங்களையும் அவர் நினைவில் வைத்திருப்பார். கடந்த காலத்தில் நீங்கள் பேசிய விஷயங்களை உங்களிடம்
பகிர்ந்து கொள்வார். இது எந்தளவு அவர் உங்கள் பேச்சை காது கொடுத்துக் கேட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும்.
10.சிறிய விஷயங்களை
உங்களுடன் இணைந்து சிறுசிறு செயல்களை மேற்கொள்ள விரும்புவார். உங்களுடன் இணைந்து சமைப்பது, மளிகை சாமான்கள் வாங்குவது,
திருமணத்திற்கு செல்வது ஆகிய விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்.
11.பிரச்சினைகளை தீர்க்க
நீங்கள் பேசும்போது உங்களை உற்சாகமூட்டி மேலும் பேச வைப்பார். உங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் தவறான புரிதல்களை களைய
விரும்புவார். விஷயங்களை மூடி மறைப்பதை விட காயப்பட்டாலும் பரவாயில்லை என அதுகுறித்து பேசி உங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்த முன்வருவார்.
12.உங்களுக்கு உதவிட
உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவற்றைத் தீர்த்திட முன்வருவார். கடினமான காலகட்டத்தில் அவர் இருந்தாலும் உங்களுக்கு உதவிட அவர் தயங்க மாட்டார்.
13.உங்கள் கருத்தை
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்களைப் பாதிக்கும் விஷயங்களில் உங்கள் கருத்தினை அறிந்திட அவர் முன்வருவார்.
14.ஸாரி சொல்ல
ஏதேனும் ஒரு விஷயத்தில் உங்களை காயப்படுத்தி இருந்தால் அல்லது சண்டைகளின் போது அவர்மீது தவறு இருந்தால் உங்களிடம் ஸாரி கேட்டிட
அவர் ஒருபோதும் தயங்க மாட்டார்.
15.சண்டைகளின் போது
உங்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படும்போது அவர் உங்களை அப்படியே தூங்கிவிட அனுமதிக்க மாட்டார். அந்த சண்டை குறித்து ஒரு
முடிவு அல்லது அதுகுறித்த தவறான புரிதல்களை களைய விரும்புவார்.
16.பாஸ்வேர்ட்
அவர் தனது சமூக வலைதளங்கள், மெயில்கள் மற்றும் மொபைல் குறித்த பாஸ்வேர்டுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.(இது கொஞ்சம் கஷ்டம்
தான்)
17.நேர்மையாக
நீங்கள் சங்கடமாக உணரக்கூடிய விஷயங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புவார். வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் நல்ல உறவிற்கு
அடித்தளம் என்பதை அவர் உணர்ந்திருப்பார்.
18.அவரது எதிர்காலத்திட்டங்கள்
அவரது எதிர்காலத்திட்டங்கள் அனைத்திலும் நீங்கள் இருப்பீர்கள். தனது எதிர்காலம் குறித்து பேசும்போது உங்களையும் இணைத்து நாங்கள் என்றே குறிப்பிடுவார். நீங்கள் அவருடன் கூட இருக்க விரும்புவீர்கள் என நம்புவார். எதிர்காலம் உங்களுக்காக ஒரு மாறுபட்ட சூழல்களை வைத்திருந்தால் அவற்றை சரிசெய்ய ஒரு வழியைக் கண்டறிவார்.
19.நோ பிஸி
உங்களுக்காக நேரம் செலவிடுவது அவருக்கு இயல்பாகவே வருகிறது. அவர் இன்னொரு அப்பாயிண்மெண்டில் இருந்தாலும் கூட உங்களுக்காக அவற்றை விட்டுவர ஒருமுறைக்கு இருமுறை யோசித்திட மாட்டார். உங்களுக்கு பிஸி என அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார்.
20.உங்கள் அனுமதி இல்லாமல்
உங்கள் அனுமதி இல்லாமல் அவர் உங்களை எடுத்துக்கொள்ள மாட்டார். இந்த உணர்வு சில மாதங்களுக்கு பின்னரும் கூட மாறாது அப்படியே இருக்கும்.
21.முன்னுரிமை
அனைத்திலும் உங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். உதாரணமாக நீங்கள் > வேலை > நண்பர்கள் > வீடியோ கேம்ஸ் > இன்ஸ்டாகிராம் இந்த வகையில் உங்களுக்கான முன்னுரிமை இருக்கக்கூடும்.
22.குட் மார்னிங்
காதலிக்கும் போது அவர் உங்களுக்கு தினசரி குட்மார்னிங் மெசேஜ்களை அனுப்பிட தயங்க மாட்டார். சண்டை வந்தாலும் கூட இந்த பண்பு மாறாது.
23.ஷாப்பிங்கை வெறுத்தாலும்
அவர் ஷாப்பிங் போவதை வெறுத்தாலும் கூட உங்களுக்காக ஷாப்பிங் வருவதை அவர் விரும்புவார். உங்களுக்கு முன்னால் தயாராகி உங்களுடன் ஷாப்பிங் செல்ல காத்திருப்பார்.
24.ஆழமான உரையாடல்கள்
உங்களுடனான ஆழமான உரையாடல்களை அவர் விரும்புவார். அது நேற்று பார்த்த படமாக இருக்கலாம் அல்லது உங்கள் எதிர்காலம் குறித்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் எங்கேயும்,எப்போதும் அவர் உங்களுடன் பேசுவதை கம்பர்டபிளாக உணர்வார். உங்களுக்கும் இதுபோல தோன்றினால் அது ஒரு நல்ல விஷயம் தான்.
25.மொபைலை விட
அவர் உங்களுடன் இருக்கும் தருணங்களில் உங்களுக்கே அதிக முக்கியத்துவம் தர விரும்புவார். அந்த நேரங்களில் அவரது மொபைல் பாக்கெட்டில் அல்லது டேபிள் ஓரத்தில் இருக்கும்.
26.கடந்த காதல்
அவரது கடந்தகால காதல் குறித்து உங்களிடம் தெரியப்படுத்துவார். உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியுடனும்,
மனசாட்சியுடனும் உங்கள் உறவினைத் தொடர்வார்.
27.சும்மா இருந்தால்
வேலை எதுவுமின்றி இருக்கும்போது உங்களுக்கு தான் அவர் முதலில் கால் செய்வார். ஒருவேளை நீங்கள் அவரது காலை அட்டெண்ட் செய்யாமல்
விட்டாலும் உங்களிடம் அதுகுறித்து புகார் தெரிவிக்க மாட்டார்.
28.வாக்குறுதியை காப்பாற்றுவார்
அவர் உங்களிடம் சொன்ன வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார். உங்களிடம் எங்காவது வெளியில் செல்லலாம் என கூறி
இருந்தாலோ அல்லது வேறு எதுவும் வாக்குறுதி அளித்திருந்தாலோ அதனைக் காப்பாற்ற முன்வருவார்.
29.உங்களுக்காக சமைப்பது
சில நேரங்களில் உங்களுக்குப் பிடித்த ஒரு டிஷ் அல்லது பாஸ்தா என ஏதாவது ஒன்றினை சமைத்து உங்களைக் கவர்ந்திட முயல்வார்.
30.உங்களை அணைக்காமல்
நீங்கள் சந்தித்து வீடு திரும்பும்போது ஒரு முத்தமோ, அணைப்போ இன்றி உங்களை அனுப்ப மாட்டார். உங்களை கட்டிப்பிடித்து அணைக்காவிடில்
அந்தநாள் முடிவடையாமல் போனது போல உணர்வார்.
31.முத்தமிட
பொது இடத்தில் வைத்து உங்களவர் உங்களை முத்தமிட விரும்ப மாட்டார். அவர் உங்களை முத்தமிட ஒரு சரியான தருணத்தை எதிர்நோக்கி
காத்திருப்பார். படத்தில் வருவதுபோல இருந்தாலும் உண்மை இதுதான்.
32.மரியாதை அவசியம்
எந்த உறவாக இருந்தாலும் மரியாதை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர் எப்போதும் உங்களை மதிக்காதவராக, உங்கள் பேச்சை
கேட்காதவராக, உங்களை தவிர்ப்பவராக இருக்க மாட்டார்.
33.நம்பிக்கை
அவர் எப்போதும் உங்களையும் உங்கள் உணர்வுகளையும் மதிக்கக்கூடிய ஒருவராக இருப்பார். எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பார். சரி
எது தவறு எது? என்பது உங்களுக்கு தெரியும் என்பதை உணர்ந்தவராக இருப்பார். உங்களுக்கு தேவையான இடைவெளியும், சுதந்திரமும் அவரிடம்
இருந்து உங்களுக்கு கிடைக்கும்.
34.இரண்டாவது வாய்ப்புகளுக்கு
ஒரு நீண்ட உறவை உங்களவர் விரும்புகிறார் எனில் அவர் குறித்த இரண்டாவது நோக்கம் மற்றும் உணர்வுகளை புறந்தள்ளுங்கள். அப்போது தான் நீங்கள் ஒரு நீண்டகால உறவு வேண்டும் என உறுதியாக நினைக்க முடியும்.
35.உங்களைப்பற்றி சிறப்பாக
உங்களைப்பற்றி நீங்கள் உயர்வாக எண்ணும்படி உங்களை நினைக்க வைப்பார். உங்களை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார்.
36.மற்றொரு டேட்டிங்
உங்களுடன் மற்றுமொரு டேட்டிங் செல்ல விரும்புவார். முதன்முறை நீங்கள் டேட்டிங் செல்லும்போது உங்கள் இருவருக்கும் இடையில் ஒரு
அந்நியத்தன்மை, இந்த உறவு நீடிக்குமா? என்னும் கவலை இருந்திருக்கும். மறுமுறை அவர் உங்களை டேட்டிங் கூட்டி செல்லும்போது உங்கள்
இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் வந்திருக்கும்.
37.அவரது பாராட்டுக்கள்
அவரது பாராட்டுக்கள் உங்கள் உடலைப் பற்றியதாக இருக்காது. உங்களது வேலையில் நீங்கள் நேர்மையாக இருப்பது, உங்களவரை சுலபமாக சிரிக்க
வைப்பது என்பது போன்ற விஷயங்கள் அதில் அடங்கி இருக்கும்.
38.மறைக்க மாட்டார்
நீங்கள் இல்லாத தருணங்களில் உங்களைப் பார்க்க முடியாமல் அவர் தவித்தது, நீங்கள் அருகில் இல்லாத நேரங்களில் உங்களை எவ்வாறு மிஸ்
செய்கிறார்? போன்ற விஷயங்களை உங்களிடம் இருந்து அவர் மறைக்க மாட்டார்.
39.உங்கள் பாதுகாப்பை
உங்கள் பாதுகாப்பை விட வேறு எதுவும் அவருக்குப் பெரிதாகத் தோன்றாது. எங்காவது சென்றுவிட்டு இரவு நேரங்களில் நீங்கள் தனியாக வீடு
திரும்பும்போது வீட்டிற்கு சென்று நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பார். ஒருநாள் நீங்கள் அவ்வாறு செய்யாவிடினும் மறுமுறை
அவரது பேச்சில் அது வெளிப்பட்டு விடும்.
40.உங்கள் டேட்டிங்
அவர் கடந்த கால காதல் குறித்து உங்களிடம் பேசும்போது உங்களது கடந்தகால டேட்டிங் குறித்து அறிந்து கொள்ளவும் அவர் ஆர்வம் காட்டுவார்.
இல்லையெனில் அதற்கான தருணம் வரும்வரையில் காத்திருப்பார்.
41.சமூக வலைதளங்களில்
நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். இதன் மூலம் உலகத்துக்கு உங்கள் காதலை வெளிச்சம் போட்டுக்காட்டுவார். இது உண்மையில் ஒரு தீவிரமான உறவில் நீங்கள் இருப்பதைக் குறிக்கும்.
42.வீட்டு சாவி
அவர் வீட்டின் சாவியை உங்களிடம் கொடுத்து வைப்பார். இதன் வழியாக உங்கள் காதலை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல அவர் தயாராக இருப்பார்.
43.அதிக நேரம்
உங்களுடன் எப்போதுமே அதிக நேரம் செலவிட விரும்புவார். உங்களுடன் செலவிடும் நேரமானது குவாலிட்டி&குவாண்டிட்டி ஆக இருக்க வேண்டும் என நினைப்பார்.
44.வாழ்க்கை இலட்சியங்கள்
தனது வாழ்க்கை லட்சியங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எப்போதும் விரும்புவார். அதேபோல உங்கள் லட்சியம் மற்றும் அதுகுறித்த விவரங்களையும் ஆர்வமுடன் கேட்பார்.
45.உங்கள் பிரச்சினை
உங்களது பிரச்சினைகளை எப்போதும் தன்னுடைய பிரச்சினைகளாகவே கருதுவார். அதுகுறித்த விவரங்களை கேட்டு அவற்றை விரைவாக தீர்க்க முயல்வார். ஏனெனில் நீங்கள் தனியாக கஷ்டப்படுவதை அவரால் தாங்க முடியாது.
46.அனைத்தையும் பகிர்ந்து
உங்களிடம் அன்றைய நாளில் என்ன நடந்தது? என்று அதுகுறித்த முழுவிவரங்களையும் பகிர்ந்து கொள்வார். அதேபோல நீங்களும் உங்களது அன்றைய நாளில் என்ன நடந்தது? என பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்.
47.சற்றே பொறாமை
பொறாமை என்றவுடன் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம். இதற்கு ஏறத்தாழ அக்கறை என்று பொருள். அவர் பாதுகாப்பற்று உணரும் தருணங்களில் உங்களுடன் அதுகுறித்து பேசி அந்த குழப்பங்களில் இருந்து குதித்து வெளிவர முயன்றிடுவார்.
48. உங்களை இம்ப்ரெஸ்
உங்களை இம்ப்ரெஸ் செய்ய எப்போதுமே முயற்சி செய்வார். அதற்காக புதிய விஷயங்களை கையாளுவார். அது வேடிக்கையாக இருப்பதுடன் உங்கள் உறவை உயிரோட்டமாக வைத்திருப்பதற்கும் உதவிடும். அதற்காக மிகவும் சுவாரசியமான விஷயங்களை அவர் எப்போதுமே முயன்றிடுவார்.
49. உங்களுக்கும் சேர்த்து
அவர் எப்போதுமே பேசும்போதோ அல்லது சிந்திக்கும்போதோ நமக்காக, எங்களுக்கு என்று உங்களையும் இணைத்து தான் சிந்திப்பார்/பேசுவார்.
50.இதுபோல உங்கள்
இதுபோன்ற ஒரு காதலன் உங்கள் வாழ்வில் இருந்தால்? இதில் உள்ளதுபோல அவர் ஏற்கனவே உங்களிடம் நடந்து கொண்டால்? ஏன்
காத்திருக்கிறீர்கள்? உடனே சென்று அவரைக் கட்டிக்கொள்ளுங்கள். அவர் உங்களை என்றும் அன்பாக இருந்து காத்திடுவார்.
நீங்கள் ‘வாழ்நாள்’ முழுவதும் அவருக்கு ‘வேண்டும்’ என்பதற்கான அறிகுறிகள்!
Also read questions you need to ask a man if you want to know him better